முடியை ஸ்ட்ரைட்னிங் செய்தால் கருப்பை புற்று நோய்க்கு வாய்ப்பு? எச்சரிக்கும் நிபுணர்கள்

பெண்களுக்கு புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் குறிப்பிட்ட இரசாயனங்களை அடையாளம் காணவும் கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Hair straightening
Hair straighteningTwitter
Published on

முடியை நேராக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே பெண்களுக்கு அழகு சார்ந்த பொருட்கள் மீதும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலும் அதிக ஆர்வம் இருக்கும்.

முன்பெல்லாம் அழகு நிலையங்களுக்கு சென்று தங்களை அழகுபடுத்திக் கொள்வர். ஆனால் தற்போது எல்லாம் தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டு வீட்டிலேயே அழகு படுத்திக் கொள்கின்றனர்.

அதில் ஒரு கருவியாக இருப்பது தான் ஹேர் ஸ்ட்ரைட்னர். அதாவது இது முடியை நேராக சீரமைக்க பயன்படுகிறது.

ஆனால் முடியை நேராக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மூலம் பெண்களுக்கு கருப்பை புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பெண்கள் பயன்படுத்தும் பிராண்ட் அல்லது பொருட்கள் பற்றிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் சேகரிக்கவில்லை என்றாலும், பார்பென்ஸ், பிஸ்பெனால் ஏ, உலோகங்கள் மற்றும் ஃபார்மால்டிஹைட் போன்றவை இந்த முடியை நேராக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் காணப்படுவதாகவும் அதில் இருக்கும் பல இரசாயனங்கள் கருப்பையில் அதிக ஆபத்துக்கு பங்களிக்கக்கூடும் என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

வெவ்வேறு தரப்பு மக்களிடையே இந்த கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தவும், பெண்களுக்கு புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் குறிப்பிட்ட இரசாயனங்களை அடையாளம் காணவும் கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Hair straightening
Hairfall : ஏன் முடி உதிர்கிறது, அதனை தடுக்க வழிகள் என்ன? - வினாக்களும், விடைகளும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com