காதல் தோல்வி: மனமுடைந்தவர்களுக்கு அலுவலக விடுமுறை அவசியமா?- அறிவியல் சொல்வதென்ன?

காதல் தோல்வியால் மனமுடைந்த பெண் ஒருவர் இந்த கடினமான நேரத்தைக் கடந்துவர வேலையிலிருந்து கொஞ்ச நாட்கள் விடுப்பு கிடைக்குமா எனக் கேட்டு இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளார்.
காதல் தோல்வி: மனமுடைந்தவர்களுக்கு அலுவலக விடுமுறை அவசியமா?- அறிவியல் சொல்வதென்ன?
காதல் தோல்வி: மனமுடைந்தவர்களுக்கு அலுவலக விடுமுறை அவசியமா?- அறிவியல் சொல்வதென்ன?Twitter
Published on

ஒரு காதல் உறவின் முறிவு என்பது எவரையும் தாளாத சோகத்தில் ஆழ்த்திவிடக் கூடியது. உடலில் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சையும் நேரமும் தேவைப்படுவது போல மனதுக்கும் தேவை. காதல் முறிவுக்குப் பிறகு மனது மிக தளர்வுற்று எந்த செயலும் செய்ய முடியாமல் இதயம் கனத்திருக்கும் அல்லவா? இது உடல் நிலை சரியில்லாத நாட்களைப் போன்றது தான் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

காதல் தோல்வியால் மனமுடைந்த பெண் ஒருவர் இந்த கடினமான நேரத்தைக் கடந்துவர வேலையிலிருந்து கொஞ்ச நாட்கள் விடுப்ப கிடைக்குமா எனக் கேட்டு இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளார்.

Mumsnet என்ற பிரிட்டனைச் சேர்ந்த பெற்றவர்களுக்கான வலைத்தளத்தில் இந்த கேள்விக் கேட்கப்பட்டிருந்தது. யாரெனத் தெரியாத ஒரு பயனர், "நான் மிகவும் மோசமான பிரிவைக் கடந்து வருகிறேன். நாங்கள் நீண்ட நாட்கள் ஒன்றாக வாழ்ந்தோம். எங்களுக்கு ஒரு குட்டி பையனும் இருக்கிறான். இப்போதெல்லாம் நான் தினமும் காலையில் எழுந்து அழுகிறேன்" எனக் கூறியிருந்தார்.

அவர் இதற்கு முன்னர் உடல்நிலை சரியில்லாததால் வேலையில் அதிக விடுப்பு எடுத்திருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். "யாராவது உதவ முடியுமா? நான் இதற்காக என் வேலையை விட முடியுமா? என்னை மாதிரி பிரிவினால் வருந்துபவர்கள் இதற்காக நேரம் எடுத்துக்கொள்கிறீர்களா?" என்றுக் கேட்டுள்ளார்.

இந்த கேள்விக்கு பல பதில்கள் வந்தன. வளர்ந்தவர்கள் இதனைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பல அட்வைஸ்கள். சில ஆறுதல்கள் ஆதரவுகள்... சரி இது குறித்து அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா?

காதல் தோல்வி: மனமுடைந்தவர்களுக்கு அலுவலக விடுமுறை அவசியமா?- அறிவியல் சொல்வதென்ன?
மனிதர்கள் இயற்கையாகவே சோம்பேறிகளா? - ஆய்வு கூறும் அட்டகாச தகவல்

கடந்த 2010ம் ஆண்டு இது குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வானது, காதல் தோல்வி அல்லது நிராகரிப்பு ஆழ்ந்த இழப்பு மற்றும் மருத்துவ ரீதியிலான மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியது. இது தற்கொலை அல்லது கொலையில் கூட சென்று முடியலாம் எனக் கூறியிருக்கிறது.

மேலும், உடல் ரீதியிலான வலியையும் பிரிவு, இழப்பால் ஏற்படும் மன வேதனையையும் மூளை ஒரேப் போலத் தான் எடுத்துக்கொள்கிறது என பல ஆய்வுகள் கூறுகின்றனர். சோகத்தினால் இதயத்தில் ஏற்படும் தாக்கம் உங்களை உடல்ரீதியாக பாதிக்கிறது என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறதா?

இறுதியாக அந்த பெண்ணுக்கு சில நாட்கள் விடுப்பு அளிக்கப்படலாமா? கூடாது? உங்களது பதில் என்ன?

காதல் தோல்வி: மனமுடைந்தவர்களுக்கு அலுவலக விடுமுறை அவசியமா?- அறிவியல் சொல்வதென்ன?
Kiss Day : மனிதர்கள் முத்தமிடுவதற்கு என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com