2023 ஆம் ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்னென்ன?

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்தியாவில் சில மருந்துகளை தடை செய்துள்ளது. அவை இனி நாட்டில் தயாரிக்கவோ, விற்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படவில்லை. இந்த பதிவானது 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலை வழங்குகிறது.
List of banned medicines in India 2023
List of banned medicines in India 2023Twitter

உடலின் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதனை சரிசெய்து ஆரோக்கியத்தை பாதுக்காக்க பலர் தினசரி மருந்து உட்கொள்கின்றனர்.

சில மருந்துகள் தற்சமயத்திற்கு தீர்வாகவும் பிற்காலத்தில் ஆபத்தாகவும் முடிவடைகிறது. அதனால்தான் அரசாங்கம் அவற்றை தடை செய்கிறது. சமீபத்தில் கூட மாதவிடாய் நேரத்தில் பெண்களால் பயன்படுத்தப்படும் MEFTAL மருந்து குறித்து தகவல்கள் வெளியாகின. இந்த மருத்தை பயன்படுத்தினால் பக்க விளைவுகள் உண்டாகும் என செய்திகள் வெளிவந்தன.

இந்தியாவில், மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வது மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) பொறுப்பாகும். இது இந்தியாவில் சில மருந்துகளை தடை செய்துள்ளது.

அவை இனி நாட்டில் தயாரிக்கவோ, விற்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படவில்லை.

இந்த பதிவானது 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலை வழங்குகிறது.

ஒரு மருந்து தடைசெய்யப்படுவதற்கான காரணங்கள் என்ன?

பாதுகாப்பு

கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு அல்லது மரணம் போன்ற தீவிர பக்க விளைவுகளை சில மருந்துகள் ஏற்படுத்துகின்றன.

பயனற்ற தன்மை

சிகிச்சையளிப்பதில் மருந்து பயனுள்ளதாக இல்லை என்றால் அவை தடைசெய்யப்படுகிறது.

தர சிக்கல்கள்

மருந்து தரம் இல்லாமல் இருந்தால் அல்லது உடலுக்கு சேராத மருத்து சேர்க்கப்பட்டால் தடை செய்யப்படுகிறது.

உற்பத்தி மீறல்கள்

மருந்து பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்யாத வகையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் தடை செய்யப்படுகிறது.

தடை செய்யப்பட்ட மருந்துகளின் வகைகள்

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகளில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.

ஒன்று ஒரு குறிப்பிட்ட மருந்துகள், பாதுகாப்பு அல்லது சிகிச்சைக்கு பயன் இல்லாததால் பயன்படுத்த தடைசெய்யப்பட்ட தனிப்பட்ட மருந்துகள்.

டோஸ் சேர்க்கைகள் (FDCs)

இவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை நிலையான விகிதத்தில் இணைக்கப்பட்டு தயாரிக்கப்படும் மருந்துகள். அவை பாதுகாப்பற்றவை அல்லது அவற்றின் பயன்பாட்டை ஆதரிக்க சரியான அறிவியல் சான்றுகள் இல்லாதவை என கண்டறியப்பட்டால் அவை தடைசெய்யப்படுகின்றன.

தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல்

 • Amidopyrine

 • Phenacetin

 • Nialamide

 • Chloramphenicol (Except for ophthalmic and topical preparations)

 • Phenylpropanolamine

 • Furazolidone

 • Oxyphenbutazone

 • Metronidazole (topical application for acne)

தடை செய்யப்பட்ட டோஸ் சேர்க்கைகள்

 1. Nimesulide + Paracetamol Dispersible Tablet

 2. Amoxicillin + Bromhexine

 3. Pholcodine + Promethazine

 4. Chlopheniramine Maleate + Phenylephrine Hydrochloride + Caffeine

 5. Dextromethorphan Hydrobromide + Chlorpheniramine Maleate + Phenylephrine Hydrochloride

 6. Ambroxol Hydrochloride + Guaiphenesin + Levosalbutamol + Menthol

 7. Dextromethorphan Hydrobromide + Ambroxol Hydrochloride + Guaiphenesin

 8. Diphenhydramine Hydrochloride + Phenylephrine Hydrochloride + Ammonium Chloride

 9. Dextromethorphan Hydrobromide + Phenylephrine Hydrochloride + Chlorpheniramine Maleate

 10. Dextromethorphan Hydrobromide + Doxylamine Succinate + Phenylephrine Hydrochloride

 11. Pholcodine + Dextromethorphan Hydrobromide + Chlorpheniramine Maleate

 12. Ambroxol Hydrochloride + Dextromethorphan Hydrobromide + Guaiphenesin

 13. Dextromethorphan Hydrobromide + Doxylamine Succinate + Guaifenesin

 14. Dextromethorphan Hydrobromide + Chlorpheniramine Maleate + Guaifenesin

List of banned medicines in India 2023
குழந்தைகளின் லைஃப்ஸ்டைல் நோய்கள் முதல் தாய்மார்களின் புற்றுநோய் வரை தடுக்கும் ஒரு மருந்து!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com