ஒவ்வொரு நாளும் நமக்கு எழும் கேள்வி இன்று என்ன சமைப்பது? என்ன சாப்பிடுவது? மிக எளிதான கேள்வியாக இருந்தாலும் இதற்கு தினசரி விடைதேடுவது கடினமாக இருக்கும். ஏனெனில் தினமும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம்.
நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் உணவின் வழியாக பெற வேண்டும். அன்றாட உணவில் எதாவது ஒரு சத்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் அது குறைபாடு ஏற்பட வழிவகுக்கும்.
சரி ஒரு சத்தான உணவை எப்படிக் கண்டுபிடிப்பது? நாம் தினசரி சாப்பாட்டில் ஒவ்வொரு வேளையும் விதவிதமான உணவுகளை சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் இருப்பதிலேயே சத்தான உணவு என்றால் எது?
இருப்பதிலேயே ஆரோக்கியமான மீலை உருவாக்கியிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அது ஒமேகா 3 அதிகம் இருக்கும் மீன் எண்ணெய், தசை வளர்ச்சிக்கு உதவும் புரதங்கள், மூளையை வலிமையாக்கும் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்திருக்கிறது.
லெதர்ஹெட் உணவு ஆராய்ச்சி மையம் இந்த மீல் உருவாக்கியிருக்கிறது. இந்த ஆரோக்கிய உணவில் என்னென்ன இருக்கிறது என்றுப் பார்க்கலாம்,
ஃப்ரெஷ்சான சால்மோன் மீன்
கீரை சாலட் (ஆலிவ் எண்ணெய்யுடன்)
நார்ச்சத்து நிறைந்த பல தானியங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட ப்ரெட்
பருப்பு மற்றும் காய்கரிகள் சேர்த்த சிக்கன் கசரோல் ( chicken casserole)
தயிர் கொண்டு செய்யப்படும் இனிப்பு. வால்நட்ஸ் டாபிங் மற்றும் சர்க்கரை இல்லாத காரமெல் சாஸ் உடன்.
சால்மன் மீன் மூளை மற்றும் இதயத்தின் இயக்கத்துக்கு சிறந்தது. ஆலிவ் எண்ணெய் சேர்த்த கீரை கொழுப்பை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும். சிக்கன் கசரோல் (கிரேவி போன்ற உணவு) இரும்புச் சத்து அதிகரிக்க உதவும். கடைசியாக சொல்லப்பட்ட இனிப்பு செரிமானத்துக்கும் இரத்தத்தில் குளுகோஸ் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கவும் உதவும்.
இந்த மீலுடன் சார்கோல் மாத்திரை மற்றும் வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ராய்ட்ஸ் நிறைந்த ஜூஸ் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
சிறந்த மீல் ஆன இது இப்போது பல விமானங்களில் வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண நாட்களிலும் கூட இதனை எடுத்துக்கொள்ள முடியும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust