மைசூர் பாக்கு முதல் குல்ஃபி வரை: உலகின் மிக சுவையான சாலையோர இனிப்புகள் எவை தெரியுமா?

இந்தியாவின் ஸ்ட்ரீட் ஃபுட்களுக்கு உலக அளவில் சிறப்பிடம் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது டாப் 50 சாலையோர இனிப்புகள் பற்றிய அறிக்கை. அவை எந்தெந்த உணவுகள் எனப் பார்க்கலாம்.
மைசூர் பாக்கு முதல் குல்ஃபி வரை: உலகின் மிக சுவையான சாலையோர இனிப்புகள் எவை தெரியுமா?
மைசூர் பாக்கு முதல் குல்ஃபி வரை: உலகின் மிக சுவையான சாலையோர இனிப்புகள் எவை தெரியுமா?Twitter
Published on

சிறுவயதில் இருந்தே ரோட்டுகடை உணவுகளை சாப்பிட்டுதான் நாம் வளர்ந்திருப்போம்.

வடை, பப்ஸில் தொடங்கி இன்று வட இந்திய உணவுகளான பானி பூரி, பாவ் பாஜி வரை சாலையோரங்களில் நமக்கு விருந்துகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளும், யூடியூப் வ்ளாகர்களும் கூட நம் சாலையோர உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.

இந்தியாவின் ஸ்ட்ரீட் ஃபுட்களுக்கு உலக அளவில் சிறப்பிடம் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது டேஸ்ட் அட்லஸ் என்ற பத்திரிகையின் அறிக்கை.

உலகம் முழுவதும் உள்ள சாலையோர இனிப்புகளில் டாப் 50 எவை? எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவை என்ற பட்டியல் வெளியாகியிருக்கிறது.
இந்த பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டாப் 50 சாலையோர இனிப்புகளில் 3 இந்திய உணவுகள் இடம் பெற்றிருக்கின்றன. 14வது இடத்தில் மைசூர் பாக்கு இடம் பெற்றுள்ளது. மைசூர் பாக்கின் சுவை, சிறப்புகள் குறித்து நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.



18வது இடத்தை குல்ஃபி பிடித்துள்ளது. வட மாநிலங்கள் தென்னிந்தியா வித்தியாசமில்லாமல் எல்லாராலும் விரும்பி உண்ணப்படும் உணவு குல்ஃபி.

32வது இடத்தை குல்ஃபி ஃபலூடா பிடித்துள்ளது.

இந்த பட்டியலின் படி உலகிலேயே சுவையான சாலையோர உணவு போர்ச்சுகல்லில் உள்ள Pastel De Nata என்ற உணவு தான். இந்தோனேசியாவின் செரபி, துருக்கி டாண்டுர்மா, தென் கொரியாவின் ஹட்டோக் மற்றும் தாய்லாந்தின் பா தாங் கூ ஆகிய உணவுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.



இந்த பட்டியல் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பலரும் தங்களது உள்ளூர் உணவுகளின் பெருமையைத் தெரிவிக்கின்றனர்.

சரி, உங்களுக்கு பிடித்த சாலையோர இனிப்பு எது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com