சில ஆப்பிள்கள் ஏன் ஸ்டிக்கருடன் விற்கப்படுகின்றன தெரியுமா?

சில பழங்களில் ஐந்து இலக்க எண்கள் இருக்கும். அதாவது 84131, 86532 போன்ற 8ல் தொடங்கும் இந்தப் பழங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. இந்த பழங்கள் இயற்கையானவை அல்ல. பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட பழங்களை விட அவை விலை சற்று அதிகம்.
Why Some Apples Are Sold With Stickers And What It Signifies
Why Some Apples Are Sold With Stickers And What It Signifies Twitter
Published on

நாம் சந்தை அல்லது கடைகளில் ஆப்பிள் அல்லது பிற பொருட்களை வாங்கும்போது, ​​அதன் மீது ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள்கள் தரம் வாய்ந்ததாகவும், அதிக விலை கொண்டதாகவும் இருப்பதால் அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு விற்பனையாளர் விற்பனை செய்வார்கள்.

உண்மையில் எதற்காக அவ்வாறு ஆப்பிளில் ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படுகிறது என்பது குறித்து 99% பேருக்கு தெரியாது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஆப்பிள் மட்டுமல்ல, ஆரஞ்சுகளும் இப்போது ஸ்டிக்கர்களுடன் விற்கப்படுகின்றன. ஸ்டிக்கர்களுடன் கூடிய பளபளப்பான ஆப்பிள்களைப் பார்க்கும் பெரும்பாலான மக்கள் அவை விலை உயர்ந்தவை என்று நினைக்கிறார்கள். பெரும்பாலான டீலர்கள் ஆப்பிள்களை ஸ்டிக்கர் ஒட்டி அதிக விலைக்கு விற்கிறார்கள். ஆனால் இந்த ஸ்டிக்கர் ஆரோக்கியத்துடன் நேரடியாக தொடர்புடையது. எனவே நீங்கள் ஒரு ஆப்பிள் வாங்கும் போது, ​​ஆப்பிளில் இருக்கும் ஸ்டிக்கரைப் படியுங்கள்.

ஆப்பிளில் இருக்கும் ஸ்டிக்கரில் பழத்தின் தரம் மற்றும் அது எப்படி வளர்க்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் உள்ளன. சில ஸ்டிக்கர்களில் நான்கு இலக்க எண்கள் இருக்கும். அதாவது அவை 4026 அல்லது 4987 போன்ற எண்களைக் கொண்டுள்ளன. இந்த பழங்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்பட்டவை என்பதைக் குறிக்கிறது. இந்தப் பழங்களில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பழங்கள் மலிவானவை. நீங்கள் அவற்றை வாங்கினால் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் உள்ள பழங்களை வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

சில பழங்களில் ஐந்து இலக்க எண்கள் இருக்கும். அதாவது 84131, 86532 போன்ற 8ல் தொடங்கும் இந்தப் பழங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. இந்த பழங்கள் இயற்கையானவை அல்ல. பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட பழங்களை விட அவை விலை சற்று அதிகம்.

சில பழங்களில் 9 இல் தொடங்கும் ஐந்து இலக்க குறியீடு இருக்கும். 93435 என்று சொன்னால், பழம் இயற்கை முறையில் விளைந்தது என்றும் பூச்சிக்கொல்லிகள் அல்லது ரசாயனங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும் அர்த்தம். பாதுகாப்பான பழம் என்றாலும் விலை கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். இனிமேல் ஸ்டிக்கரில் உள்ள எண்களை பார்த்து பழங்களை வாங்குகள்!

Why Some Apples Are Sold With Stickers And What It Signifies
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும் பழங்கள்.!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com