கர்ப்பிணிகளே உஷார்.! இந்த உணவுகளை சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு உடல் பருமன் ஏற்படும்!

பாக்கெட்டில் கிடைக்கும் ஸ்நாக்ஸ், இனிப்பூட்டப்பட்ட பானங்கள், மிட்டாய் வகைகள், ஜன்க் ஃபுட்கள் அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும் என நாம் அறிந்திருப்போம். இது வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் தீங்கு விளைக்கும் என எச்சரிக்கிறது ஓர் ஆய்வு.
கர்பிணிகளே உஷார்..! இந்த உணவுகளை சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு உடல் பருமன் ஏற்படும்!
கர்பிணிகளே உஷார்..! இந்த உணவுகளை சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு உடல் பருமன் ஏற்படும்!Canva
Published on

குழந்தை வயிற்றிலிருக்கும் போது தாய் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டால் குழந்தைக்கு உடல்பருமன் ஏற்படும் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நமது நவீன வாழ்க்கை முறை பல உடல் நல சிக்கல்களை ஏற்படுத்துவதாக இருக்கிறது. குறிப்பாக உணவுப் பழக்கம் நாளுக்கு நாள் அபாயமானதாக மாறுகிறது. மருத்துவர்களும் இது குறித்து தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

பாக்கெட்டில் கிடைக்கும் ஸ்நாக்ஸ், இனிப்பூட்டப்பட்ட பானங்கள், மிட்டாய் வகைகள், ஜன்க் ஃபுட்கள் அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும் என நாம் அறிந்திருப்போம். இது வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் தீங்கு விளைக்கும் என எச்சரிக்கிறது இந்த ஆய்வு.

தி பி.எம்.ஜே என்ற இதழில் வெளியாகியிருக்கிறது இந்த ஆய்வு. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு கர்ப்பிணிகள் தங்களது குழந்தைகள் குறித்து பொறுப்புணர்வுடன் இருக்க அறிவிறுத்துகிறது.

கடந்த 2020ம் ஆண்டு உலகில் 3.9 கோடி குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார மையம் கூறியது. இதனால் இதய நோய்கள், சர்க்கரை நேய், புற்று நோய் ஏற்படும் அபாயமும் விரைவில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புகளும் உள்ளது என WHO கூறியிருந்தது.

கர்பிணிகளே உஷார்..! இந்த உணவுகளை சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு உடல் பருமன் ஏற்படும்!
தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? சரி செய்ய மருத்துவர்கள் கூறும் உணவுகள் என்னென்ன?

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மட்டுமின்றி இன்னும் சில காரணங்களும் குழந்தைகளுக்கு உடல்பருமனை ஏற்படுத்துகின்றன.

குழந்தைப் பேறு காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கத்துக்காக அட்டவணையை தயாரித்து கடைபிடிப்பது பெரிய அளவில் உதவக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குழந்தைப் பேற்றுக்கு பின்னரும் குழந்தைகளை பதப்படுத்தப்பட்ட உணவுகளிடம் இருந்து விலக்கி வைப்பது நல்லது என்றும் கூறுகின்றனர். அம்மாகளைப் பார்த்து தான் குழந்தைகள் ஜன்க் ஃபுட்களை விரும்புகின்றனர் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது.

ஜன்க் ஃபுட்களால் தங்களை விட தங்கள் குழந்தைகள் உடல்பருமன் அதிகரிக்க 20% அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதை தாய்மார்கள் நினைவில் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கர்பிணிகளே உஷார்..! இந்த உணவுகளை சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு உடல் பருமன் ஏற்படும்!
பாதாமை விட சிறந்தது! ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு உணவு - என்ன அது? எவ்வளவு பலன்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com