தீபாவளி யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ நம் எல்லார் வயிற்றுக்கும் திருவிழா தான். நாம் வேண்டாம் என நினைத்தாலும் பக்கத்துவீட்டுக்காரர்கள் வாயில் ஊட்டியே விட்டு விடுவார்கள்... இனிப்புகளையும், எண்ணெயில் பொறித்த பலகாரங்களையும்.
காலையில் முறுக்கும் காபியும், உணவுக்கு சாப்பாடும் போது வடையும், மதியம் உணவுடன் மைசூர் பாக், மாலை டீயுடன் அதிரசம், இரவு உணவுக்கு பிறகு சுவியம் என எப்போதும் பலகாரங்களுடனே வாழப் பழகியிருப்போம். இவை தவிர தனியாக் ஸ்நாக்ஸ் டைம் வேற.
இந்த உணவுகளால் சிலருக்கு தொப்பை போட்டிருக்கும், அசிடிட்டி ஏற்பட்டிருக்கும், வாயுத் தொல்லை, மலச்சிக்கள் போன்ற பிரச்னைகள் வந்திருக்கும். நமது மோசமான வாழ்க்கை முறையால் செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டிருப்பதும் வளர்சிதை மாற்றத்தில் பிரச்னைகள் இருப்பதுமே இதற்கு காரணம்.
நமது ஆரோக்கியமான நார்மல் உணவுப் பழக்கத்துக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. உடலை பாதுகப்பது முக்கியமல்லவா?
இந்த தீபாவளியில் கொத்துகொத்தாக சாப்பிட்டதில் ஏற்பட்ட சிக்கல்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலைப் பெற சில வழிகள்...
செயற்கையாக இனிப்பு சேர்க்கப்படும் உணவுகளைத் தவிருங்கள். மிட்டாய்கள், இனிப்பு வகைகள், கோலா பானங்கள், பேக்கரி பொருட்கள் உள்ளிட்டவற்றை 2 வாரங்களுக்கு உண்ணாமல் இருக்கலாம்.
உடலை டிடாக்ஸ் செய்ய எலுமிச்சை சிறந்த பொருளாகும். ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து காலையில் பருகிவர உடல் நன்றாகவே டிடாக்ஸ் ஆகும்.
இந்த தண்ணீரில் சர்கரை கலக்கக் கூடாது.
தினமும் தண்ணீர் பருகுவதை விட கொஞ்சம் அதிகமாக குடியுங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது வியர்வை அல்லது சிறுநீர் வழியாக உடல் நச்சுகள் வெளியேறும்.
ஒரு நாளுக்கு 8 அல்லது 9 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.
இறைச்சி நம் உடலுக்கு வலு தரக்கூடியது. தீபாவளியில் கூட நாம் எல்லாரும் அதிக இறைச்சி சாப்பிட்டிருப்போம். ஆனால் இறைச்சி எளிதில் செரிமானம் ஆகாது. ஏற்கெனவே களைத்திருக்கும் செரிமான மண்டலத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்க இறைச்சியைத் தவிர்க்கலாம்.
எளிதில் செரிமானம் ஆகக்கூடிய தாவர உணவுகளிலிருந்து புரதத்தைப் பெறலாம்.
நார்ச்சத்து இயற்கையான உடல் நச்சுக்களை நீக்கும் தன்மையுடையது. இந்த நேரத்தில் நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். கேரட், வெள்ளரிக்காய் சேர்த்துக்கொள்வது, சேலட்காக செய்து சாப்பிடுவது, முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் கீரை வகைகள் அதிமாக சாப்பிடலாம்.
இவற்றுடன் மது அருந்தாமலிருப்பது, அரிசி மற்றும் மாவுப்பொருட்களை அளவுடன் எடுத்துக்கொள்வது போன்றவற்றையும் கடைபிடிக்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust