Gen Z தலைமுறையினருக்கு வேகமாக வயதாகிறதா? - ஆய்வில் வெளியான் அதிர்ச்சி தகவல்!

பொதுவாக மனிதர்கள் சருமம் மற்றும் உடல் அளவில் 30 வயதில்தான் வயதாகத் தொடங்குவர். ஆனால் ஜென் ஜி குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கைமுறை காரணமாக 15 வயதிலேயே வயதாகத் தொடங்கிவிடுகிறது.
Gen Z தலைமுறையினருக்கு வேகமாக வயதாகிறதா? - ஆய்வில் வெளியான் அதிர்ச்சி தகவல்!
Gen Z தலைமுறையினருக்கு வேகமாக வயதாகிறதா? - ஆய்வில் வெளியான் அதிர்ச்சி தகவல்!Twitter

Gen Z தலைமுறையினர் என அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் தமக்கு முந்தைய தலைமுறையினரான மில்லேனியல்களை விட விரைவாக வயதாவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

1997 முதல் 2012 வரை பிறந்த நபர்களை ஜென் ஜி தலைமுறையினர் என அடையாளப்படுத்துகிறோம். இவர்களது வாழ்க்கைமுறையும் உலகில் அதிகமாகும் மாசுபாடு உள்ளிட்ட காரணிகளும் ஜென் ஜி குழந்தைகள் விரைவாக வயதாவதற்கு காரணமாக இருக்கிறது.

பொதுவாக மனிதர்கள் சருமம் மற்றும் உடல் அளவில் 30 வயதில்தான் வயதாகத் தொடங்குவர். ஆனால் ஜென் ஜி குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கைமுறை காரணமாக 15 வயதிலேயே வயதாகத் தொடங்கிவிடுகிறது.

நல்ல உணவுப் பழக்கம் இல்லாதது, இரவில் விழித்திருப்பது, அதிக நேரம் மொபைலை உபயோகிப்பது, அதிக ஸ்கின் கேர் ப்ராடக்ட்களை உபயோகிப்பது(இன்ஃப்ளூயன்சர்கள் தாக்கம்), முறையான வழிகாட்டுதல் இல்லாமல் பாடி பில்டிங்கில் இறங்குவது, கடைகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி சாப்பிடுவது, புகைப்பழக்கம், மது, வைப்பிங் பழக்கம், என பல காரணங்களை அடுக்கிக்கொண்டு போகின்றனர்.

சீக்கிரமாக வயதாவதற்கு மிக முக்கிய மற்றொரு காரணம் மன அழுத்தம். இதற்கு அவசர அவசரமாக இயங்கும் பெருநகர வாழ்க்கை முறை மிக முக்கிய காரணம்.

சமூக ஊடகங்களும் ஸ்ட்ரெஸ் தருவதில் முக்கிய பங்காற்றுகின்றன. சுயமரியாதை, சுய மதிப்பு மற்றும் அவர்களின் முழு நம்பிக்கை அமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு சமூக ஊடகங்கள் காரணமாக இருக்கின்றன.

இந்தா காரணிகளில் சிக்கியிருக்கும் மில்லியனியல் தலைமுறையினருக்கும் வேகமாக வயதாகும் பிரச்னை தொற்றிக்கொண்டிருக்கிறது.

Gen Z தலைமுறையினருக்கு வேகமாக வயதாகிறதா? - ஆய்வில் வெளியான் அதிர்ச்சி தகவல்!
குழந்தைகளை கவர்ந்த Influencer மோகம்: Gen Z குறித்து ஆய்வு கூறுவதென்ன? | Podcast

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com