டீக்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டுமா? நிபுணர் கூறுவதென்ன?

டீ மற்றும் காபியில் டானின் என்ற கலவை உள்ளது. இது தேநீர் அல்லது காபியில் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. இந்த பொருளின் காரணமாகவே ஒரு மாதிரியான அடிக்‌ஷன் ஏற்படுகிறது.
Should One Drink Water Before Tea? What The Expert Says
Should One Drink Water Before Tea? What The Expert SaysTwitter
Published on

இந்தியாவில் டீயும் காபியும் அதிகம் பருகப்படும் பானங்கள். இவை கிட்டத்தட்ட நம் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவும் பார்க்கப்படுகிறது.

சில சமயம் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போதெல்லாம் டீ அல்லது காபியை விரும்புகிறோம். சிலர் படுக்கையில் இருந்து எழுந்ததிலிருந்து மீண்டும் தூங்குவதற்குள் இரண்டு அல்லது மூன்று முறை தேநீர் அல்லது காபியை அருந்துகிறார்கள்.

ஆனால் டீ மற்றும் காபி இரண்டும் அமிலத்தன்மை கொண்டவை என்பதும், இரண்டுமே வயிற்றில் வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.

tea
teacanva

அதிகமாக டீ அல்லது காபி உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்கின்றனர்.

சிலர் டீ அல்லது காபி குடிக்கும் முன் தண்ணீரை குடித்து அதன் அமில தன்மையை குறைக்கிறார்கள். அதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன?

தேநீரின் தீங்கு விளைவிக்கும் காரணிகள்

டீ மற்றும் காபியில் டானின் என்ற கலவை உள்ளது. இது தேநீர் அல்லது காபியில் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. இந்த பொருளின் காரணமாகவே ஒரு மாதிரியான அடிக்‌ஷன் ஏற்படுகிறது. குடல் திசுக்களை சேதப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இதனால் வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குமட்டல், வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளையும் இது ஏற்படுத்தும்.

Should One Drink Water Before Tea? What The Expert Says
இந்தியாவில் டீ அதிகமாக எங்கு கிடைக்கும்? தேநீர் உற்பத்தியில் டாப் 7 இந்திய மாநிலங்கள்!
Tea
TeaCanva

தேநீர் வாய் மற்றும் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். இருப்பினும், ஒரு நாளில் நாம் எவ்வளவு தேநீர் உட்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது. தேநீருக்கு முன் தண்ணீர் குடிப்பது உடலின் PH சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

தண்ணீர் வாயில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தப்படுத்துகிறது, அதன் பக்க விளைவுகளை குறைக்கிறது என்கின்றனர்.

டீ அல்லது காபிக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் குடித்தால், அது தேநீரில் உள்ள அமிலத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Should One Drink Water Before Tea? What The Expert Says
வெள்ளை டீ முதல் இராணி சாய் வரை : இந்தியாவில் இருக்கும் 18 தேநீர் வகைகள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com