கர்ப்பிணி பெண்கள் யோகா செய்யக்கூடாதா? யோகா தொடர்பான 5 பொதுவான கட்டுக்கதைகள் - உண்மை என்ன?

யோகா பற்றிய பல தவறான கருத்துக்கள் உள்ளன. ஆனால் உன்மை என்ன என்பதை இங்கு காணலாம்.
யோகா
யோகாTwitter
Published on

யோகா ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் நல்லது.

இது உங்கள் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன நலனை நிர்வகிக்க உதவுகிறது.

யோகா பற்றிய பல தவறான கருத்துக்கள் உள்ளன. ஆனால் உன்மை என்ன என்பதை இங்கு காணலாம்.

யோகா
Health: பிரஷ் பண்ணும்போது இந்த விஷயங்களை கவனத்தில் வையுங்கள்!

பெண்களுக்கு மட்டும் தான் யோகா?

எந்தவொரு பாலினத்துடனும் ஒரு குறிப்பிட்ட உடல் செயல்பாடுகளை இணைப்பது தவறானது. யோகாவும் அப்படித்தான். யோகாவை யார் வேண்டுமானாலும் தங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்க்கலாம்.

யோகா செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை நாம் ஆராய்ந்தால், ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அனைவரும் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் இருக்க உதவுகிறது.

யோகா மெல்லிய உடல் உள்ளவர்களுக்கு?

யோகா மெலிந்தவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உடலமைப்பு கொண்டவர்களும் இதனை செய்யலாம்

சமூக வலைதளங்களை நோக்கி கொடுக்கப்படும் பயிற்சிகளை பார்த்த பிறகு இந்த வகையான ஒர்க் அவுட்டைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு பெரும் சவாலாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அதைச் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

யோகா ஒரு மதம் சார்ந்தது?

பலர் யோகாவினை ஒரு ஆன்மீக செயல் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. கண்ணை மூடி மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தும் இந்த யோகா பலரது பார்வையில் ஆன்மீகமாக தென்படுகிறது.

ஆனால் உண்மையில் ஆரோக்கியம் தருவதற்கான ஒரு வழி தான் யோகா.

யோகா
Health: மதிய உணவுக்கு பின் ஸ்வீட் சாப்பிடுபவரா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு

கால்களை நீட்டுவது தானே யோகா?

யோகா என்றால் பலரின் பார்வையில் கால் கைகளில் நீட்டி உடற்பயிற்சி செய்வது என்று நினைக்கின்றனர் ஆனால் உண்மையில் யோகா அதிகப்படியான ஆரோக்கியத்திற்கு நன்மை பயித்துக் கொண்டிருக்கின்றது.

இது பல நிரூபிக்கப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் தசை வலியைக் குறைப்பதிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவைப்படும் இயக்க வரம்பை அதிகரிப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல்லது கர்ப்பமாக இருக்கும்போது இதை செய்யக்கூடாது

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அல்லது மாதவிடாய் காலத்தில் யோகா செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் மருத்துவ ரீதியாக இரண்டு தகவல்களிலும் எந்த உண்மையும் இல்லை. இரண்டு நிலைகளிலும் யோகா நல்லது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் இதனை செய்யலாம்

யோகா
Health: சருமம் பளபளப்பாக இருக்க வேதிப் பொருட்கள் தான் வழியா? - இயற்கை மாற்றுகள் இதோ!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com