சொரியாஸிஸ் பரவாது: எதைச் செய்யலாம்? எதை தவிர்க்கலாம்?

சொரியாஸிஸ் - பயங்கரமான நோயாக மக்களிடம் சித்தரிக்கப்பட்டு வருகிறது. சொரியாஸிஸ் வந்தவருக்கு வீடு கொடுக்க கூடாது. அவர்களைத் தொட கூடாது போன்ற பல தவறான நம்பிக்கைகள் இன்றளவிலும் மக்களிடம் நிலவி வருகிறது.
சொரியாஸிஸ்

சொரியாஸிஸ்

Twitter

Published on

சொரியாஸிஸ் - பயங்கரமான நோயாக மக்களிடம் சித்தரிக்கப்பட்டு வருகிறது. சொரியாஸிஸ் வந்தவருக்கு வீடு கொடுக்க கூடாது. அவர்களைத் தொட கூடாது போன்ற பல தவறான நம்பிக்கைகள் இன்றளவிலும் மக்களிடம் நிலவி வருகிறது. உண்மையில், சொரியாஸிஸ் தொற்று நோயே அல்ல. சொரியாஸிஸ் பாதிப்பவரை தொட்டாலோ அவரிடம் பழகினாலோ யாருக்கும் இந்நோய் பரவாது. மேலும், அலோபதி மருத்துவர்கள் இந்நோயை குணப்படுத்த முடியாது என்று சொல்கின்றனர். சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் போன்ற மற்ற மரபு வழி மருத்துவ முறைகளில் சொரியாஸிஸ் நோயை சுலபமாகக் குணப்படுத்திவிடலாம். மீண்டும் வராமல் செய்யவும் முடியும்.

‘சொரியாஸிஸ்’ என்பது ஆங்கிலப் பெயர். இதைத் தமிழில் ‘காளாஞ்சக படை’ என்றும் ‘செதில் படை’ என்றும் சொல்வார்கள். பலருக்கும் தமிழ் பெயர் தெரியாததால் சொரியாஸிஸ் என்ற பெயரே, பொதுப் பெயராக மாறிவிட்டது. சொரியாஸிஸ் வந்தவர்களில் சிலர், இந்நோயை குணப்படுத்த முடியாது என்றும் சமூகத்தில் தான் அடையாளப்படுத்திகொள்ள வெட்கப்பட்டுகொண்டும் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்ளும் சதவிகிதம் அதிகரித்து வருகிறது. கட்டாயமாக, இந்த ‘செதில் படை’ பிரச்சனையை நம் மரபு வழி மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடியும் என்பதே உண்மை.

வாழ்நாள் முழுவதும் மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. சித்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமாகிவிட்ட பிறகு மருந்துகளை உட்கொள்ளத் தேவையில்லை. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப சில காலங்கள் வரை மருந்துகளை உட்கொள்ளலாம். இயற்கை மருத்துவம், மரபு வழி அக்குபஞ்சர் மருத்துவம் ஆகியவற்றில் மருந்துகளே இல்லாமல் குணப்படுத்தும் சிறந்த மருத்துவர்களும் உண்டு. ஆகவே, அலோபதி சொல்வதை மட்டும் நம்பி யாரும் வாழ்நாள் முழுக்க மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று பயப்பட வேண்டாம்.

Auto Immune Disease

Auto Immune Disease

Twitter

சொரியாஸிஸ் ஏன் வருகிறது?

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் உண்டாகிறது. இதை ‘சுயபகை நோய்’ என்பார்கள். அதாவது, Auto Immune Disease.

மிக அதிகமான மனஅழுத்தம் இருப்பவர்களுக்கு இப்பிரச்சனை வருகிறது.

பரபரப்பான சூழ்நிலையில் மனஅழுத்தத்துடன் இருப்பவர்களுக்கும் வருகிறது.

ஒரு ஊர் விட்டு இன்னொரு ஊர் அல்லது வேறு நாடுகளுக்குச் சென்றவர், மனஅழுத்தத்தில் அதிகமாக இருப்போருக்கு வருகிறது. இதுபோன்ற உதாரணங்களில் தற்போது அதிகம் பேர் சிகிச்சை வருவதாக மருத்துவர்கள் சொல்கின்றனர்.

சிலருக்கு, அசைவ கடல் உணவுகள், கரப்பான் உணவுகள் இப்பிரச்சனையைத் தீவிரப்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.

ஏன் இந்த நோய் வருகிறது எனக் குறிப்பிட்டு, பட்டியலிட்டுக் காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. மேற்சொன்ன சில காரணங்கள், இதுவரை பாதித்த நோயாளிகளை ஒப்பிட்டு கணக்கிட்டது மட்டுமே.

சொரியாஸிஸ்

கனவுகள் மரணத்தை எப்படி அறிவிக்கும்? கனவு மூலம் புரிந்துகொள்ள வேண்டியவை

சொரியாஸிஸ்

சொரியாஸிஸ்

Facebook

தொற்றுமா? மரப்பணு நோயா?

சொரியாஸிஸ் தொற்று நோய் அல்ல. இது பரவாது.

மரபணு சார்ந்த பாரம்பரிய நோய் என்பதற்குச் சான்றுகளும் இல்லை.

ஆனால், சில நோயாளிகளை வைத்துக் கணித்த போது ரத்த உறவுகளில் இப்பிரச்சனை தொடர்கிறது என்பது சில மருத்துவர்களின் அனுபவ உண்மை. இது அறிவியல் உண்மை கிடையாது.

தமிழ் மருத்துவங்கள்

தமிழ் மருத்துவங்கள்

Facebook

எவ்வளவு காலத்தில் குணமாகும் ?

சொரியாஸிஸ் நம் தமிழ் மருத்துவங்கள், மரபு வழி மருத்துவமுறைகளில் முற்றிலுமாகக் குணமாக்க முடியும். மருந்துகள் சாப்பிடும் முறை மருத்துவத்தில், நோயாளிகளின் உடல்நிலைக்கு ஏற்ப காலம் ஆகும். மருந்துகளே இல்லாத நம் மரபு வழி மருத்துவ முறைகளிலும், மருத்துவர் சொல்லும் வாழ்வியல் மற்றும் உணவுப்பழக்கத்தை மேற்கொண்டு வர, நோயாளியின் உடல்நிலைக்குத் தகுந்தாற்போல விரைவில் குணமாகும்.

பல ஆண்டுகள் முற்றிய நோயோ, சருமத்தின் நிறமும் அமைப்பும் மாறி, தடித்துக் கருத்து இருந்தாலும், முண்டு முண்டாகக் கருத்து அல்லது பழுப்பு நிறத்தில் வாரி இறைத்ததைப் போல் தலை முதல் உடல் முழுக்கப் பரவி இருந்தாலும், தோல் தடித்துபோய் நிறம் மாறி வெடிப்புகளோடும் புண்களோடும் இருந்தாலும், செதில் செதிலாகப் பெயர்ந்து இருந்தாலும் இந்த சொரியாஸிஸ் பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த முடியும். அதுவும் நம் மரபு வழி மருத்துவ முறைகளால் மட்டுமே…

சிலருக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்ட மாதத்திலே குணமாவது தெரியும். சிலருக்கு 6 மாதத்துக்குள் குணமாகிவிடும். வெகு சிலருக்கு ஒர் ஆண்டுக்குள் குணமாகும். இப்பிரச்சனை குணமாகி வருவதை நோயாளி தன் கண்களால் பார்க்க முடியும்.

சருமத்தில், சொரியாஸிஸ் இருந்த தடயமே இல்லாத அளவுக்குப் புறத்தோல் நிறத்திலும், அமைப்பிலும் முழுவதும் இயல்புநிலைக்குத் திரும்பும் வரையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

doctor advise

doctor advise

Twitter

முக்கியமான தொடர்பு

சொரியாஸிஸ் பிரச்சனைக்கும் உணவுக்கும் மனநிலைக்கும் தொடர்பு உண்டு. ஆம், உணவுகளுக்கும் உண்டு; நம் மனநிலைக்கும் தொடர்பு உண்டு. எனவே, சிகிச்சை எடுப்பவர்கள், கட்டாயம் மருத்துவர் சொல்வதை 100% நம்பிக்கையுடன் பின்பற்ற வேண்டும். உணவு கட்டுபாடுகளும் மிக முக்கியம். நம் மனதை லேசாக்கி ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை வாழ்வதும் முக்கியம்.

மனத்தொடர்பான கழிவுகள்

மனத்தொடர்பான கழிவுகள்

Twitter

இரு வகைக் கழிவுகள்

உடலில் கழிவுகள் சேர்வதால்தான் நோய்கள் உருவாகின்றன. சருமத்தில் பிரச்சனை வந்தால், உடலில் கழிவுகள் அதிகம் உள்ளன என்பது அர்த்தம். குறிப்பாக, வயிற்றிலும் மனதிலும் கழிவுகள் உள்ளன. வயிற்றில் சரி அது என்ன மனதில்? ஆம். மனம் தூய்மையாக இல்லை. எண்ணங்கள், சிந்தனைகள், கவலை, துக்கம் போன்ற நிறைய மனத்தொடர்பான கழிவுகளும் இப்பிரச்சனைக்குக் காரணம்.

சாப்பிட கூடாதவை

சாப்பிட கூடாதவை

Facebook

சாப்பிட கூடாதவை

எல்லா வகை அசைவ உணவுகளும் சாப்பிட கூடாது. முட்டை உட்பட… கேக், பிரெட் போன்ற பேக்கரி உணவுகளிலும் முட்டை சேர்க்கப்படுகிறது. இவற்றையும் சேர்த்தே தவிர்க்க வேண்டும்.

கத்திரிக்காய், பாகற்காய், அகத்திக்கீரை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஐஸ்கிரீம், கேக், குளிர்பானங்கள், பாக்கெட் உணவுகள் ஆகியவையும் உண்ண கூடாது.

நிலக்கடலை, தட்டைப்பயறு, மொச்சை, கொள்ளு, காராமணி, பெரும்பயறு, பரங்கிக்காய் உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.

பசித்துப் புசி

பசித்துப் புசி

Twitter

செய்ய வேண்டியவை

பசித்துப் புசி என்ற பழமொழி உண்டு. இதுதான் உலகில் உள்ள எல்லா உயிரினத்துக்கும் உள்ள பொது விதிமுறை. ஆனால், மனிதன் மட்டும் இதைப் பின்பற்றுவதில்லை. மற்ற உயிரினங்கள் பின்பற்றுகின்றன. பசித்த பிறகு உண்ணும் உணவுகளே சீராகச் செரித்து, சத்துகள் உட்கிரகிக்கப்பட்டு, கழிவுகள் முழுமையாக வெளியேறி, உடலானது கழிவுகளின்றி ஆரோக்கியமாக வாழ வழி செய்யும். எனவே, பசித்த பிறகு சாப்பிட வேண்டியது முதல் விதிமுறை.

Doctor

Doctor

Twitter

மருத்துவர்கள் சொல்லும் உணவு முறையை மட்டும் பின்பற்ற வேண்டும்.

மலச்சிக்கலை ஏற்படுத்தும் உணவுவகைகளைத் தவிர்ப்பது நல்லது. காய்கறி, பழங்களைப் பெரும்பாலும் உண்ணலாம்.

மனம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தூங்காமல் இருப்போருக்கு சரும பிரச்சனைகள் பெரும்பாலும் வரும். இரவு தூக்கம் மிகவும் முக்கியம். அதுவும் இரவு 9.30 - காலை 5 மணிக்குள் தூங்கிவிடும் தூக்கமே, உடலுக்கு மிகவும் தேவையான தூக்கம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com