பாத வெடிப்பு : வறண்ட பாதங்களை மென்மையாக்க வழி என்ன?

நம் காலில் உள்ள தோல் மிகவும் தடிமனாக இருக்கும். அதற்குக் கீழே ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.
பாதம்
பாதம் Canva
Published on

பாத வெடிப்பு நம்மில் பலர் சந்திக்கக் கூடிய ஒரு பொதுப் பிரச்னையாகும். பாதத்தில் பிளவு போல வெடிப்புகள் ஏற்படும். இது சிலருக்கு புண்ணாகி தொற்றாக மாறும் அபாயம் உள்ளது.

பாத வெடிப்பு ஏற்படக் காரணங்கள்

தோல் வறட்சி

வறண்ட தோல் பாத வெடிப்புக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. உடலில் நீர்ச்சத்து குறைவதனால் தோல் வறட்சி ஏற்படும். குளிர்காலங்களில் இயல்பாகவே தோல் வறண்டு காணப்படும் இதனாலும் பாத வெடிப்பு ஏற்படும்.

அதிக எடை

நம் காலில் உள்ள தோல் மிகவும் தடிமனாக இருக்கும். அதற்குக் கீழே ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்

அதிக நேரம் நீரில் இருப்பது

நீரில் அதிக நேரம் இருப்பதனால் கால் ஊறுகிறது. இதனால் தோலில் உள்ள எண்ணெய் பொருட்கள் வெளியேறி பாதத்திலுள்ள சருமத்தில் வெடிப்பு ஏற்படும்.

தீர்வுகள்

பாதம்
பாதம்Twitter

லேசான பாத வெடிப்பு இருந்தால்...

வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி சுத்தம்செய்து மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தினால் வெடிப்பு ஏற்படாது. பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் ஆயில், கற்றாழை க்ரீம் போன்றவற்றை மாய்ஸ்ச்சரைசராகப் பயன்படுத்தலாம். எதுவுமே இல்லாதபட்சத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாம். பாதவெடிப்புகள் லேசாக இருந்தால் இந்த சிகிச்சைகள் போதுமானது.

பாதம்
சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா? எந்தெந்த உணவுகள் ரத்தத்தில் வேகமாக கலக்கும்?

சர்க்கரை நோய் உள்ளவர்கள்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாத வெடிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும். பாதவெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோல் முற்றிலுமாக கெட்டுவிடும்.

உணவு முறைகள்

உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டும். நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடல்பருமனாக இருப்பவர்கள் எடையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவை தவிர மூடிய காலணிகள் அணிவது, மாய்ஸ்டரைசர் போட்ட பின் சாக்ஸ் அணிவது, குளிக்கும் போது ஸ்ரப்பரை பயன்படுத்துவது போன்றவையும் மென்மையான பாதங்களைப் பெற உதவும்.

பாதம்
சிறுநீரில் அதிகரிக்கும் துர்நாற்றம் - நோய்களுக்கான அறிகுறியா ? | Nalam 360

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com