Health: அதிகமாக Sweet Cravings வருகிறதா? அதனை தடுக்க என்ன செய்யலாம்?

இதற்கு காரணம் நாம் இனிப்புகள் சாப்பிடும் போது, ​​நமது மூளை உடலில் டோபமைனை நிரப்புகிறது. இது நம் உடலுக்கு ஒரு நல்ல உணர்ச்சியை அளிக்கிறது. இது மூளையின் வெகுமதி மற்றும் மகிழ்ச்சி மையங்களைக் கட்டுப்படுத்த உதவும். இந்த டோபமைன் நம்மை சர்க்கரையின் சுவைக்கு அடிமைப்படுத்திவிடுகிறது.
Health: அதிகமாக Sweet Cravings வருகிறதா? அதனை தடுக்க என்ன செய்யலாம்?
Health: அதிகமாக Sweet Cravings வருகிறதா? அதனை தடுக்க என்ன செய்யலாம்?Canva

நம் எல்லோருக்குமே எப்போதாவது இனிப்பாக ஏதாவது சாப்பிடவேண்டும் என்று தோன்றும். இதனை கிரேவிங்ஸ் என்று அழைக்கின்றனர். இது பசியால் தோன்றும் உணர்ச்சி இல்லை. இது ஒரு வித உடல் செயல்முறை எனலாம்.

சாதாரணமாகவே நாம் அதிகமாக இனிப்பு சாப்பிடுவது உடல் ஆரோகியத்துக்கு நல்லது இல்லை.

இதற்கு காரணம் நாம் இனிப்புகள் சாப்பிடும் போது, ​​நமது மூளை உடலில் டோபமைனை நிரப்புகிறது. இது நம் உடலுக்கு ஒரு நல்ல உணர்ச்சியை அளிக்கிறது. இது மூளையின் வெகுமதி மற்றும் மகிழ்ச்சி மையங்களைக் கட்டுப்படுத்த உதவும். இந்த டோபமைன் நம்மை சர்க்கரையின் சுவைக்கு அடிமைப்படுத்திவிடுகிறது.

ஆரோக்கியமற்றது என்றாலும், நம்மை அந்த உணவுகளை சாப்பிட சொல்லி ஆர்வம் தூண்டும்.

இதற்கு முக்கிய காரணம் வைட் சுகர் சாப்பிடுவது தான் என மருத்துவர்கள் சொல்லி கேட்டிருப்போம்

இந்த கிரேவிங்ஸ் நமக்கு வராமல் தடுக்க, அதிகமாக வெள்ளை சர்க்கரை எடுத்துக்கொள்ளாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்று இந்த மாற்றுப் பழக்கங்களை கொண்டுவரலாம்

Health: அதிகமாக Sweet Cravings வருகிறதா? அதனை தடுக்க என்ன செய்யலாம்?
Health: நள்ளிரவில் பசிக்கிறதா? இந்த ஸ்நாக்ஸை சாப்பிட்டால் சீக்கிரம் தூங்கலாம்

அதிக புரதச் சத்துடைய பிரேக்ஃபாஸ்ட்

மனிதனுக்கு காலை உணவு அந்த நாளின் மிக முக்கிய உணவு என்று நாம் அறிவோம். ஆகையால் அதிக ஊட்டச்சத்துடைய உணவை சாப்பிடுவது அவசியம். குறிப்பாக முட்டை, பால், ப்ரோடீன் ஷேக் போன்ற அதிக புரதச் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் நமக்கு sweet cravings வராமல் தடுக்க உதவுகிறது

பழங்கள் சாப்பிடலாம்

நாம் சாப்பிடும் பல பழங்களில் இயற்கையாகவே சர்க்கரையின் தன்மை இருக்கிறது. ஆனால் இவை ஆரோக்கியமானவை.

காலை உணவுக்கு பிறகு, மதிய உணவுக்கு முன்பான இடைவெளியில் தினம் ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் நமக்கு இனிப்பு சாப்பிடும் உணர்வு கட்டுக்குள் வரும்.

நட்ஸ்

ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் இன்சுலின் எதிர்ப்பு காரணமாக நமக்கு sweet cravings தோன்றலாம் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால், காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த நட்ஸ் சாப்பிடுவது நம் மெட்டபாலிசத்தை சீராக்கும், sweet cravings வராமல் தடுக்கும் என்கின்றன

Health: அதிகமாக Sweet Cravings வருகிறதா? அதனை தடுக்க என்ன செய்யலாம்?
Health: தலை முடியை டேமேஜ் செய்யும் பழக்கங்கள் என்ன?

தண்ணீர்

நம் உடலில் ஏற்படும் கோளாறுகளுக்கு, நல்ல ஆரோக்கியத்துக்கும் முதல் தீர்வாக இருப்பது தண்ணீர் தான். முறையாக சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்து ஹைட்ரேட்டட் ஆக இருந்தாலே கிரேவிங்ஸ் வராது.

சீஸ்

இது கொஞ்சம் வினோதமாக தோன்றினாலும், இனிப்பாக சாப்பிடவேண்டும் என தோன்றும்போது சீஸ் சாப்பிடலாம்.

டின்னர்

இரவு 7 மணிக்குள் டின்னர் சாப்பிடவேண்டும். அப்படி சாப்பிடும்போதும் அந்த உணவில் இனிப்பு இருக்ககூடாது.

தேவைக்கு அதிகமான நேரத்தை ஆபீஸிலேயே செலவழித்து விடுவதால், 7 மணிக்கு முன் டின்னர் என்பது சற்றே சாத்தியமில்லை தான்.

மேலே குறிப்பிட்டவற்றில் சில உதவலாம்

Health: அதிகமாக Sweet Cravings வருகிறதா? அதனை தடுக்க என்ன செய்யலாம்?
Health: காலை பிரேக் ஃபாஸ்ட்க்கு சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com