மதிய உணவுக்குப் பிறகு ஏன் தூக்கம் வருகிறது தெரியுமா?

மதிய உணவுக்குப் பிறகு தூக்கம், மந்தம் மற்றும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும் இதனை ’உணவு கோமா’ என்று அழைப்பார்கள். இப்படி மதியம் வேளையில் தூக்கம் வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Know The Reasons Behind Feeling Sleepy After Lunch ( Rep Image)
Know The Reasons Behind Feeling Sleepy After Lunch ( Rep Image)CANVA
Published on

மதிய உணவு சாப்பிட்ட பிறகு பலருக்கும் தூக்கம் வருவதை போன்ற உணர்வு ஏற்படும், சிலரோ தூங்கியே விடுவார்கள். இதற்கு என்ன காரணம்?

மதிய உணவுக்குப் பிறகு தூக்கம், மந்தம் மற்றும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும் இதனை ’உணவு கோமா’ என்று அழைப்பார்கள். இப்படி மதியம் வேளையில் தூக்கம் வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மதியம் தூக்கம் வர மற்ற காரணங்கள்

மதிய நேரத்தில் நாம் இலகுவான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதால் செரிமானத்திற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.

அதோடு செரிமான அமைப்பிற்கு, உணவை ஜீரணிக்க அதிக இரத்தம் தேவைப்படுகிறது. மதிய உணவுக்குப் பிறகு, மூளைக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. மதிய உணவுக்குப் பிறகு நாம் மந்தமாக இருக்கவும் தூக்கம் வரவும் இதுதான் காரணங்களாகும்.

உணவு உட்கொண்ட உடனேயே, செரிமான செயல்முறையால் இரத்த சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படுகிறது, இதனால் உண்ட மயக்கம் ஏற்படுகிறது.

மதிய நேரத்தில் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

காலை உணவைத் தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை உண்பவர்களுக்குதான் அதிக அளவில் இந்த உணர்வு ஏற்படும். அளவுக்கு அதிகமான உணவை உண்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும். எனவே மதிய உணவுக்கு பிறகு உடலில் சோர்வு ஏற்படும்.

ஆகவே காலை நேரத்தில் முழு தானிய பொருட்கள், ஓட்ஸ், பிரவுன் ரொட்டி, முட்டை மற்றும் பழங்களை சாப்பிடுவது உடலில் சோர்வு ஏற்படுவதை தவிர்க்க உதவும்

Know The Reasons Behind Feeling Sleepy After Lunch ( Rep Image)
பகலில் குட்டி தூக்கம் போடுபவரா நீங்கள்? இதன் பலன்கள் என்ன - புதிய ஆய்வு சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com