வெயில் காலம் தானேனு அளவுக்கு அதிகமாக மோர் குடிக்காதீங்க - நன்மைகளும் தீமைகளும்
கோடை வெயிலில் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரமே இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில் பல இடங்களில் வெப்பம் 40 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வருகிறது. வெயிலிலிருந்து தங்களைத் தணித்துக் கொள்ள மோர், இளநீர், பதனி போன்ற கோடைக் கால பானங்களை எடுத்துக்கொள்கின்றனர்.
இதில் மோர் கூடுதல் சிறப்பு, என்னவென்றால் மற்ற கோடை பானங்களை ஒப்பிடுகையில் மோர் குடிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். நம் மதிய உணவில் சாம்பார் ரசம் மோர் என்று இறுதியில் மோர் சாப்பிட மறக்க மாட்டோம், கோடைக் காலம் வந்தால் நீர் மோர்ப் பந்தல் என இந்த மோர் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சிறிய அளவிலான மோரில் கூட நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஒரு கப் (அதாவது 245 மில்லி) மோரில் 98 கலோரிகள், 8 கிராம் புரதம், 3 கிராம் நார்ச்சத்து, 22% கால்சியம், 16% சோடியம் மற்றும் 22% வைட்டமின் பி12 ஆகியவைகள் உள்ளன. எல்லோருக்கும் தெரிந்த விஷயம் மோர் தாகத்தைப் போக்கும் என்பது மட்டும்தான் தெரியும். மோர் தினமும் சாப்பிட்டு வந்தால் பல நோய்கள் குணமடையும் என்பது குறித்துக் காணலாம்
நன்மைகள்
கால்சியம் குறைபாடு நீக்கும்
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையைச் சிலரது உடலால் ஜீரணிக்க முடியாது
மோர் குடிப்பதன்மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெற முடியும்
வயிற்றெரிச்சலைக் குறைக்கும்
காரமான உணவுகளை அதிகளவு சாப்பிட்டால் வயிற்றெரிச்சல் பிரச்னை வரும். அப்படிப்பட்ட சூழலில் மோர் குடிப்பதால் அதிலுள்ள புரதம் காரத்தின் ஆற்றலைக் குறைத்துவிடும்.
நீரிழப்பைத் தடுக்கும்
தயிருடன் தண்ணீர், உப்பு கலந்த மோர்க்கலவையைக் குடித்தால் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படாது.
செரிமானத்தை எளிதாக்கும்
தயிரில் செரிமானத்துக்கு உதவும் புரோபயோடிக்ஸ் (Probiotics) பாக்டீரியாக்கள் உள்ளன.
தயிரை மோராக மாற்றும்போதும் இதே நன்மைகள் கிடைக்கின்றன.
தீமைகள்
சளி, காய்ச்சல் அல்லது மகரந்த ஒவ்வாமை (pollen allergy)போன்ற நிலைகளின் போது, இரவு நேரங்களில் மோர் குடிப்பதைத் தவிர்க்கலாம்.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மோர் குடிப்பதைத் தவிர்க்கலாம். ஏனெனில் மோரில் சோடியம் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com