தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

அத்திப்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன, அவை ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கின்றன. இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
தினமும் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
தினமும் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?canva
Published on

மேற்கு ஆசியா மற்றும் இந்திய துணைக்கண்டம் முழுவதும் வளர்க்கப்படும் அத்திப்பழம் நார்ச்சத்து துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆற்றல்களை கொண்டுள்ளது. இதனை தினமும் ஊற வைத்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

அத்திப்பழம் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது. அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கிறது, புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.

அத்திப்பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த பழத்தில் பல்வேறு வகையான ஆக்சிஜனேற்றங்கள் உள்ளன. இது ரத்தத்தில் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்கும் என கூறப்படுகிறது. ஊறவைத்த அத்தி பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கிறது. ஊற வைத்த அத்திப்பழத்தை உட்கொள்ளுவதால் எலும்புகள் வலுவடையும். கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகமாக இருப்பதால் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க இந்த அத்திப்பழம் உதவுகிறது.

வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த அத்திப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. தொற்று நோய்களுக்கு எதிராக உடலை பாதுகாக்க உதவுகிறது.

அத்திப்பழங்களில் ஒப்பீட்டளவில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால், அவை எடை குறைப்பதிலும் பங்களிக்கிறது.

அத்திப்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன, அவை ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கின்றன. இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

தினமும் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com