Introvert என்பவர் யார்? அவரது குணநலன்கள் என்ன?

சமூகவலைத்தளங்களில் இன்ட்ரோவெர்ட்கள் குறித்த பல மீம்கள், விவாதங்கள் நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகிறது. 2k கிட்ஸின் பயோக்களில் Introvert என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. 1920ம் ஆண்டு Carl Jung எனும் உளவியல் நிபுணர் மனிதர்களை Introvert மற்றும் Extrovert எனப் பிரித்து மதிப்பிட்டார்.
Introvert
Introvert canva
Published on

Introvert என்ற வார்த்தையை சமீப காலமாக இணையத்தில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. ஒருவர் அதிகமாக மற்றவர்களிடத்தில் பேசாமல் அமைதியாகவும் தனிமை விரும்பியாகவும் இருந்தால் அவர் இன்ட்ரோவெர்ட்டாக கருதப்படுகிறார்.

சமூகவலைத்தளங்களில் இன்ட்ரோவெர்ட்கள் குறித்த பல மீம்கள், விவாதங்கள் நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகிறது. பல 2k கிட்ஸின் பயோக்களில் Introvert என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது

உண்மையில் யார் தான் இன்ட்ரோவெர்ட்? அது பெயருக்குப் பின்னால் போடும் பட்டம் போல எல்லாரும் சொல்லிக்கொண்டு திரிவது ஏன்? என்பதைப் பார்க்கலாம்.

இன்ட்ரோவெர்ட் மீம்
இன்ட்ரோவெர்ட் மீம்Twitter

1920ம் ஆண்டு Carl Jung எனும் உளவியல் நிபுணர் மனிதர்களை Introvert மற்றும் Extrovert என இரண்டு வகையாகப் பிரித்து மதிப்பிட்டார். மனிதர்கள் உற்சாகத்தைப் பெறுவதற்காகத் தனிமையை நாடினால் அவர்களை இன்ட்ரோவெர்ட் என்றும் அதிக மனிதர்களுடன் பழகும் போது உற்சாகமாக இருப்பவர்களை எக்ஸ்ட்ரோவெர்ட் என்றும் அவர் கூறினார்.

இன்ட்ரோவெர்ட்கள் எப்போதும் தங்களது ஆழ்ந்த சிந்தனைகளில் மூழ்கி, தனக்குள் பேசுவதை விரும்புகிறவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நண்பர்கள் மட்டுமே இருப்பார்கள் அல்லது அவர்களுடன் மட்டுமே அவர்களால் வசதியாக உணர முடியும்.

யாரும் 100% இன்ட்ரோவெர்ட்டாக இருக்க முடியாது என்றும் Carl Jung கூறுகிறார்.

Introvert
சாவதற்கு முன்பு நம் மூளை என்ன நினைக்கும் தெரியுமா? - புதிய ஆய்வு

Introverts பொதுவாக இந்த பண்புகளைக் கொண்டிருப்பார்கள்:

  • அமைதியான சூழலில் மட்டுமே கவனிக்க முடியும்

  • ஆழ்ந்த சிந்தனைகள் இருக்கும்.

  • தன்னைப் பற்றிய விழிப்புணர்வு இருக்கும்.

  • முடிவுகளை எடுப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும்.

  • தனியாக இருப்பது தான் வசதியாக இருக்கும்.

  • குழுவாக இணைந்து வேலை செய்யவதில் விருப்பம் இருக்காது.

  • பேசுவதை விட எழுதுவதில் விருப்பம் அதிகமாக இருக்கும்.

  • குழுவில் அதிக நேரம் செலவழிப்பது சோர்வாக உணர வைக்கும்.

  • மிகச் சிறிய அளவிலான நண்பர்கள் மட்டுமே இருப்பார்கள், எனினும் நண்பர்களுடன் நெருக்கமான பிணைப்பு இருக்கும்.

  • அதிகமாகப் பகல் கனவு காண்பர். கற்பனைகள் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயல்வர்.

Introvert
சுய இன்பம் : இணையத்தில் அதிகம் தேடப்படும் கேள்விகளும் அதற்கான விடைகளும்

ஒருவர் இன்ட்ரோவெர்ட்டாக அல்லது எக்ஸ்ட்ரோவெர்ட்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் இயல்பாகவே அவர்களின் மூளையின் அமைப்பு தான் என்கிறது அறிவியல்.

ஞாபக சக்தி, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, திட்டமிடுதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் மூளையின் முன் பகுதியில் அதிக இரத்த ஓட்டம் இருப்பவர்கள் இன்ட்ரோவெர்ட்டாக இருப்பர்.

தவிர வாழ்க்கையில் துன்பமான நிகழ்வுகளைக் கடந்து வருபவர்களும் இன்ட்ரோவெர்ட்டாக இருப்பார்கள்.

இன்ட்ரோவெர்ட்களில் மூன்று வகையினர் உண்டு.

Social introverts

இவர்கள் கும்பலாக இருப்பதைத் தவிர்த்து அமைதியையும் சிறிய சுற்றத்தையும் விரும்புவார்கள்.

Thinking introverts

பகல் கனவு காண்பவர்களாக இருப்பார்கள். ஆழ்ந்த சிந்தனைகளிலும் கற்பனைகளிலும் மூழ்கியிருக்க விரும்புவார்கள்.

Anxious introverts

இவர்கள் விருப்பத்தினால் இன்ட்ரோவெர்டாக இருப்பவர்கள் அல்ல. கூட்டத்தில் இருப்பதற்கு கூச்ச சுபாவம் கொண்டவர்களாகவும் மற்ற நபர்களிடம் பேச ஒரு வித பதற்றமடைபவர்களாகவும் ( awkward ) இருப்பார்கள்.

Introvert
Kiss Day : மனிதர்கள் முத்தமிடுவதற்கு என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com