இன்றைய காலக்கட்டத்தில் கையில் செல்போன் இல்லாத ஒரு நபரைக் கூட நாம் பார்க்க முடியாது. குறைந்தபட்ச அம்சங்கள் உள்ள ஸ்மார்ட் போன் ஆவது நாம் வைத்திருக்கிறோம்.
இந்த டிஜிட்டல் உலகத்தில் அதற்கான தேவையும் நம்மிடம் இருக்கிறது தான்.
ஆனால் இந்த ஃபோன் பயன்படுத்துவதில் ஒரு விதமான அடிக்ஷனும் நம்மிடம் இருக்கிறது. காலை விழிப்பதே இந்த மொபைலின் முகத்தில் தான். இரவு கண்ணுறங்கும் முன் பார்க்கும் கடைசி காட்சியும் மொபைலாக தான் இருக்கிறது.
இதுவே தீங்கு விளைவிக்கும் பழக்கம் என்றால், ஒரு சிலர் கழிவறைக்கு செல்லுபோது கூட கையில் செல்போன் உடன் தான் செல்வார்கள்.
பேங்க் மை செல் என்ற கேட்ஜெட் நிறுவனம் நடத்திய ஆய்வில், 96 சதவிகித இளைஞர்கள் பாத்ரூம் செல்லும்போது கூட தங்கள் மொபைலை கொண்டு செல்வதாக தெரிவித்திருக்கின்றனர்
இதனால் ஏற்படும் தீமைகள் என்ன? இந்த பதிவில் பார்க்கலாம்.
நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் வெஸ்டர்ன் டாய்லட்களை தான் பயன்படுத்துகிறோம். சேர் போல உட்காரும் வசதி இருப்பதால், இது செல்போனை பயன்படுத்தவும் வசதியாக அமைகிறது.
அப்படி கழிவறைக்குள் போனை எடுத்து செல்லும்போது அதில் கிருமிகள் அண்டும் வாய்ப்புகள் அதிகம். ஏன் என்றால், நாம் இந்த டாய்லட்டை பயன்படுத்திவிட்டு ஃபிளஷ் செய்யும்போது, அந்த தண்ணீர் தெறிக்கிறது. இதிலுள்ள கிருமிகள் நம் போன்களில் படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.
நம்மில் பலருக்கு போனை சுத்தம் செய்யும் பழக்கமும் இல்லை. கழிவறைக்கு சென்று பயன்படுத்திவிட்டு, அப்படியே மீண்டும் பயன்படுத்துகிறோம். இதனால் இந்த கிருமிகள் நம் வயிற்றுக்குள் செல்கிறது.
இப்படி கழிவறைக்குள் பயன்படுத்தப்படும் செல்போன்களில் 92 சதவிகிதம் ஈ கோலி, சால்மொனெல்லா போன்ற ஆபத்து விளைவிக்கும் பாக்டீரியாக்கள் படிந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஈ கோலி பாக்டீரியா என்பது மலத்தில் இருக்கும் ஒரு கிருமியாகும். உலகளவில் இந்த கிருமியினால் மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சுகாதார, உடல்நல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
இதை தவிர, கழிவறையில் இருக்கும் போது அதிக சத்தத்துடன் பயன்படுத்தினால், காதுகள், பெருங்குடல் அடிவாய் (rectum) மீது அழுத்தம் தருகிறது.
இதனால் மூல நோய், வாய்வு பிரச்னைகள், பெருங்குடல் அடிவாய் பகுதியில் இருக்கு ரத்த நாளங்களில் வீக்கம், இதனால் சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
மேலும், இவை செல்போன்களையும் பாதிக்கிறது. பெரும்பாலும் மொபைல்கள் வாட்டர் ப்ரூஃப் ஆக இருப்பதில்லை. கழிவறையில் செல்போன் கீழே விழுந்து சேதமடையக் கூடும், செல்போனுக்குள் தண்ணீர் போகலாம்.
ஆகையால், இனி கழிவறைக்குள் செல்லும்போது செல்போனை கொண்டு செல்லாதீர்கள்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust