”அரசுகள் தயாராக இருக்க வேண்டும்” - புதிய கொரோனா குறித்து WHO எச்சரிப்பது என்ன?

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் இந்த புதிய திரிபு குறித்து எச்சரித்துள்ளார்.
”அரசுகள் தயாராக இருக்க வேண்டும்” - புதிய கொரோனா குறித்து WHO எச்சரிப்பது என்ன?
”அரசுகள் தயாராக இருக்க வேண்டும்” - புதிய கொரோனா குறித்து WHO எச்சரிப்பது என்ன?Twitter

2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவியது.

இதை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி, சுகாதார அவசர நிலையை கொண்டு வந்தது. 2020ல் கிட்டதட்ட எல்லா நாடுகளிலும் பரவி, லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது.

இந்த பெருந்தொற்று தடுக்க இந்தியா உட்பட பல உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி கொள்ள அறிவுறுத்தின. படிப்படியாக பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை குறைந்தன.

2023 மே மாதம் கோவிட் பெருந்தொற்றுக்கான சுகாதார அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வந்தது உலக சுகாதார அமைப்பு. இந்நிலையில், சமீப சில மாதங்களாக ஆங்காங்கே ஜேஎன்.1 (JN.1) எனும் கொரோனா வைரஸின் புதிய திரிபு பரவ தொடங்கியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் இந்த புதிய திரிபு குறித்து எச்சரித்துள்ளார்.

2023 டிசம்பர் மாதம் மட்டுமே, ஜேஎன்.1 கொரோனா திரிபால் சுமார் 10,00 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அரசாங்கங்கள்தான் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். இதுவும் ஓமிக்ரான் (omicron) வகை வைரஸ் என்பதால், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளே இந்த வைரஸுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் என தெரிவித்தார்.

”அரசுகள் தயாராக இருக்க வேண்டும்” - புதிய கொரோனா குறித்து WHO எச்சரிப்பது என்ன?
"கொரோனா காலத்தில் 40,000 கோடி ஊழல்" - பாஜக MLA வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com