சரியோ தவறோ தினமும் காலையில் காபியுடன் எழுவதும் நம்மில் பலரது மாற்ற முடியாத பழக்கமாக இருக்கிறது.
மாற்றிக்கொள்ள முடியாத பழக்கமாக இருப்பதனால் நாம் எந்த டயட்டுக்கு வந்தாலும் காபியை மட்டும் சேர்த்துக்கொள்வோம். பலரும் காபி மூலம் உடலில் சேரும் கலோரிகள், சர்க்கரை குறித்து கவலைப்படுவதே இல்லை.
நாம் தினமும் குடிக்கிற காபியை ஒரு ஆரோக்கியமான உணவாக மாற்றமுடியுமா என்பதைப் பார்க்கலாம்.
எந்த இனிப்பும், பால் அல்லது கிரீமும் சேர்க்கப்படாத பிளாக் காபியை பருகலாம். இது கிட்டத்தட்ட கலோரி இல்லாதது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.
சர்க்கரை இல்லாமல் காபி அருந்த விரும்பாதவர்கள் குறைந்த அளவு சர்க்கரையை உபயோகிக்கலாம். ஸ்டீவியா அல்லது பழ இனிப்புகளைப் பயன்படுத்தலாம்.
அதிக கலோரிகள் இருக்கக் கூடிய கிரீம்கள், சுவையூட்டப்பட்ட சிரப்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். குறைந்த கொழுப்பு உள்ள பால், பாதாமிலிருந்து எடுக்கப்படும் பால் அல்லது ஓட்ஸ் பாலைப் பயன்படுத்தலாம்.
இலவங்கப்பட்டை பொடிஅல்லது வேறுவடிவில் காபியில் தெளிக்கும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust