தினம் ஒரு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் | எந்தெந்த நோய்களுக்கு எதைச் சாப்பிடலாம்?

தினம் ஒரு டாக்டர் நமக்கு நன்மை செய்தால் உடல் எப்படி இருக்கும்? நிச்சயம் ஆரோக்கியமாகவே இருப்போம். அதுபோலத்தான், தினம் ஒரு கீரை நம்மை நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
கீரைகள்

கீரைகள்

Facebook

Published on

ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு ‘ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்’ என்று சொல்லலாம். நமக்குச் சுலபமாகக் கிடைக்கின்ற உணவுகளில், கீரைகளுக்கு முதல் இடம். விலையும் மலிவுதான். நிறைய சத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. பயன்பெறலாமே… தினமும் ஒரு வகைக் கீரைகளோடு… எந்தெந்த கீரைகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? எந்தெந்த உடல் தொந்தரவுகளைத் தீர்க்கின்றன எனப் பார்க்கலாம்.

தண்டுக்கீரை

தண்டுக்கீரை

Twitter

தண்டுக்கீரை

ஆறு மாதங்கள் வரை வளரக்கூடியது. தண்டுகள் நார் இல்லாமலும் இளசாகவும் சாப்பிட சுவையாகவும் இருக்கும். ஏ,சி விட்டமின்கள், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் உள்ளன. சிறுநீர் பிரச்சனைகளைத் தீர்க்கும். பித்தத்தை அகற்றும். வயிற்றுக்கடுப்பு நீக்கும். வெப்பத்தைத் தணிக்கும். மலச்சிக்கலைச் சரியாக்கும். ரத்தத்தில் கொலஸ்டிரால் இருப்பவர்கள், வாரம் மூன்று முறை சாப்பிட்டு வரலாம். உடல்பருமன் உள்ளவரை இளைக்க வைக்கும்.

அரைக்கீரை

அரைக்கீரை

Facebook

அரைக்கீரை

இந்தக் கீரையின் மேல்புறம் பச்சை நிறமாகவும் அடிப்பாகம் இளம் செந்நிறத்தோடும் காணப்படும். இலையின் காம்பும் செந்நிறமாக இருக்கும். பசியைத் தூண்டும். காய்ச்சல், நடுக்கம், ஜன்னி, கபரோகம், வாதநோய் நீங்கும். பிரசவித்த பெண்களுக்குச் சீதளம் வராமல் பாதுகாக்கும். தாய்ப்பால் சுரக்க உதவும். வாதம், வாய்வு வலிகள் நீங்கும். நரம்பு தொடர்பான நோய்களைப் போக்கும். மலமிளக்கியாகவும் திகழும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

முளைக்கீரை

முளைக்கீரை

Twitter

முளைக்கீரை

45 நாட்கள் வளரக்கூடியது. உடல் சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகியவை நீங்கும். கண்களும் குளிர்ச்சியடையும். சொறி, சிரங்கு நோய்கள் குணமாக அடிக்கடி சாப்பிடவும். வெப்ப சுரத்தைத் தணிக்கும். உடல் அழகை மெருகேற்றும். தோல் மினுமினுப்பாகும்.

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரை

Twitter

முருங்கைக்கீரை

கண் தொடர்பான நோய்கள் நீங்கும். பார்வை தெளிவடையும். தாது புஷ்டி உண்டாகும். உடல் அழகாகும். கடுமையான சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். மாலைக் கண் நோயாளிகள் அடிக்கடி சாப்பிடவும். ஆண்களுக்கு ஆண்மை பலம் அளிக்கும். சுக்கில விருத்தியும் உண்டாகும். இதற்கு 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். தாய்ப்பால் சுரக்க உதவும். கர்ப்பிணி பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும். வயிற்று உப்புசம் குணமாகும். சூதக வயிற்று வலி நீங்கும்.

சிறுகீரை

சிறுகீரை

Facebook

சிறுகீரை

இரும்புச்சத்து அதிகம். வாத நோயை நீக்கும். இந்தக் கீரை கல்லீரலுக்கு நன்மை செய்கிறது. பித்த சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும். நஞ்சு முறிவாகப் பயன்படுகிறது. சிறுநீரகக் குறைபாடுகளை நீக்கும்.

அகத்திக்கீரை

அகத்திக்கீரை

Twitter

அகத்திக்கீரை

வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்களைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். வயிற்றுப்பூச்சிகள் இருப்போர் வாரம் 3 முறை சாப்பிடவும். புகையிலை பிடிப்போரின் நிக்கோட்டின் நஞ்சை நீக்க உதவும். நீரடைப்பை நீக்கும். மலமிளக்கியாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். பார்வைத் தெளிவாகும். பித்த சூட்டைத் தணிக்கும். மது குடிப்பவர்கள் இக்கீரையைத் தவிர்க்கவும்.

பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி

Facebook

பொன்னாங்கண்ணி

தொடர்ந்து இக்கீரையைச் சாப்பிட்டால் கண்ணாடி போட வேண்டிய தேவை இருக்காது. கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்களில் நீர் வழிதல் குணமாகும். மேனி அழகையும் பராமரிக்கும். மூலம், குதிகால் வாதம் சரியாகும். வெள்ளைப்படுதல் சரியாகும்.

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி

Twitter

கரிசலாங்கண்ணி

உடலை தங்கம் போல ஆக்கும். கரிசல் என்றால் தங்கம். கண் பார்வை தெளிவாகும். மண்ணீரலின் வீக்கம் சரியாகும். தோல் நோய்கள் சரியாகும். ரத்தம் பெருகும். உடல் இளமை பெறும். கண் கோளாறுகள் நீங்கும்.

வெந்தயக்கீரை

வெந்தயக்கீரை

Facebook

வெந்தயக்கீரை

செரிமான சக்தி மேம்படும். சொறி, சிரங்கு நீங்கும். இடுப்பு வலி இருப்பவர்கள், சாப்பிடுவது நல்லது. சர்க்கரை அளவைக் கட்டுபடுத்தும். உடலுக்கு வலிமைத் தரும். சிறுநீர் உறுப்புகளைச் சுத்தம் செய்யும். மூளை நரம்புகளைப் பலப்படுத்தும்.

பருப்புக்கீரை

பருப்புக்கீரை

Twitter

பருப்புக்கீரை

கல்லீரல் நோய்கள் தீரும். கல்லீரல் மரத்தல், கல்லீரல் புண், கல்லீரல் பெருத்தல் போன்ற நோய்கள் சரியாகும். மண்ணீரல் நோய்கள் நீங்கும். சிறுநீர் எரிச்சல் சரியாகும். வெள்ளைப்படுதலுக்கு மருந்தாகும். மூல நோயாளிகள், சாப்பிட வேண்டும் மலம் எளிமையாக வலியில்லாமல் வெளியேறும்.

மணத்தக்காளி

மணத்தக்காளி

Facebook

மணத்தக்காளி

கத்திரிச்செடி இனத்தைச் சேர்ந்தது. வயிற்றுப்புண், வாய்ப்புண், குடல் புண் சரியாகும். மூலநோயைக் குணப்படுத்தும். மலம் கழிக்கையில் எரிச்சல் சரியாகும். கருப்பை நோய்களுக்கும் நல்லது. கருச்சிதைவு, மலட்டுத்தன்மை குணமாக்கும். மாதவிடாய் கோளாறுகள் சீராகும்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

Facebook

பசலைக்கீரை

ரத்தவிருத்தியை உண்டாக்கும். மலத்தை இளக்கும். மலச்சிக்கல் வராது. பித்தம், வெட்டை நோய்கள், தோல் நோய்கள் சரியாகும். கர்ப்பிணி பெண்கள், சாப்பிட வேண்டிய கீரை இது.

புளிச்சைக்கீரை

புளிச்சைக்கீரை

Twitter

புளிச்சைக்கீரை

குடல் புண் ஆறும். சிறுநீரைப் பெருக்கின்றது. மலம் எளிதாகக் கழியும். வலி, வாயு, வாதம் நீங்கும். ரத்த அழுத்தமும் குறையும். வயிற்று வலி சரியாகும். சொறி, சிரங்கு சரியாகும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை

Twitter

கறிவேப்பிலை

விட்டமின் ஏ மிக அதிகம். பசியைத் தூண்டும். பித்தத்தைக் குறைக்கும். மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். குமட்டல், சீதபேதி உள்ளவர்களுக்கு நல்லது. பித்த தொந்தரவுகளை நீக்கும். பசியற்ற நிலை நீங்கும். முடி நரைக்காமல் இருக்க உதவும். கண் பார்வை சரியாகும். இளமையாகப் பொலிவுடன் இருக்க வைக்கும்.

கொத்துமல்லிக்கீரை

கொத்துமல்லிக்கீரை

Facebook

கொத்துமல்லிக்கீரை

பித்தம் சம்பந்தமான நோய்கள் சரியாகும். பசியைத் தூண்டும். வாந்தி, வயிற்று வலி, வயிற்று மந்தம் குணமாகும். ரத்தம் சுத்தமாகும். சீரக சக்தியும் பசியும் அதிகரிக்கும்.

கேரட் கீரை

கேரட் கீரை

Twitter

கேரட் கீரை

மூட்டுகளை ஆரோக்கியமாக்கும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். மகப்பேற்றிற்குப் பின்னர், பெண்களின் கருப்பையைச் சுருங்கச் செய்யும். வயிற்றுப் புண்கள் ஆறும். பார்வை தெளிவாகும். தோல் நிறம் பொலிவு பெறும்.

பீட்ரூட் கீரை

பீட்ரூட் கீரை

Facebook

பீட்ரூட் கீரை

சிறுநீரை பெருக்கி மிதமாக வெளியேற செய்யும். மலத்தை இளக்கும். கல்லீரலைப் பலப்படுத்தும். கண்களுக்குக் குளிர்ச்சி என்பதால் பார்வை தெளிவாகும். கண் வீக்கம் குறையும்.

முள்ளங்கி கீரை

முள்ளங்கி கீரை

Twitter

முள்ளங்கி கீரை

விட்டமின் ஏ, இரும்புச்சத்து உள்ளன. நுண்ணுயிர்க் கொல்லி மருந்தாகப் பயன்படும். உடல் சூட்டால் ஏற்படும் எரிச்சல் தீரும். பசியைத் தூண்டும். செரிமானம் சீராகும். சிறுநீரடைப்பு நீங்கும். மலத்தை இளக்கும். வாத நோய்கள் தீரும்.

புதினா

புதினா

Facebook

புதினா

வாய் துர்நாற்றம் நீங்கும். ரத்தம் சுத்தமாகும். பசி தூண்டப்படும். மாதவிலக்குப் பிரச்சனைகள் தீரும். ஆண்மைக் குறைவை நீக்கும். ஊளைச் சதையைக் குறைக்கும். வயிற்றுப் புழுக்களை நீக்கும். ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கும். பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களைப் போக்கும்.

வல்லாரைக்கீரை

வல்லாரைக்கீரை

Twitter

வல்லாரைக்கீரை

இதனுடன் புளி சேர்த்தால் இதன் மருத்துவக் குணம் கெடும். உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சளாகப் போதல், மலச்சிக்கல் சரியாகும். வலிப்பு, காய்ச்சல் சரியாகும். இதய நோயாளிகள் சாப்பிட வேண்டும். ஞாபக சக்தி கிடைக்கும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com