நோய்களுக்குக் கசப்பான மருந்துகளைச் சாப்பிடுவது அலோபதி முறை. ஆனால், இயற்கை வழியில் நோய்களுக்கு இனிப்பான, சுவையான உணவுகளே நோய்களை முற்றிலும் குணப்படுத்தும் என இயற்கை மருத்துவம் சொல்கிறது. இயற்கை, நாம் செய்த வாழ்வியல் தவறுகளை மன்னித்து இனிப்பான உணவு முறையிலே நோயை தீர்க்கும் வழியைக் கற்றுத்தருகிறது. எந்தெந்த உடல் தொந்தரவுகளுக்கு எந்தெந்த காம்பினேஷன் ஜூஸ் பலன் அளிக்கும் என்பதைப் பார்க்கலாம்.
கேரட், பசலை கீரை, லெட்டியூஸ் இலைகள் கலந்த ஜூஸ் 200ml குடிக்கலாம். வாரம் மூன்று முறை குடிப்பது நல்லது.
உடலில் அரிப்பு, அதனால் எரிச்சல், லேசான வீக்கம் மற்றும் எரிச்சலுக்கு… கேரட், பசலை, வெள்ளரி, பீட்ரூட் கலந்து 150ml வரை குடிக்கலாம்.
ஆப்பிள் கேரட் பீட்ரூட் எனும் ஏபிசி ஜூஸ் அதில் பேரீட்சையும் அத்தியும் சேர்த்து வாரம் மூன்று குடிக்கலாம்.
மாதுளைப்பழம் ஜூஸ், செம்பருத்தி டீ, மருதப்பட்டை டீ, கொத்தமல்லி சாறு இந்துப்புடன் சேர்த்துக் குடிக்கலாம்.
தக்காளி ஜூஸ் பெஸ்ட். சாத்துகுடி ஜூஸில் தாராளமாகத் தேன் விட்டுக் குடிக்கலாம்.
கொத்தமல்லி, வெள்ளரி, இஞ்சி, பசலை கீரை சேர்த்து 150ml குடிக்கலாம்.
வெள்ளரி, புதினா, எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கலாம்.
பசித்தால் மட்டும் திராட்சை ஜூஸ் அல்லது சாத்துக்குடி ஜூஸ் அல்லது எலுமிச்சை ஜூஸ். இதில் ஏதோ ஒன்று தேவையான அளவு குடிக்கலாம்.
இரண்டு நாள் தொடர்ந்து எந்தத் திட உணவு எடுக்காமல்… பசித்தால் பழச்சாறுகள்… தாகம் எடுத்தால் தண்ணீர் மட்டும் குடித்து வந்தால் இரண்டே நாளில் செரிமானத் தொந்தரவு நீங்கும்.
சப்போட்டா ஜூஸ் அல்லது பழமாகச் சாப்பிட்டு வருவது நல்லது.
மலை வாழைப்பழம், பேரீச்சை கலந்து ஜூஸாக குடிக்கலாம். இது காலை உணவாக இருக்கலாம். பசித்தால் மட்டும் குடிக்க வேண்டும்.
தக்காளி ஜூஸ் அல்லது திராட்சை ஜூஸ் அல்லது கொத்தமல்லி ஜூஸ் அல்லது மாதுளம் பழம் ஜூஸ் அல்லது சாத்துக்குடி ஜூஸ் அல்லது அரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை தினம் ஒன்று எனச் சர்க்கரை இல்லாமல் 2 ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.
ஒரு வேளை உணவாக ஜூஸ் குடிக்கலாம். அவரவரின் பசிக்கு ஏற்றவாறு அளவை தீர்மானிக்கவும். வாழைப்பழம் அல்லது திராட்சை அல்லது அன்னாசி பழம் அல்லது இளநீர் அல்லது நுங்கு அல்லது தர்பூசணி அல்லது கிர்ணி அல்லது பப்பாளி என தினமும் ஒரு வகை ஜூஸ் பசியின் அளவை பொறுத்துக் குடிக்கலாம்.
புதினா, பனங்கற்கண்டு, எலுமிச்சை பழம் கலந்து ஒருவேளை குடிக்கவும்.
பப்பாளி அல்லது கொய்யா அல்லது சப்போட்டா அல்லது ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். பசித்தால் மட்டும் குடிக்கவும். பசிக்காத போது சாப்பிடாமல் இருந்தால் மலச்சிக்கல் சரியாகும்.
எலுமிச்சை ஜூஸ் அல்லது ஆரஞ்சு ஜூஸ் அல்லது சாத்துக்குடி ஜூஸ் தேன் கலந்து குடிக்கவும். பசிக்கையில் இவற்றில் ஏதோ ஒன்று பருகலாம். விரைவில் சளி வெளியே வர உதவும். சளி வெளியேறுவதே சிகிச்சை; நின்றுபோவது கிடையாது.
பப்பாளி பழம் அல்லது சப்போட்டா அல்லது தர்பூசணி அல்லது கிர்ணி அல்லது திராட்சை அல்லது செவ்வாழை அல்லது ஆப்பிள் ஜூஸ் தாராளமாக குடிக்கலாம். ஒரு வேளை உணவு போல் சாப்பிடலாம்.
கொத்தமல்லி ஜூஸ் குடிக்கலாம். முடக்கத்தான் கீரை, இந்துப்பு, வெள்ளரிக்காய் கலந்து ஜூஸ் குடிக்கலாம்.
Juice therapy எடுத்தாலும் சில விதிமுறைகளைப் பின்பற்றினால் பலன் விரைவிலும் நிரந்தரமாகவும் இருக்கும். எல்லா நோய்களுக்கும் காரணம் கழிவுகள்தான். இடத்துக்கு ஏற்ற கழிவுகளின் தன்மை மாறுபடும்.
பசித்தால் மட்டும் சாப்பிட வேண்டும். பசிக்காமல் ஒரு ஸ்பூன் அளவுகூடச் சாப்பிட கூடாது
தாகம் எடுக்காமல் தண்ணீர் அருந்த கூடாது. தாகம் வந்தால் தண்ணீரை தவிர வேறு எந்தத் திரவ உணவும் குடிக்க கூடாது.
பழங்களோ, ஜூஸோ பசித்தால் மட்டும் சாப்பிட வேண்டும். இது ஸ்நாக்ஸ் கிடையாது. உணவு... ஆகையால், பசிக்கும் வேளையில் உணவாக இவற்றைச் சாப்பிட வேண்டும். பசிக்கு இட்லி அப்புறம் ஜூஸ். இப்படிச் சாப்பிட்டால் வயிற்றில் இட்லியும் ஜூஸூம் சேர்ந்து அமிலத்தன்மையாக மாறும். புண்கள் வரும். கெட்ட வாயு சேரும்.
பழங்களோ ஜூஸோ திட உணவான இட்லி தோசையோ வயிறு முட்ட சாப்பிட கூடாது. போதும் என்ற உணர்வு வந்து மெல்லிய ஏப்பம் வந்தவுடன் நிறுத்திவிட வேண்டும்.
சாப்பிட்ட பிறகு உங்களுக்குச் சோர்வு வந்தால் நீங்கள் அதிகமாக சாப்பிட்டுள்ளீர்கள் என அர்த்தம்.
மாதம் இரண்டு முறை அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை முழு நாள் விரதமாக இருக்கவேண்டும். பசித்தால் ஜூஸ், தாகம் வருகையில் தண்ணீர் குடித்துத் திட உணவை தவிர்க்கவும்.
செயற்கை உணவுகள், ரசாயண உணவுகள் அவசியம் தவிர்க்கவும்.
இரவு 9 மணிக்கே தூங்க செல்வதும் முக்கியம்.