ஜலதோஷம், சளி இருந்து நிரந்தரமாக விடுபட என்ன தீர்வு? ஈஸி டிப்ஸ் இதோ!
ஜலதோஷம், சளி பொறுத்தவரை, குணப்படுத்துவதை விடத் தடுப்பதே சிறந்தது. தொண்டை வலி வராமல் தடுக்க முடியும். சளி வந்த பிறகு படும் அவஸ்தையைவிட சளி வராமல் பார்த்துக்கொள்வது புத்திசாலித்தனம். ஏராளமான பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடுவது நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். ‘வைட்டமின் இ’ சத்துகள் உள்ள மீன்களைச் சாப்பிடலாம்.
குறிப்பாக மத்தி மீன்... நெய், நட்ஸ், விதைகளும் மிக நல்லது. துத்தநாகம் சத்துகள் உள்ள முழு தானியங்கள், ஓட்ஸ், சிறுதானியங்கள் சாப்பிடலாம். பி வைட்டமின்கள் உள்ள ஆடு இறைச்சி நல்லது. இதெல்லாம் சத்தான உணவுகள்… நோய் எதிர்க்கும் உணவுகள்..!
வைட்டமின் சி உணவுகள் சளி தொல்லையில் இருந்து நம்மைக் காப்பாற்றுமா?
ஆம்… வைட்டமின் சி உணவுகள் நிச்சயம் நம்மைக் காப்பாற்றும்.
வைட்டமின் சி உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இருப்பினும், அதிக கலோரிகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை கொண்ட உணவு நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்பதற்குச் சில சான்றுகள் உள்ளன. எனவே, ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, சாத்துக்குடி சாறு ஆகியவற்றைத் தேனுடன் கலந்து குடித்தால் சளி தொல்லை அதிகம் இருக்காது.
தேன், எலுமிச்சை மற்றும் இஞ்சி ஜலதோஷத்திலிருந்து விடுபட உதவுமா?
ஆம்… நிறையத் தேன், எலுமிச்சை, இஞ்சியுடன் குடிக்கும் பானங்களால் தொண்டை புண் ஆறும்.
தேன், எலுமிச்சை, இஞ்சி அடங்கிய டீ தினமும் குடித்தால் சளியிலிருந்து தப்பிக்கலாம். தேன் தொண்டை புண்களை ஆற்றும் - இருமல், மூக்கு ஒழுகுதல் முதல் காய்ச்சல் வரையிலான அறிகுறிகளைக் கொண்ட சுவாச நோய்த்தொற்றுகளை ஆராயும் ஆய்வுகள், அதிக அளவு தேன் குடிப்பதால் இருமலின் தாக்கத்தைக் குறைக்கலாம் எனக் கண்டறியப்பட்டது.
தேனுடன் எலுமிச்சை சாறு சேர்வதால் வைட்டமின் சி கிடைக்கும். பயோ ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. எலுமிச்சை சாறு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதனுடன் இஞ்சி போட்டு டீயாக குடித்தால் குமட்டல் முதல் ஜலதோஷம், காய்ச்சல், தொண்டைப் புண் வரை பலவிதமான நோய்களைத் தணிக்கப் பயன்படுகிறது.
ஜலதோஷத்திலிருந்து விடுபடப் பூண்டு உதவுமா?
ஆம், இது பழமையான தீர்வாகக் கருதப்பட்டாலும், சிலர் இன்றும் பின்பற்றுகிறார்கள். பூண்டில் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இது வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஜலதோஷத்தைத் தடுப்பதில் பூண்டின் விளைவுகள் குறித்து வரையறுக்கப்பட்ட மருத்துவச் சான்றுகள் உள்ளன. ஒரு ஆய்வில், பூண்டு சாறில் உள்ள சத்துகள் - சளி, காய்ச்சல் அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைக்கும் என முடிவு வந்துள்ளது.
நிறைய ஓய்வு சளியிலிருந்து விடுபட உதவுமா?
ஆம்… ஓய்வு எல்லாவற்றுக்குமான தீர்வு…உங்களுக்குக் காய்ச்சல், சோர்வு, இருமல், மார்பு வலி இருந்தால், ஓய்வெடுப்பது சிறந்த வழி. ஜலதோஷம் இருந்து காய்ச்சல் இல்லாதபோது, லேசான உடற்பயிற்சி உண்மையில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
ஜலதோஷத்திலிருந்து விடுபட வெங்காயம் உதவுமா?
சின்ன வெங்காயத்தைச் சமைக்காமல் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டால் தொண்டைப் புண்கள் குணமாகும். எப்போதும் உணவின் சின்ன வெங்காயம் சேர்த்துக் கொண்டால் சளி கழிவை எளிதில் விரட்டிவிடலாம். பெரிய வெங்காயம்விட சின்ன வெங்காயத்தில் மருத்துவக் குணங்கள் அதிகம்.
சளி பிடிப்பது இல்லை. சளி உடலில் கழிவாகத் தேங்கி இருக்கிறது. சளி வெளியேறும் உணவுகளைத் தினமும் சாப்பிடுங்கள். உடலில் சளி கழிவு தேக்கம் அடையாது. அனைத்துப் பழங்கள், காய்கறிகள், விதைகள், நட்ஸ், இளநீர் ஆகியவை நல்லது. மைதா, பால் பொருட்கள், மாவு உணவுகள் கழிவை உடலில் உருவாக்கும். இவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
மிளகு ரசம், பூண்டு குழம்பு, மிளகு சேர்த்த இறைச்சி நல்லது. சுக்கு டீ, இஞ்சி டீ, புதினா டீ, தனியா டீ, மிளகு, தேன், எலுமிச்சை சாறு கலந்த டீ ஆகியவை சளி வெளியேற உதவும். தினமும் பால் டீக்கு பதிலாக இதைக் குடிக்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust

