ப்ளூ டூத் ஹெட்ஃபோன் பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன?

நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்ட ஹெட்ஃபோனினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஹெட்ஃபோன், ப்ளூ டூத்
பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் பின்விளைவுகள் தெரியுமா?
ஹெட்ஃபோன், ப்ளூ டூத் பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் பின்விளைவுகள் தெரியுமா?Canva
Published on

பேருந்து, ரயில் போன்ற பயணங்களின் போது காதில் ஹெட்போன் இல்லாத ஒருவரை பார்ப்பதே அரிதாகிவிட்டது. அந்தளவு நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்ட ஹெட்ஃபோனினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கேட்கும் திறனில் பாதிப்பு

ஹெட்ஃபோனில் அதிகமான சத்தத்தில் பாடல்களை கேட்பது நாளடைவில் கேட்கும் திறனை பாதிக்கும். ஹெட்ஃபோன் மூலம் எழும் ஒலி அலைகள் தொடர்ந்து செவி பறையைத் தாக்குவதால் எதிர்காலத்தில் பாதிப்புகள் வரக்கூடும்.

இதயத்துக்கும் ஆபத்து

காதுக்கு மட்டுமல்லாமல் ஹெட்ஃபோனை அதிக நேரம் பயன்படுத்தினால் இதயத்துக்கும் ஆபத்து ஏற்படும் என கூறப்படுகிறது. ஹெட்ஃபோனில் இருந்து வரும் அதீத ஒலியால் இதயம் வேகமாக துடிப்பதுடன் நாளடைவில் பாதிப்புகள் வரலாம் எனவும் கூறப்படுகிறது.

தலைவலி

ஹெட்ஃபோன்களில் இருந்து வெளியேறும் மின்காந்த அலைகள் மூளையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இதனால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளை உண்டாக்கும்.

மன அழுத்தம் ஏற்படும்

மன அழுத்தத்தை போக்க பலரும் ஹெட்ஃபோன்களை பயன்படுத்தி பாடல் கேட்பது இப்போது வழக்கம் ஆகிவிட்டது. ஆனால் நீண்ட நேரம் ஹெட்ஃபோன் பயன்படுத்தினால் அதுவே மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுத்தும் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

ஹெட்ஃபோன், ப்ளூ டூத்
பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் பின்விளைவுகள் தெரியுமா?
Smart phone, laptop பயன்படுத்தினால் சீக்கிரம் வயதாகிவிடுமா? ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com