சோற்றுக்கற்றாழையைக் ‘காயகல்ப மூலிகை’ என்று சொல்வார்கள். அதற்கு ‘குமரி’ என்ற பெயரும் உண்டு. இஞ்சியை, மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் பொருள் என்பார்கள். இஞ்சிக்கும் சோற்றுக்கற்றாழைக்கும் மிகச் சிறந்த பலன்களைத் தரும் ஆற்றல் உண்டு. இது பலருக்கும் தெரியாத விஷயம்.
கற்றாழைக்கு இவ்வளவு பலன் இருக்கிறதா? ஆம்… கற்றாழை செடியின் மடல்களை நன்றாக உற்று பாருங்கள். ஒன்றன் மேல் ஒன்று வரிசையாகச் சுற்றி இருக்கும். பூ போலக் காட்சியளிக்கும்… புதிய கற்றாழை செடி இல்லாமல் நன்கு முற்றிய கற்றாழை செடியின் மடல்களே புற்றுநோய் அழிக்கும் பலன்களை கொண்டிருக்கும். இதில் இருந்து மருந்து தயாரிப்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
என்னென்ன தேவை?
ஓராண்டுக்கு மேல் முற்றிய கற்றாழை நுனையில் இருந்து அடிநோக்கி 13வது இலை அல்லது அதற்கு மேல் உள்ள இலையை (கற்றாழை மடலை) எடுத்து, நன்றாகக் கழுவி விட்டு முட்களை மட்டும் சீவி விட வேண்டும். ஒரு செ.மீ அளவுள்ள சிறு துண்டுகளாகத் தோலோடு கற்றாழை மடலை நறுக்கி கொள்ள வேண்டும். இவை 500 கிராம் இருக்க வேண்டும்.
முற்றிய தோல் சீவிய இஞ்சியைச் சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். இது 50 கிராம் இருக்க வேண்டும். கொஞ்சம் கூடக் கலப்படம் இல்லாத சுத்தமான தேன் 400 கிராம் தேவை. இதனுடன் பிராந்தி அல்லது விஸ்கி 50 மி தேவைப்படும்.
தயாரிப்பது எப்படி?
நறுக்கிய இஞ்சி மற்றும் சோற்றுக்கற்றாழை, தேன், விஸ்கி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு ஓரிரு சுற்று அரைத்துக்கொள்ள வேண்டும். கூழ் போல நீண்ட நேரம் வைத்து அரைத்துவிட கூடாது. பஞ்சாமிர்தத்தைப் பிசைந்தது போல இருந்தாலே போதுமானது. இதை அடுத்து, ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள கண்ணாடி பாட்டிலில் மூடி குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். தினமும் இதைப் புதிதாகத் தயாரிக்க முடியும் என்பவர்கள் பிராந்தியோ விஸ்கியோ சேர்க்க தேவையில்லை. புதிதாகத் தயாரிக்க முடியாதவர்கள் மட்டும் பிராந்தியோ அல்லது விஸ்கியோ சேர்க்கலாம். கெட்டுப் போகாமல் இருப்பதற்காகத்தான்.
பசித்த பிறகே உணவு சாப்பிட்டிருக்க வேண்டும். அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து ஒரு மேசை கரண்டி அளவு எடுத்து தினமும் சாப்பிட வேண்டும். ஒரு நாளும் தவற விடகூடாது.
இதைச் சாப்பிட எந்தப் பத்தியமும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எனினும், புற்றுநோயாளிகளோ அனைவருமே கூட காரம், புளிப்பு, உப்பு ஆகியவற்றை அளவாகவோ குறைத்தோ சாப்பிடுவதுதான் நல்லது. இந்த மருந்தை சாப்பிடுபவர்கள் எல்லாவிதமான அசைவ உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஆங்கில மருத்துவ அறுவை சிகிச்சை செய்தவர்களும் சரி, கீமோதெரபி, ரேடியேஷன் தெரபி, சித்தா, ஆயுர்வேத போன்ற எந்த மருத்துவ முறையைப் பின்பற்றினாலும் சரி. இந்த மருந்தைத் தாராளமாக உட்கொள்ளலாம். ஏனெனில் இதில் இருப்பது சோற்று கற்றாழை, தேனும் இஞ்சியும்தான். அனைத்துமே மூலிகை உணவுகள் என்பதால் எந்தப் பக்க விளைவுகளோ பின்விளைவுகளோ ஏற்படாது. இந்த மருந்தை சாப்பிடுபவர்கள் கட்டாயமாகப் புகைப் பிடிப்பதோ, புகையிலையைச் சுவைப்பதோ, மதுக் குடிப்பதோ கூடாது.
அடுத்ததாக, புற்றுநோய்க்கு மூல காரணம் என்ன? நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் பாதிப்பு. நோய் எதிர்ப்பு சக்தி மிக மிகக் குறைந்து போவதால்தான். புற்றுநோய் செல்களை அழிக்க உடல் திணறுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட நோய் எதிர்க்கும் தன்மை கொண்டவற்றில் மூலிகை தாவரங்களுக்குச் சிறப்பான இடம் உள்ளது. அதில் மஞ்சளும் கருமிளகும் சிறந்தது எனப் பல ஆய்வுகளில் சொல்லப்பட்டுள்ளது. மருத்துவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். மஞ்சளும் கருமிளகும் புற்றுநோயை எதிர்க்கும் வல்லமை கொண்டவை என்று…
யார் சாப்பிடலாம்?
புற்றுநோய் உள்ளவர்களும் சாப்பிடலாம். புற்றுநோய் வருவதைத் தடுக்க விரும்புபவர்களும் சாப்பிடலாம். குடும்பத்தில் பரம்பரையில் புற்றுநோய் பாதிப்பு இருந்து, தனக்கு வராமல் இருக்க நினைப்பவர்களும் சாப்பிடலாம். அனைவருக்குமே நன்மை தரும் மருந்து இது.
தேவைப்படுபவை
நன்கு விளைந்த பதப்படுத்தப்பட்ட உலர்ந்த விரலி மஞ்சள் சூரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கிலோ அளவில் தேவை. அதோடு கருமிளகு சூரணம் 500 கிராம் அளவில் தேவை.
தயாரிப்பது எப்படி?
மேற்சொன்ன இரண்டு சூரணங்களையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். காற்றுப்புகாத டப்பாவில் மூடி பாதுகாப்பாக வைக்கலாம். இந்தச் சூரணத்தை 3 மாதம் வரை பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்த இதன் ஆற்றல் குறைந்து கொண்டே போகும் என்பதால் 3 மாதத்துக்கு ஒரு முறை புதிதாக தயாரித்துக் கொள்வது நல்லது.
பசித்த பிறகே உணவை சாப்பிட்டு இருக்க வேண்டும். அதன் பிறகு, உணவு சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து ½ தேக்கரண்டி அளவு இந்த சூரணத்தை எடுத்துச் சுத்தமான தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.
இதற்கும் எந்த மருந்தும் பத்தியமும் கிடையாது. எனினும் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மது, புகை, புகையிலை கூடவே கூடாது. ஆங்கில மருத்துவ அறுவை சிகிச்சை செய்தவர்களும் சரி, கீமோதெரபி, ரேடியேஷன் தெரபி, சித்தா, ஆயுர்வேத போன்ற எந்த மருத்துவ முறையைப் பின்பற்றினாலும் சரி. இந்த மருந்தைத் தாராளமாக உட்கொள்ளலாம். எந்த நோய் இல்லாதவர்களும் சாப்பிடலாம் நோய் எதிர்ப்பு சக்திகாக…