Summer Skin Care: சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது நல்லதா? எப்படி பயன்படுத்துவது?

சன்ஸ்க்ரீன் நல்லது தானா? அதனால பிரச்சனைகள் வருமா? எப்படி பயன்படுத்துவது? யார் யார் பயன்படுத்தலாம்? என்ன சன்ஸ்க்ரீன் வாங்கலாம்? இப்படிப் பல சந்தேகங்கள் நமக்கு இருக்கும்.
சன்ஸ்க்ரீன்
சன்ஸ்க்ரீன் Canva
Published on

கோடைக்காலம் வந்துவிட்டது இனி ஹெல்த மெயின்டெய்ன் பண்ண சில விஷயங்களைச் செய்ய வேண்டியது அவசியம். அதில் மிக முக்கியமானதும் சவாலனதும் நம் சருமத்தை பராமரிப்பது தான். சன்ஸ்க்ரீன் அந்த வேலையை ரொம்ப சுலபமாக்கி விடுகிறது. ஆனால் சன்ஸ்க்ரீன் நல்லது தானா? அதனால பிரச்சனைகள் வருமா? எப்படி பயன்படுத்துவது? யார் யார் பயன்படுத்தலாம்? என்ன சன்ஸ்க்ரீன் வாங்கலாம்? இப்படிப் பல சந்தேகங்கள் நமக்கு இருக்கும்.


சன்ஸ்கிரீம் எப்படி பயன்படுத்துவது?

  • சன்ஸ்க்ரீன் கோடைக்காலத்தில் வெளியில் செல்வோர் நிச்சயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று.

  • இது அழகுப் பொருள் அல்ல, அத்தியாவசியமான ஒன்று.

  • சன்ஸ்கிரீமை 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

  • நீங்கள் பிக்னிக் செல்லும் நாட்களில் உடல் முழுவதும் (சூரிய வெளிச்சத்தில் படும் இடங்களில்) பூசிக்கொள்ள வேண்டும். மிக சிறிதாக எடுத்து உடல் முழுவதும் பூசாமல் தேவையான அளவை தயங்காமல் பயன்படுத்த வேண்டும்.

  • சன்ஸ்கிரீம் அதிக பட்சமாக 3 மணி நேரம் வரை மட்டுமே செயலாற்றும். எனவே வெளியில் செல்லும் போது எடுத்துக்கொண்டு அவ்வப்போது பூசவும்.

  • ஒவ்வொரு முறையும் முகம், கைகளை கழுவிவிட்டு சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது நலம்.

  • சன்ஸ்கிரீம் சருமத்தில் படிந்து செயலாற்ற 15 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். அதனால் வெளியில் கிளம்புவதற்கு 15 நிமிடத்துக்கு முன்னர் சன்ஸ்கிரீமை அப்ளை செய்துவிடவும்.

  • சன்ஸ்கிரீனை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

சன்ஸ்க்ரீன்
சன்ஸ்க்ரீன் Canva
சன்ஸ்க்ரீன்
Weight loss drink : கொழுப்பைக் கரைப்பதில் நம்பர் 1 மூலிகை!

எந்த சன்ஸ்கிரீமை பயன்படுத்தலாம்?

  • சன்ஸ்கிரீனுக்கு மாற்றாக மாய்ஸ்டரைசர் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

  • சன்ஸ்கிரீம் வாங்கும் போது மிகக் கவனமாக எக்ஸ்பைரி தேதியைப் பார்க்கவும்

  • சன்ஸ்கிரீமின் Sun Protection Factor 30 இருந்தால் கூட போதுமானது. அதிக SPF இருக்கும் சன்ஸ்கிரீன் அதிக விலை கொண்டதாக இருக்கும்.

  • உங்கள் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீமை நிபுணர்களிடம் ஆலோசித்து வாங்கலாம்.

  • உங்கள் முகத்துக்கேற்ற சன்ஸ்கிரீன் ஜெல், க்ரீம், லோஷன் என எந்த வடிவிலும் வாங்கலாம்.

    சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதுடன் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். தலையில் தொப்பி அணிந்து அல்லது குடையுடன் வெளியில் செல்லவும். கை வரை மறைக்கும் விதமான ஆடைகளை அணியலாம். வெளிர் நிற ஆடைகளை அணிவது நல்லது.

சன்ஸ்க்ரீன்
சம்மர் சீசனில் அவசியம் சாப்பிட வேண்டிய 9 பழங்கள்! - ஓர் எளிய விளக்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

சன்ஸ்க்ரீன்
சாதாரண குளியலை எப்படி மூலிகை குளியலாக மாற்றித் தோலை ஆரோக்கியமாக்குவது?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com