தர்பூசணியை ஏன் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது?

தர்பூசணிகளின் ஊட்டச்சத்து மதிப்பைத் தக்கவைத்துக்கொள்வது பற்றி பலருக்கும் தெரியாது. நிபுணர்களின் கூற்றுப்படி, தர்பூசணிகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது.
Why You Should Never Store Watermelon In A Fridge
Why You Should Never Store Watermelon In A FridgeCanva
Published on

கோடை காலம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. இந்த சமர் சீசனில் நம்மை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியம். தண்ணீர் அதிகமாக குடிப்பது நீரேற்றமாக இருக்க சிறந்த வழியாக இருந்தாலும், நீர் சத்து நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்வது இன்னும் சிறந்தது. குறிப்பாக சீசன் பழமான தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடுவதும் நல்லது.

இந்த பழம் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும், மேலும் இதில் 92 சதவீதம் தண்ணீர் இருப்பதால், உடலில் உள்ள நீர் இழப்பை நிரப்பி, நம்மை நீரேற்றமாக வைத்திருக்கும்.

தர்பூசணியில் லைகோபீன், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கலோரிகள் மிகக் குறைவு என்பதால், இந்தப் பழத்தை உட்கொள்வதால் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும்.

தர்பூசணி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பழமாக சாப்பிட்டாலும் அல்லது ஜூஸாக உட்கொள்ளப்பட்டாலும், தர்பூசணி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

தர்பூசணிகளின் ஊட்டச்சத்து மதிப்பைத் தக்கவைத்துக்கொள்வது பற்றி பலருக்கும் தெரியாது. நிபுணர்களின் கூற்றுப்படி, தர்பூசணிகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது.

Why You Should Never Store Watermelon In A Fridge
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும் பழங்கள்.!

இவ்வாறு செய்வதால் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு குறையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க வேளாண்மைத் துறை தனது ஆய்வில், குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதை விட அறை வெப்பநிலையில் வைக்கப்படும் தர்பூசணியில் அதிக சத்துக்கள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது.

வெட்டப்பட்ட தர்பூசணியை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. ஏனெனில் பாக்டீரியாக்கள் வளரும் இடமாக அது மாறும். குளிரூட்டப்பட்ட தர்பூசணியை சாப்பிட்டால் அதை ஸ்மூத்தி அல்லது மில்க் ஷேக் வடிவில் சாப்பிடுவது நல்லது.

Why You Should Never Store Watermelon In A Fridge
இரவு உறங்கும் முன் எந்தெந்த பழங்கள் சாப்பிடலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com