செம்பு பாத்திரம்: வெள்ளையணுக்கள் முதல் உயிரணுக்கள் வரை காப்பரால் கிடைக்கும் நன்மைகள்

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது, எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இதயத்திற்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தச் செம்பு நமக்கு உதவும். விந்தணுக்கள் அதிகரிக்க உதவும்.
காப்பர்
காப்பர்Twitter
Published on

வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அந்த தண்ணீரை பிளாஸ்டிக்கில் ஊற்றி அல்லது சில்வரில் ஊற்றிக் குடிப்பதற்குப் பதிலாகச் செம்பு பாத்திரங்களில் ஊற்றிக் குடிப்பதன் மூலம் நீங்கள் பல நன்மைகள் பெறலாம்.

எல்லா வீட்டிலும் ஓரத்தில் யாருக்காவது சீதனமாக வந்த செம்பு பாத்திரம் இருக்கும். பெரும்பாலானோர் அதனைப் பயன்படுத்துவதில்லை. தற்போது நம் வசதிக்கு ஏற்ப செம்பு பாட்டில்கள் கூட கிடைக்கின்றன. இவற்றை உபயோகப்படுத்தினால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்.

முதலாவதாகச் செம்பு தாது உங்கள் உடலில் சேர்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் தாமிர/செம்பு சத்து குறைவாக இருந்தால் இரத்த ஓட்டத்தில் வெள்ளை இரத்த அணுக்கள் குறையும் அபாயம் ஏற்படும். இதிலிருந்து தப்பிக்கச் செம்பு பாத்திரங்கள் உதவும்.

எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இதயத்திற்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தச் செம்பு நமக்கு உதவும். ஆயுர்வேதத்தின் படி, செம்பானது அமிலத்தன்மை, இதய எரிச்சல், இருமல், சளி போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.

செம்பு பாத்திரம்
செம்பு பாத்திரம்Canva

பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதிக்கும் இரத்தசோகை பிரச்னையின் வரவை கட்டுப்படுத்தும். குறிப்பாகக் கர்ப்பிணி பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும்.

காப்பர்
தண்ணீரை எப்படி உடலுக்கு மருந்தாக்குவது? வெறும் தண்ணீர் குடிக்க நோய் தீருமா ?

செம்பு உடலில் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவுகிறது.

காப்பர் சத்துதான் இரத்த விருத்திக்குத் தேவையான அடிப்படை தாது உப்பு ஆகும். இரவு, செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிவைத்து காலையில் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமளிக்கும்.

காப்பர்
கல்லீரல் : ஆரோக்கியமாக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?
Copper
Copper Canva

செம்பு பாத்திரத்தில் உள்ள நீரைக் குடித்தால் உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் சமப்படுத்தப்பட்டு, உடலின் அமிலத்தன்மையையும் கட்டுப்படுத்தும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.

இரத்தையே சுத்திகரிக்கும் செம்பு தண்ணீரைச் சுத்திகரிக்காதா என்ன? இ-கோலி (E.coli), சால்மோனெல்லா (Salmonella) போன்ற பொதுவான பாக்டீரியாக்களைச் செம்பு அழிக்கிறது.

நீரானது செம்புப் பாத்திரத்தில் இருக்கும்போது அப்போது, காப்பர் அயான்ஸ் எனப்படும் ஒருவகையான திரவம் சிறிய அளவில் நீரில் கலக்கிறது. இது, நீரில் உள்ள பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண் கிருமிகளை அழித்து நீரைச் சுத்திகரிக்கின்றது.

காப்பர்
பிரபலாகி வரும் மணக்கும் மல்லிகை அரிசி : Jasmine Rice சாப்பிடலாமா? | Nalam 360

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பியும், உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தி அதிகமாகும்.

'செம்பு பாத்திரத்தை விளக்கி செடிக்கு அடியிலே ஊற்று' என்பது பழமொழி. இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது கொஞ்சம் மெனக்கெட்டு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருக பழகலாமே.

காப்பர்
Women Health : 40 வயதில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் | Nalam 360

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com