Health: உட்காரும்போது நாம் செய்யும் தவறுகள் என்ன? இதனால் இத்தனை பாதிப்புகளா! | Nalam 360

குறிப்பாக நாம் அமரும் விதம். நமது அமரும் பொசிஷன்கள் உடல்நலத்தை எப்படி பாதிக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம்
Health: உட்காரும்போது நாம் செய்யும் தவறுகள் என்ன? இதனால் இத்தனை பாதிப்புகளா! | Nalam 360
Health: உட்காரும்போது நாம் செய்யும் தவறுகள் என்ன? இதனால் இத்தனை பாதிப்புகளா! | Nalam 360canva
Published on

தற்போது உள்ள சூழலில் உட்கார்ந்தவாறே நாம் நமது பணிகளை செய்து வருகிறோம். உடல் வளைந்து செய்யும் வேலைகள் குறைந்துவிட்டன.

இதனாலேயே தனியாக ஜிம், யோகா, வாக்கிங் என உடற்பயிற்சிகள் அதிகமாகிவிட்டன.

இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்க்கும்போது, பக்கவிளைவுகள் ஆபத்தானவையாக இருக்கின்றன.

இது புகைப்பிடித்தலால் உண்டாகும் விளைவுகளுக்கு நிகராக உள்ளது என வல்லுநர்கள் கூறுகின்றனர்

குறிப்பாக நாம் அமரும் விதம். நமது அமரும் பொசிஷன்கள் உடல்நலத்தை எப்படி பாதிக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம்

நீண்ட நேரம் உட்காருதல்

45 நிமிடத்துக்கும் அதிகமாக ஒரே இடத்தில் அமருவதால், நமது முதுகு தண்டுவடத்தினை இது பாதிக்கிறது. கால் மற்றும் க்ளூடியல் தசைகளும் பாதிப்படைகின்றன.

குறைந்தது ஒரு ஒரு 45 நிமிடத்திற்கும் ஒரு முறை பிரேக் எடுக்கலாம். எழுந்து நிற்பதோ, சிறிது தூரம் நடப்பதோ அல்லது கை கால்களை நீட்டி, ஸ்டிரெச் செய்வதோ ரிலாக்ஸாக இருக்கும்.

சாய்ந்த வாக்கில் உட்காருவது

நேராக உட்காரவேண்டும். வயிற்று பகுதி உள்ளேயும், மார்பகம் வெளியிலும், நமது தாடை பகுதி உள்ளே இழுத்தவாறும் இருக்கவேண்டும்.

சாய்ந்த வாக்கில் அவ்வப்போது ரிலாக்ஸாக உட்காரலாம். நேராக உட்காராவிட்டால், கூன் விழும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் கிபோசிஸ் என்ற பாதிப்பை ஏற்படுத்தும்.

உடலின் சமநிலை பாதிக்கும், உறங்கும் பொசிஷன் மாறும், ஸ்பைனல் கார்டில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு செரிமான பிரச்சினைகள் கூட ஏற்படலாம்

Health: உட்காரும்போது நாம் செய்யும் தவறுகள் என்ன? இதனால் இத்தனை பாதிப்புகளா! | Nalam 360
Health: தம்பதிகள் உடலுறவுக்கு பின் சோகமாக உணர்வது ஏன்? | Nalam 360

மென்மையான தரைகளில் அமர்வது

மென்மையான அடிதளம், முதுகிற்கு சப்போர்ட் இல்லாமை, மிகவும் கீழ் மட்டத்தில் அல்லது உயரத்தில் உட்காருதல், கால்களுக்கு சரியான சப்போர்ட் இல்லாமல் போனால் அது நம் உடல் நலத்தை பாதிக்கும்.

திடமான இருக்கையில், முதுகு மற்றும் கால்களுக்கு சப்போர்ட் கொடுத்தே உட்கார வேண்டும்.

மொபைல் பயன்படுத்தும்போது

இந்த சமயத்தில் தானாகவே நாம் தலை குனிந்துவிடுவோம். அது மிகவும் ஆபத்தான செயல். போன்களை நம் கண்கள் இருக்கும் உயரத்தில் வைக்கவேண்டும். இப்படி உட்காரும்போது, கைகளுக்கு அப்போர்ட் தரவேண்டும் என்றும் கூறுகிறார் டாக்டர். விஷால் பெஷ்டிவார், தலைவர், கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை

Health: உட்காரும்போது நாம் செய்யும் தவறுகள் என்ன? இதனால் இத்தனை பாதிப்புகளா! | Nalam 360
Health : தினமும் 10 மணி நேரம் உட்கார்ந்திருப்பது உங்கள் மூளையைப் பாதிக்குமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com