பிரியாணி பிடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் உணவும் அதிகப் பேரால் விரும்பப்படும் உணவு, பிரியாணி. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு சுவையில் பிரியாணியைத் தயாரிக்கிறார்கள். ஹைதரபத், லக்நவ், கொல்கத்தா, திண்டுக்கல், ஆம்புர், தலசேரி, மலபார், மெமோனி, சிந்தி எனச் சொல்லிக்கொண்டே போகலாம். உலகில் மொத்தம் 30 வகைக்கும் மேல் பிரியாணி வகைகள் உள்ளதாம். சிக்கன், மட்டன், மீன், இறால், முட்டை என எத்தனையோ வகைப் பிரியாணி இருக்கின்றன. பிரியாணி சுவைக்குக் காரணம் அதில் போடப்படும் மசாலாவும் இறைச்சியும் உணவுப் பொருட்களும்தான். ஆனால், இந்தப் பிரியாணி சாப்பிடும்போது சிலவற்றைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
பீசாவோடு கூல் டிரிங்க்ஸ் காம்போ கிடைக்கும். அந்தப் பழக்கத்தில் சிலர் பிரியாணி சாப்பிடும்போது சோடாவோ கூல் டிரிங்க்ஸோ குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். சமைக்கப்பட்ட சூடான திட உணவான பிரியாணியில், இறைச்சி, நெய், மசாலா சேர்த்த உணவை விழுங்கிக் கொண்டிருக்கும்போது, குளிர்ச்சியான, திரவ உணவை அதுவும் செயற்கையான பானத்தைச் சேர்த்துக் குடித்தால்… அரைத்து விழுங்கின பிரியாணியும் சோடா/கூல் டிரிங்க்ஸும் ஒன்றாகக் கலந்து செரிமானமாகாமல் கழிவாக வயிற்றுக்குள் நிரம்பும்.
கழிவு நிறைந்த குப்பைத் தொட்டியில் உள்ள உணவை நீங்கள் எப்படி எடுத்துச் சாப்பிட மாட்டீர்களோ… அதேபோல வயிற்றில் கழிவான பிரியாணி சோடா/கூல்டிரிங்க்ஸ் கழிவிலிருந்து ஒரு ஸ்பூன் சத்துகூட குடல் கிரகிக்காது. மொத்தமும் கழிவாகும்... உடல் பராமரிப்பு சக்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குப்பையான பிரியாணி கழிவைச் சுத்தம் செய்யும். இதற்குத் துணையாகக் கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், சிறுநீரகங்கள், சிறுகுடல் உதவி செய்யும். பின்னர்க் கழிவாகப் பெருங்குடலுக்குச் செல்லும்... சாப்பிட்ட பிரியாணியும் வேஸ்ட்… பணமும் வேஸ்ட்… அதைவிடச் செரிமான மண்டலமும் வயிறும் கழிவு மண்டலமும் பலம் இழந்து போயிருக்கும். மீண்டும் உடல் இயல்பு நிலைக்குத் திரும்ப 10 மணி நேரம் மேல் ஆகலாம். அவரவரின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பொறுத்து நேரமெடுக்கும்.
பிரியாணி சாப்பிடும்போது தாகம் எடுத்தால், இளஞ்சூடான நீரை 2 முறை சிப் செய்யலாம். திட உணவைத் தண்ணீரால் நீர்க்கச் செய்தால் வயிற்றால் உணவைச் செரிக்க முடியாது. குடிநீருக்கே இந்தக் கதி என்றால், கூல்டிரிங்க்ஸ்/சோடா குடித்தால் என்னவாகும் நம் வயிறு…
பிரியாணி உணவு, ஹெவியான அதிக மசாலா கொண்ட உணவு என்பதால், சோடாவும் கூல்டிரிங்க்ஸூம் எப்படிக் கெடுதியோ அதுபோல மில்க் ஷேக், ஐஸ்கிரீம், மோர் போன்றவையும் கெடுதிதான். வயிற்றில் செரிக்காமல் நீர்க்கச் செய்யும். பாலில் உள்ள லாக்டோஸ், அசைவத்தில் உள்ள சத்துக்களை உடல் கிரகிக்காமல் தடுத்துவிடும். சிக்கன்/ மட்டன் பிரியாணியில் உள்ள இறைச்சி துண்டுகளிலிருந்து தேவையான சத்துக்களை உடல் கிரகிக்காமல் பாலும் பால் பொருட்களும் தடுத்துவிடும்.
பிரியாணி சாப்பிடும் போதும் சரி.. சாப்பிட்ட பிறகுமே ஐஸ் வாட்டர் குடிக்கக் கூடாது. வயிற்றில் உள்ள சூடான வெப்ப தீ கரைந்துவிடும். செரிப்பதற்காக வயிற்றில் சுரந்திருக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை நீர்/ திரவ உணவுகள் கரைத்துவிடும். பின்னர் எந்த உணவும் செரிக்காமல் அப்படியே கழிவாகிவிடும்.
பழங்கள் நல்லவைதான். ஆனால், பிரியாணி போன்ற ஹெவியான உணவைச் செரித்துக்கொண்டிருக்கும்போது மேலே பழங்களும் வயிற்றுக்குள் சென்றால் முதலில் பழங்கள் செரிமானமாகும் பின்னர் ஆற்றல் குறைந்துவிட்ட நிலையில் பிரியாணியை முழுமையாக வயிற்றால் செரிக்க முடியாமல் போகும். பழங்களோ பழச்சாறுகளோ சாப்பிட வேண்டுமென்றால், பிரியாணி சாப்பிட்ட 6-7 மணி நேரம் கழித்துச் சாப்பிடலாம்.
சிலருக்கு எந்த உணவைச் சாப்பிட்டாலும் இறுதியில் தயிர் சாதம் சாப்பிடும் பழக்கம் உண்டு. இதனாலும் செரிமானம் நடைபெறாது. மேலும், தயிரில் உள்ள லாக்டோஸ், லாக்டிக் ஆகியவை இறைச்சியில் உள்ள சத்துகளைக் கிரகிக்க விடாமல் தடுக்கும்.
தாகம் எடுத்தால் கொஞ்சமாக இளஞ்சூடான நீர் பருகலாம். அல்லது பால் சேர்க்காத சூடான பிளாக் டீ, லெமன் டீ குடிக்கலாம். டீ எப்போதும் கொஞ்சமாகத்தான் கொடுப்பார்கள். அந்த அளவு தண்ணீர் போதுமானது. அதற்குமேல் நீர் குடிக்கக் கூடாது.
பிரியாணி சாப்பிட்டுச் செரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மேற்கொண்டு வேறு உணவைச் சாப்பிட வேண்டும் என நினைத்தால், 50 கிராம் அளவுக்கு ரசம் சாதம் சாப்பிடலாம். அல்லது 50ml ரசம் குடிக்கலாம். ஆனால், மோர் குடிக்கவே கூடாது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust