தினமும் குளித்த பிறகு வெப்பம் தணிந்ததா என எப்படிக் கண்டுபிடிப்பது?

மலைவாழ் மக்கள் தினமும் குளிப்பதில்லையா? அவர்களின் உடலின் செல்கள் இறப்பது இல்லையா? வெப்ப காலத்தில் குளியல் எவ்வளவு முக்கியம்? குளியலால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது குறித்து பார்ப்போம்
bathing
bathingtwitter
Published on

நாம் தினமும்தான் குளிக்கிறோம். ஆனால், குளியல் என்றால் என்னவென்றே தெரியாமல் குளிக்கிறோம். ஊர்களில் கிண்டலாகச் சொல்வார்கள், காக்கா குளியல் குளிக்கிறாய் என்று.. உண்மையில் சொல்லப்போனால் இந்தக் குளியலைத்தான் பெரும்பாலானோர் குளிக்கிறார்கள். குளியல் என்றால் என்ன? அதுவும் இந்த வெப்ப காலத்தில் குளியல் எவ்வளவு முக்கியம்? குளியலால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது குறித்து பார்ப்போம்

2 நிமிஷ குளியல், ஒரு நிமிஷ குளியல் என அவசர குளியல் செய்கிற நமக்கு, குளியல் என்பது வெறும் மேனியை கழுவுதல் மட்டும்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

வள்ளுவ பாடலில், “உறங்குவது போலும்… சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு”..அதாவது அந்த நாளிற்கான பிறப்பு, நம் குளியல் எனப் பாடல் மூலம் சொல்கிறார் வள்ளுவர்.

bathing
bathingtwitter

ஒரு நாளுடைய தொடக்கத்தைக் குளியலாகப் பார்க்க சொல்கிறார் வள்ளுவர். 40 ஆண்டுகளுக்கு முன்பாக ஆற்றில், குளத்தில், கிணத்தில் குளித்தோம். மூச்சடக்கி நீரில் மூழ்கி, மூழ்கி குளிப்போம். குளியலுடன் சேர்த்து மூச்சு பயிற்சியும் சேர்ந்து நடக்கிறது. நமக்குத் தெரியாமலே எவ்வளவு நன்மை பாருங்கள்.

இதுபோல ஏரி, குளம், கிணறு, ஆறு போன்ற நிலை நீரில் குளிக்கையில் உடல் 15-20 நிமிடங்கள் ஊற வைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் உடலின் முந்தைய நாள் வெப்பம் அனைத்து தணிந்து வெளியேறுகிறது. குளிக்கின்ற நாளுக்கான வெப்பத்தை உடல் புதிதாகத் தயாரித்துக் கொள்கிறது. அந்த நாளும் புதிதாகத் தொடங்கும். திறந்த வெளி நீரின் அளவை உடல் ஈர்த்து வைத்துக்கொள்ளும். திறந்தவெளி நீர், தன்னுள் ஈர்த்து வைத்துள்ள பிரபஞ்சத்தின் ஜீவ ஆற்றலை மனிதனுக்கு ஊக்கமாக, செயலாற்றலாக, நோய் எதிர்ப்பு சக்தியாகத் தரும்.

குளிக்கும்போது நீரில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டியது வெறும் ஈரம் மட்டுமா? இல்லை. நீரின் ஓட்ட ஆற்றல், நீர் கவர்ந்து வைத்துள்ள சூரிய ஆற்றல், இப்பிரபஞ்ச ஆகியவை ஆகும். எனவே திறந்தவெளி நீரில் அருகில் வசிப்பவர்கள், வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாரம் 2-3 முறையாவது குளிக்கும் வாய்ப்பை உருவாக்கவும். சுற்றுலா செல்கையில், குளியலுக்கான இடங்களாகத் தேர்ந்தெடுங்கள்.

summer bath
summer bathtwitter

குளியலானது வியர்வையைப் போக்கவோ, அழுக்கை நீக்கவோ இல்லை. இறந்த செல்களை உடலில் இருந்து நீக்குவதற்காக அனைவருக்கும் குளியல் அவசியம்.

முழுக்க இயற்கை சூழலில் வாழ்பவர்கள், முற்றிலும் தூய்மை காற்றைச் சுவாசிப்பவர்கள், இயற்கையில் கிடைக்கும் உணவைச் சமைக்காமல் உண்பவர்கள், எவ்வித மனப்பதற்றம் இல்லாதவர்கள் ஆகியோர் தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நாம் இப்பட்டியலில் இருக்கிறோமா என முதலில் சிந்தியுங்கள்.

இயற்கை சூழலுக்கு நெருக்கமான மலை இன மக்கள் தினமும் குளிப்பது இல்லை. நேர கணக்கெல்லாம் வைத்து உண்பதில்லை. ஆனால், நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். எப்படி? காரணம், இயற்கையின் பெரும் ஆற்றலால்தான்.

அப்போ, மலைவாழ் மக்கள் தினமும் குளிப்பதில்லையா? அவர்களின் உடலின் செல்கள் இறப்பது இல்லையா? அனைத்து உயிர்களிலும் செல்கள் இறக்கும். புதிய செல்கள் உற்பத்தியாவதும் நடந்துகொண்டே இருக்கும். குளியலை குறிப்பிட்ட கால இடைவெளியில் பின்பற்றாத உடல், இறந்த செல்களை அகற்றுவதற்காக வேறொரு உபாயத்தைக் கண்டடையும்.

இயற்கையின்றி வெகுதூரம் விலகிவிட்ட நம் உடலை இயல்பான நிலைக்கு மீட்டெடுக்கக் குளிப்பது அவசியமாகிறது. முன்பு சொன்னது போல, அழுக்கு நீக்குதல், வியர்வை நீக்குதல், இறந்த செல்கள் நீங்குதல், உடலின் வெப்பம் தணித்தல், உடலின் உட்கழிவும் நீக்கப்படுதல், இதனுடன் நீரில் உள்ள நுண்சத்துகள் சருமத்தின் வழியாக உள்ளே ஈர்க்கப்படுதல். எனவே அரை பக்கெட், ஒரு பக்கெட் குளியல் என அளவு இல்லாமல், நுரை போகும் வரை குளிப்பது என இல்லாமல் மேற்சொன்ன முக்கிய விஷயங்களை நினைவில் வைத்து, உணர்ந்து குளிக்க வேண்டும். நீரின் நுண்ணாற்றலை ஈர்ப்பதற்காக உடலைச் சில நிமிடங்கள் நீரில் வைத்திருக்க வேண்டியுள்ளது.

Heat reduce
Heat reducetwitter

உடலின் வெப்பம் தணிந்ததா என எப்படிக் கண்டுபிடிப்பது?

உடலைக் கவனிக்க வேண்டும். நிதானமாகக் கவனிக்கவும். அதில் வெப்பம் உள்ளதா, தணிந்துவிட்டதா எனத் தெரியும். இதைக் கண்டுபிடிக்க, அக்குள் பகுதியையும் கால் இடுக்குகளையும் வயிற்றின் அடிப்பகுதியையும் தொட்டுப் பார்த்தால் வெப்பம் இருப்பதை உணர முடியும்.

குளியல் அறையில் நாம் செலவழிக்கும் கூடுதல் நேரம் 10 நிமிடங்கள் தான் நமது ஒரு நாளுக்கான பலமணி நேர ஆற்றலை அதிகரித்துக் கொடுக்கும்.

தோள்பட்டை வலி, முதுகு வலி, லேசான காய்ச்சல் போன்றவை இருக்கும்போது வழக்கத்தைவிடக் கூடுதலான நேரம் குளித்தால் குளியலறையை விட்டு வெளியே வருகையிலே உடல் உபாதைகள் நீங்கி இருக்கும். உடலில் தொந்தரவுகள் இல்லாதோர், வழக்கத்தைவிடக் கூடுதல் நேரம் குளித்தால் உடலின் வெப்பம் தணிந்து போகும். குளியலும் ஒரு சிகிச்சை என யாரும் மறவாதீர்கள். இப்படி உணர்ந்து, நேரம் கூடுதலாக்கி குளித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும் மேற்சருமம் பளபளப்பாகவும் மாய்ஸ்சர் பதமாகவும் இருப்பதை உணரலாம்.

இயற்கை வைத்தியத்தில், உடலை குளிர்ந்த நீருக்குள் ஊறவைத்துக் குளிப்பது என்பது ஒரு சிகிச்சை முறை. அடிவயிறும் முதுகுத்தண்டும் நீரில் நீண்ட நேரம் ஊற வைக்கப்படும்போது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு ஏற்படுகிறது. இதனால் வாரம் ஒருமுறையாவது உடலை நன்கு நீரில் ஊறவைத்து டப் அல்லது தண்ணீர் தொட்டியில் இருந்து குளிக்கையில் அடிவயிறு இலகுவாகும். முதுகுத்தண்டு பலன் பெறும்.

மூட்டுவலி, முதுகுவலி இருப்பவர்களுக்கும் நீர் தொட்டி குளியல் விரைவில் பலன் அளிக்கும். மருத்து, மாத்திரை, பயிற்சி என எதுவும் இல்லாமல் குளியலே நோயை போக்கிவிடும். இப்போது டப்-பாத் கூட கடைகளில் கிடைக்கிறது. வாங்கிப் பயன்படுத்தலாம்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com