தலைவலி, சோர்வு, மனக் கவலை: தண்ணீர் சரியாக அருந்தாவிட்டால் என்னவெல்லாம் நடக்கும்?

நமக்கு உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு அடிப்படை காரணம் என்னவாக இருக்கும் என்று பார்த்தால், போதிய தண்ணீர் இல்லாததாக தான் இருக்கும். உணவில்லாமல் கூட ஒரு சில வாரங்களைக் கடத்திவிட முடியும். ஆனால் நீர் இல்லாமல் ஒருவாரத்தைக் கூட கடப்பது சிரமம்.
தண்ணீர் சரியாக அருந்தாவிட்டால் என்ன நடக்கும்?
தண்ணீர் சரியாக அருந்தாவிட்டால் என்ன நடக்கும்?Canva
Published on

நீரின்றி அமையாது உலகு என்று தமிழில் ஒரு வாசகம் உண்டு. அதே போல் இந்த உடலும் நீரின்றி அமையாது. ஒரு மனிதரால் உணவில்லாமல் கூட ஒரு சில வாரங்களைக் கடத்திவிட முடியும். ஆனால் நீர் இல்லாமல் ஒருவாரத்தைக் கூட கடப்பது சிரமம்.

அதே நேரத்தில் கண் எதிரே குடிப்பதற்கு நீர் இருந்தும் குறைவாக குடித்தால், அது பல உடல் நலக் கோளாறுக்கு வழிவகுத்துவிடும். உதாரணத்துக்கு தலை வலி, குடல் வலி, சருமம் வறண்டு போதல், தலை சுற்றல், மூளை சரியாக செயல்படாதது, சோர்வு, அதிகப்படியாக உணவு உண்பது என பல பிரச்னைகளுக்கு வழி வகுக்கலாம்.

சோர்வு

எப்போதும் சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டிருப்பவர்கள் கூட, போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்க மறக்கும் போது சட்டென சோர்வடைந்து முடங்குவதைப் பார்த்திருக்கலாம்.

அப்படி எந்த வித சம்பந்தமும் இல்லாமல் திடீரென சோர்வடையும் போது, நீர் குடித்துவிட்டு ஒரு 10 - 15 நிமிடம் ஓய்வாக உட்கார்ந்துவிட்டு அடுத்த வேலையைத் தொடங்கிப் பாருங்கள்.

மீண்டும் பழைய படி வேலையைச் செய்வீர்கள்.

தோல் சுருக்கம்

பொதுவாகவே தண்ணீர் குறைவாகக் குடிப்பவர்கள், விரைவாக வயதானவர்களைப் போன்ற தோற்றத்தைப் பெறுவர். அதற்குக் காரணம் உடலில் தொடர்ந்து போதுமான நீர் இல்லாததால் தோல் வறட்சி கண்டு சுருங்குவது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்கிறது மருத்துவ உலகம்.

ஒருவரின் தோல், நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க முதலில் அதற்கு போதுமான நீர் கொடுக்க வேண்டும்.

மனக் கவலை

மனச் சோர்வு மற்றும் கவலைக்கு, உடலில் போதிய அளவுக்கு நீர் இல்லாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம். எப்போதாவது மனக் கவலை அதிகமானால், ஒரு குவளை நீரை குடித்துப் பாருங்கள். மனநிலையில் ஒரு நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

தலைவலி

இன்று எல்லா துறை சார்ந்தவர்களும் அதிகம் கணினியைப் பார்க்கிறார்கள். அதன் பக்கவிளைவாக பலரும் போதிய அளவுக்கு நீரைக் குடிப்பதில்லை.

இதனால் தலை சுற்றல் & தலை வலி போன்ற பிரச்னைகள் எழுகிறது. அதற்கு மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக முதலில் போதிய அளவுக்கு நீரை பருகுங்கள். அதிலேயே 80% பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும்.

வறண்ட கண்கள்

முன்பே கூறியது போல தொடர்ந்து ஃபோன், லேப்டாப், அலுவலகக் கணினி போன்றவைகளைப் பார்த்து கண்கள் சோர்ந்து போவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு ஒரு முறை குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் மட்டும் போதாது.

போதுமான அளவுக்கு நீரையும் குடிக்க வேண்டும். இல்லை எனில் கண் எரிச்சல் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

உதடு வெடிப்பு

உடலில் போதிய அளவுக்கு நீர் இல்லை என்பதற்கு ஒரு நல்ல அறிகுறி உதடு வெடிப்பது. உடலில் உள்ள வறட்சியின் வெளிப்பாடு இது. இந்த பிரச்னை ஏற்பட்டால் கூட தொடர்ந்து ஒரு குறிப்பிட மணி நேரங்களுக்கு ஒரு முறை ஒரு குவளை நீர் அருந்துங்கள்.

சிறுநீர் கழிக்க சிரமப்படுவது

ஒருவர் போதுமான அளவுக்கு நீர் குடிக்கவில்லை என்றால், அவர் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரலாம். அப்படி சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் பையில் வலி ஏற்படலாம். இப்பிரச்னையைத் தவிர்க்க நீர் பருகுங்கள்.

தண்ணீர் சரியாக அருந்தாவிட்டால் என்ன நடக்கும்?
பீர் போல நுரை நிரம்பிய சிறுநீர் : என்ன காரணம்? - முழுமையான விளக்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com