தினமும் தலைக்கு ஷாம்பு போடுவதா அல்லது வாரத்திற்கு ஒருமுறை ஷாம்பு போடுவதா என்ற குழப்பம், நீண்ட காலமாக இருந்து வருகிறது. முடி வகை, உச்சந்தலையின் நிலை, வாழ்க்கை முறை மற்றும் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அதன் பயன்பாடு வேறுபடுகிறது.
தினமும் ஷாம்பு போடுவது என்பது பலருக்கு குறிப்பாக எண்ணெய் பசையுள்ள உச்சந்தலை உள்ளவர்களுக்கு ஒரு பொதுவான நடைமுறையாகும்.
தினசரி ஷாம்பு பயன்படுத்துவதன் மூலம் அதிகப்படியான எண்ணெய், அழுக்கு, வியர்வை மற்றும் ஸ்டைலிங் பொருட்கள் ( டை, கலரிங்) நீக்கி முடி சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
வெப்பமான காலநிலையில் வாழும் நபர்களுக்கு அல்லது தலையில் பொடுகு, உச்சந்தலையில் எரிச்சல் போன்ற பிரச்னைகளை உண்டாக்குவதை தடுக்கவும் தினசரி ஷாம்பு தேவைப்படலாம்.
ஆனால் தினமும் ஷாம்பு பயன்படுத்தலாமா? தினமும் ஷாம்பு போடுவது முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி வறட்சி, முடி விரைவில் உடையக்கூடிய தன்மைக்கு வழிவகுக்கிறது. சில ஷாம்பூக்களில் அதிகமான இரசாயனங்கள் உள்ளன.
அவை இந்த சிக்கல்களை ஏற்படுத்தலாம். தினசரி ஷாம்பு பயன்படுத்துவது சில முடி வகைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உயர்தர, சல்பேட் இல்லாத ஷாம்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் கண்டிஷனிங், மாய்ஸ்சரைசிங் மற்றும் பாதுகாப்பு ஸ்டைலிங் போன்ற பிற முடி பராமரிப்பு நடைமுறைகளை இணைத்துக்கொள்வதும் நல்லது என்கின்றனர்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews