வாழைப்பழத்தை வெளிநாட்டினர், அது பெர்ரி வகையைச் சேர்ந்தது என்றே கருதுகின்றனர். ஸ்டாப்பெர்ரி, பிளாக்பெர்ரி போல… பெர்ரி வகையில்தான் சதைப்பகுதிக்கு நடுவில் விதைகள் இருக்குமாம். ஆதலால், வாழைப்பழத்தை ‘பெர்ரி வகை’ என்கிறார்கள். பிலிபைன்ஸ் நாட்டில், டொமெட்டோ கெட்ச்-அப்க்கு பதிலாக வாழைப்பழம் கெட்ச்-அப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது.
ஆயிரம் வகைகளுக்கு மேல் வாழைப்பழம் வகைகள் முன்பு இருந்துள்ளன. விவயாசத்தில் அதிகம் விளைவிக்கக் கூடிய உணவுகளில், 4-வது இடத்தில் வாழைப்பழம் உள்ளது. வீடுகளில் 51% பேர், காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். இரவில் சாப்பிடுவதைவிடக் காலை உணவாக சாப்பிடுவதே சிறந்தது. இந்தியாவில் ஒருவர் அரை மணி நேரத்தில், 81 வாழைப்பழங்களைச் சாப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது.
மிகச் சிறந்த பழங்களில் ஒன்று, வாழைப்பழம். எளிதாகக் கிடைக்கக் கூடிய பழம். கொழுப்பு சத்து, சுத்தமாக இல்லை. மற்ற சத்துகள் அனைத்தும் உள்ளன. சாலட், ஸ்மூத்தி, ஜூஸ் எனச் சாப்பிடலாம். வாழைப்பழங்களில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
உடல் எடையைக் கூட்ட வேண்டும் என யாராவது நினைத்தால், அவர் சாப்பிட வேண்டிய ஒரே உணவு நேந்திரம் பழம்தான். இந்த நேந்திரம் வாழைப்பழம் ஒன்று மட்டுமே போதும். ஆரோக்கியமான முறையில் எடையை அதிகரிக்க உதவும். அவ்வளவு சத்துக்களும் பலமும் கொண்ட பழம் இது.
வாழைப்பழங்களிலே சிறந்த பழம் இது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். பித்த நோய்களை நீக்கும். ஒழுங்கற்ற மாதவிலக்கை சீராக்கும். மலச்சிக்கலை நீக்கும்.
குதிகால் வலி, நின்றுக்கொண்டே வேலை பார்ப்போருக்கு வரும் கால் வலி, தூங்கி எழுந்ததும் தோன்றும் வலி குறிப்பாகப் பெண்களுக்கு இப்பிரச்சனை அடிக்கடி வரும். மூட்டு வலிப்பது, கால் வலிப்பது போன்ற பிரச்சனை இருப்போருக்கு ஒரே மருந்தாகச் சிறப்பான முறையில் வேலை செய்யும் ஒரே பழம், செவ்வாழை. குதிகால் வாதம் நீங்கும்.
குழந்தைகளுக்கான பழம் இது. சின்னச் சிறு அளவில் இருக்கும். குழந்தைகளுக்கான ஸ்பெஷல் இது. மலமிலக்கியாகச் செயல்படும். 6 மாத குழந்தைகளுக்குகூடக் கொடுக்கலாம். குடல் புண்களை ஆற்றும்.
இதை இரு பெயர்களால் அழைப்பதுண்டு. மூலம் நோயாளிகளுக்கு இந்த மொந்தன் வாழைப்பழத்தைவிட மிகச் சிறந்த மருந்து ஒன்று கிடையாது. ரத்த மூலத்தையும் போக்கும். மலச்சிக்கலைப் போக்கும். ஃபிஸ்டுலா பிரச்சனையைக் குணமாக்கும்.
பச்சை நிறத்தில் இருக்கும். திருச்சியில் அதிகம் கிடைக்கும். மிக இனிப்பான சுவை மிகுந்த பழம். பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்படுதல் தொந்தரவை முற்றிலும் போக்கும் மருந்து இது. உடல் குளிர்ச்சியைத் தரும். பச்சை வாழைப்பழம், பச்சை நாடன் என்றும் சொல்வார்கள்.
நார்ச்சத்தும் அதிகம். உடலுக்கு ஊட்டமும் அதேசமயம் தரும். கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து வரக்கூடிய பழங்கள் இவை. மிகவும் சத்தானவை, சுவையானவை.
பித்தம் தணியும். உடலில் செரிமான சக்தி சீராகச் செயல்படும். மலச்சிக்கலை நீக்கும். உடலுக்குத் தேவையான தெம்பை அளிக்கும். அனைவரும் சாப்பிடலாம். குளிர்ச்சியைத் தரும்.
பசியைத் தாங்கும். உணவுக்கு முன் இந்தப் பழத்தை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். சுவை மிகுந்த பழம் இது. அதிக மாவுச்சத்து உள்ளது. சாப்பாட்டுக்கு பிறகு 3 மணி நேரம் கழித்துச் சாப்பிடலாம். அல்லது இதையே உணவாகச் சாப்பிடலாம்.
உடனடியாக ஊக்கம் தரும். அளவில் சிறியதாக இருக்கும். சுவை அதிகம். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும். சுறுசுறுப்பு தரும். விரைவில் கனிந்துவிடும் பழம். ரத்த விருத்திக்கு உதவும்.
அதிக எடைக்குக் காரணம் 75% நீர்த்தன்மைதான். வாழைப்பழத்தில் 75% நீர்ச்சத்துகள், நார்ச்சத்து, சர்க்கரை சத்து, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் சி மற்றும் விட்டமின் பி6 உள்ளன. ஆப்பிள், தர்பூசணி ஆகியவை தண்ணீரில் மிதப்பது போல வாழைப்பழங்களும் நீரில் மிதக்கும்.
பொட்டாசியம் சத்து இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். 27% இதய நோய்களை வராமல் தடுக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. செயற்கை சப்ளிமென்ட்களுக்கு பதிலாக ஒவ்வொரு வகை வாழைப்பழத்தை ஒரு வாரம் என மாற்றி மாற்றிச் சாப்பிட்டு வரலாம்.
கலோரிகள் குறைவு. ஒரு வேளை உணவாகச் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைக்க உதவும். புரோட்டீன் சத்து இருப்பதால், ஜிம் செல்வோருக்கு சிறந்த உணவு. பசியைத் தாங்கும். வயிறு நிறைந்த உணர்வைத் தரும். அடிக்கடி பசி எடுக்கும் பிரச்சனை தீரும்.
பொட்டாசியம் சத்து இருப்பதால் சிறுநீரகங்களின் இயக்கத்துக்கு உதவும். ஆரோக்கியமாக வைத்திருக்கும். சுமார் 5000 ஆரம்பக் காலச் சிறுநீரக நோயாளிகளுக்குத் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட வைத்து ஆராய்ச்சி செய்ததில், அவர்களது சிறுநீரகங்கள் ஆரோக்கியம் அடைந்ததை ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
ஒருநாளைக்கு விட்டமின் சி சத்து குறிப்பிட்ட அளவுக்குத் தேவைப்படும். அதில் 10% சத்துகளை ஒரு மீடியம் அளவு வாழைப்பழமே தந்துவிடும். செல், திசுக்கள் பாதிப்பதைத் தடுக்கும். இரும்புச்சத்து கிரகிக்க விட்டமின் சி சத்து உதவும். கொலாஜன் சத்து இருந்தால் சருமம் தளர்வாகாமல் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.