ஸ்பெயின் : பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் நேரத்தில் 3 நாள் விடுமுறை

வலிகளோடு வேலைப்பளுவையும் சுமக்க வேண்டாம் என்று, மாதவிடாய் நாட்களில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மூன்று நாள் விடுமுறை அறிவித்துள்ளது ஸ்பெயின் அரசு. ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற விடுப்பை அளித்த முதல் அரசாகிறது ஸ்பெயின் .
Sanitary Kit
Sanitary KitTwitter

பலதரப்பட்ட இன்னல்களுக்கு இடையில் ஆண்களும் பெண்களும் வேலைக்கு சென்று தங்கள் குடும்பத்திற்காக உழைத்து வருகின்றனர். முக்கியமாக பெண்கள் மாதவிடாய் நாட்களிலும் விடாது வேலைக்கு சென்றுகொண்டு தான் இருக்கின்றனர். மாதத்தில் இத்தனை நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற வசதி பல நிறுவனங்களில் இருந்தாலும், அவை மாதவிடாய் நாட்களோடு ஒப்பிட்டு விடுப்பு எடுத்துக்கொள்வதென்பது எல்லா நேரங்களிலும் சாத்தியமாவதும் இல்லை.

இப்படி நிலை இருக்க, ஸ்பெயின் அரசு கொடுத்துள்ள இந்த அறிக்கை, பெண்களை கவரும் விதமாகவும், இன்னொரு புறம் பெறும் வரவேற்பையும் பெற்றுள்ளது. அப்படி என்ன அறிவிப்பு ?

Spain Flag
Spain FlagTwitter

ஸ்பெயின் நாட்டில் இனி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, மாதத்தில் மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படும் என்பது தான் அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பை அடுத்த கேபினெட் கூட்டத்தில் அப்ரூவ் செய்யப்போகிறது அரசு. மேலும், பள்ளிகளில் மாணவிகளுக்கான சானிட்டரி நாப்கின்கள் தேவையான அளவு வைப்பில் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதை தவிர, 16, 17 வயது பெண்கள், கருக்கலைப்பு செய்துகொள்ள விரும்பும் பட்சத்தில், தங்கள் பெற்றோரின் அனுமதி இல்லாமலேயே சேவைகளை அணுக திட்டங்கள் செய்யப்பட்டுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Napkins
Napkins Twitter

ஸ்பெயின் நாட்டின் சமத்துவம் மற்றும் பாலின வன்முறைக்கு எதிரான வெளிவிவகாரச் செயலாளர் ஏஞ்செலா ரோட்ரிகஸ், கடந்த மார்ச் மாதம் விடுத்த அறிவிப்புகளை தொடர்ந்து இந்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

இது மட்டுமல்லாமல், அந்நாட்டின் சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டேம்போன்களுக்கு, வரி விலக்கும் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Sanitary Kit
தாய்மை அடைய சரியான வயது இது தான் - காரணமும் விளக்கமும் | Nalam 360

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com