உங்கள் மூளையை நெகட்டிவாக்க கூடிய 5 பழக்கங்கள் இவைதான்!என்னென்ன?

உங்கள் மனதையும் நினைவாற்றலையும் எதிர்மறையாக பாதிக்கும் பழக்கங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
Note These 5 Habits That Negatively Impact Your Brain
Note These 5 Habits That Negatively Impact Your BrainTwitter
Published on

ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு மூளையின் ஆரோக்கியம் அவசியமானதாகும்.

சில பழக்கவழக்கங்கள் நமது அறிவாற்றல் திறன்களை பலவீனப்படுத்தி, படிப்படியாக மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது பற்றி நீங்கள் அறிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்.

உங்கள் மனதையும் நினைவாற்றலையும் எதிர்மறையாக பாதிக்கும் பழக்கங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பது

2018 இல் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது மூளைக்கு தீங்கு விளைவிக்கும். அதாவது, நமது மூளையின் முக்கியமான நினைவகம் தொடர்பான பிரிவில் மாற்றங்கள் ஏற்படலாம்.

15 முதல் 30 நிமிடங்கள் உட்கார்ந்த பிறகு உடல் செயல்பாடுகளில் ஈடுபடுமாறு நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

சமூகமயமாக்கல் இல்லாமை

தனிமைப்படுத்தல் சோக உணர்வுகளுடன் தொடர்புடையது என்கின்றனர் நிபுணர்கள். மேலும் இது அறிவாற்றல் திறன்களின் வீழ்ச்சியை துரிதப்படுத்தும்.

நீங்கள் அதிக எண்ணிக்கையிலான மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எதையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய இரண்டு அல்லது மூன்று நபர்களைக் கண்டறிவது போதுமானது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நொறுக்குத் தீனிகளை அதிகமாக உண்பது

உருளைக்கிழங்கு சிப்ஸ், குளிர்பானங்கள் போன்ற ஜங்க் உணவுகளை உட்கொள்ளுவதால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது. இதனால் மூளையின் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோன்ற ஜங்க் உணவுகளை தவிர்த்து பெர்ரி, முழு தானியங்கள், பச்சை இலைக் காய்கறிகள் உள்ளிட்டவை மூளையின் செயல்பாட்டை உகந்ததாக பராமரிக்க உதவுகிறது. அறிவாற்றல் வீழ்ச்சியை குறைக்கிறது.

Note These 5 Habits That Negatively Impact Your Brain
உங்களுக்கு அடிக்கடி இந்த கனவு வருதா? அறிவியல் சொல்லும் அர்த்தம் என்ன?

தூக்கமின்மை

ஆய்வின் படி வயது வந்தவர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் ஏழு முதல் எட்டு மணிநேர தூக்கத்தை அடையத் தவறவிடுகின்றனர்.

நினைவாற்றல், பகுத்தறிவு உள்ளிட்ட அறிவாற்றல் திறன்கள், ஒரு இரவில் ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும்போது குறைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

வழக்கமாக உறங்கும் நேரத்தை விட ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே உறங்கச் செல்வது நல்லது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த அணுகுமுறை தாமதமாக எழுந்திருப்பதைக் குறைக்க உதவுகிறது. போதுமான தூக்கம் உங்கள் மூளை மற்றும் உடலுக்கு தேவையான சக்தியை வழங்கும்.

அதிக நேரம் இருளில் இருப்பது

பொதுவாக இருளில் இருந்தால் மனச்சோர்வு உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.

இது மூளையின் செயல்பாட்டை எதிர்மறையாக பாதிக்கும். மூளையின் செயல்திறனைப் பராமரிப்பதில் சூரிய ஒளி முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

Note These 5 Habits That Negatively Impact Your Brain
எப்போதுமே Tired ஆக இருக்க இந்த 5 விஷயங்கள் தான் காரணம் - என்னென்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com