உடலுறவு : உங்கள் கூடல் சிறப்பாக இருக்க இதனை செய்யுங்கள்! | இது ச்ச்சீ விஷயமல்ல

உராய்வு காரணமாக ஏற்படும் எரிச்சலால் சில நேரங்களில் தடங்கல் ஆகலாம். அதனால், இந்த அசௌகர்யத்தைக் குறைக்கும் லூப்ரிகன்டுகளைப் பயன்படுத்தினால் செக்ஸ் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று மகளிர் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடலுறவு : உங்கள் கூடல் சிறப்பாக இருக்க இதனை செய்யுங்கள்!

உடலுறவு : உங்கள் கூடல் சிறப்பாக இருக்க இதனை செய்யுங்கள்!

Pixabay

Published on

உடலுறவு என்பது 2 நபர்களை உடலளவில் மட்டும் இணைக்கும் விஷயம் அல்ல. உடலை தாண்டி மனதையும் இணைக்கும் ஒரு விஷயம். மனிதர்களை பொருத்தமட்டில் உடலுறவு என்பது இன்பம் சார்ந்த விஷயமாக இருக்கலாம். ஆனால் அது இரண்டு உள்ளங்களை இணைக்கும் விஷயம் என்பது உண்மை. அதனால் உடலுறவு சிறப்பாக இருக்க வேண்டும்.

Pixabay

உடலுறவு ஈடுபாடு

ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு உணர்ச்சியில் வயது வேறுபாடு எதுவும் இல்லை. ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவை உடலுறவில் ஆர்வம் தோன்றாததற்கு காரணமாகும். மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரையிலும் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும். அதனைப்போல, செக்ஸ் ஹார்மோன் டோஸ்டேரோன் சுரக்கும் 70, 80 வயதுவரை ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடும் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பெண் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை உடல் உறவு பற்றி நினைத்து பார்கின்றார் என ஒரு ஆய்வு கூறுகிறது. அதனால், உடலுறவு என்பதும் ஆண் சார்ந்து சிந்திப்பதை தவிருங்கள்.

சரி… உடலுறவு சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

Pixabay

சிறப்பான உடலுறவுக்கு

சிறப்பாக உடலுறவு கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் முதலில் உங்கள் வழக்கப்படியான விஷயங்களிலிருந்து வெளியே வர வேண்டும். அதாவது கடமையாக இல்லாமல் காதலாகக் களத்தில் இயங்க வேண்டும்.

உராய்வு காரணமாக ஏற்படும் எரிச்சலால் சில நேரங்களில் தடங்கல் ஆகலாம். அதனால், இந்த அசௌகர்யத்தைக் குறைக்கும் லூப்ரிகன்டுகளைப் பயன்படுத்தினால் செக்ஸ் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று மகளிர் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடலுறவை மேம்படுத்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல இயற்கை அம்சங்களில் உடற்பயிற்சியும் ஒன்று என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் இதயம் மற்றும் தசைகளுக்காக நீங்கள் செய்யும் உடற்பயிற்சி நல்ல உடலுறவுக்கும் முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் இதயத்துக்குப் பாயும் அளவு ரத்தம் உங்கள் பிறப்புறுப்புக்கும் பாய்கிறது என்பதை நினைவில் கொண்டால், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் புரியும்.

எடுத்துக்காட்டாக, விறைப்புத்தன்மை குறைபாடுள்ள (ED) ஆண்கள், உடற்பயிற்சியை உள்ளடக்கிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால், இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட முடியும் என்று ஜர்னல் ஆஃப் செக்சுவல் மெடிசினில் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. விறைப்புக் குறைப்பாட்டுக்காக மருந்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் நன்மைகளை அளிக்கின்றன.

இதேபோல, யோகாவின் மனம்-உடல் சார்ந்த பயிற்சியும் லிபிடோவுக்கு உதவும். ஓர் ஆய்வில் 40 பெண்களைக் கொண்ட குழு ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் யோகா பயிற்சி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது, அதன் பிறகு அவர்களின் ஆசை, தூண்டுதல், வலி குறைதல், செயல் இலகுவாதல் மற்றும் ஒட்டுமொத்த திருப்திக்கான பாலியல் செயல்பாடு அதிகரித்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் செய்த யோகா பயிற்சிகள் இடுப்புத் தசையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், இறுக்கமான இடுப்பு மூட்டுகளை இலகுவாக்குவதற்கும், நல்ல மனநிலையை அதிகரிப்பதற்கும் உதவின.

Pixabay

இரவல்ல பகல்

இளம் வயதில் உள்ள தம்பதியினர் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுவதற்கு சிறந்த நேரம் மதியம் 2 மணி என ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நேரத்தில் தான் இருவரின் ஈடுபாடும் உச்சத்தில் இருக்குமாம். கூடவே, அதிக ஆற்றலுடன் இந்த நேரத்தில் செயல்படுவீர்கள். ஆகவே ஒவ்வொரு செயலுக்கும் உரிய நேரம் உள்ளதைப் போல் உடலுறவிற்கு காலமும் உள்ளது. உங்கள் வயதை அறிந்து அதற்கான துணையுடன் உடலுறவில் ஈடுபடுவது தான் ஏற்புடையதாக இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com