உதடு வெடிப்பு முதல் தோல் வறட்சி வரை : குளிர்கால சரும பிரச்னைகளை எதிர்கொள்ள எளிய வழிகள்!
உதடு வெடிப்பு முதல் தோல் வறட்சி வரை : குளிர்கால சரும பிரச்னைகளை எதிர்கொள்ள எளிய வழிகள்!Twitter

உதடு வெடிப்பு முதல் தோல் வறட்சி வரை : குளிர்கால சரும பிரச்னைகளை எதிர்கொள்ள எளிய வழிகள்!

குளிர் காலங்களில் அதிகமாக உணரப்படுவது உதடு வறட்சி தான் , நம் உடலில் உள்ள மற்ற தோலை விட 10 மடங்கு மெல்லிய தோலை கொண்டுள்ளது நம் உதடு , அதனால் தான் அது சீக்கிரம் வறண்டு போகிறது , இதைச் சரி செய்ய சில வழிகள் உள்ளன.
Published on

 குளிர் காலம் தொடங்கிவிட்டது , நாம் மழையை ஜாலியாக ரசித்துக் கொண்டிருக்கிறோம். மழையினால் நம் வீட்டில் செலவழிக்கும் நேரம் அதிகமாகி உள்ளது. இந்த நேரத்தில் நம் உடலைப் பராமரிப்பதில் கூடுதலாக கவனம் செலுத்த முடியும். குளிர் காலத்தில் பலருக்கும் தோல் வறட்சி ஏற்படலாம். உதடு வெடிப்பு , மிகவும் வறண்டு போன சருமம் , பாத வெடிப்பு ஆகிய பிரச்சனைகள் அதிகமாகக் காணப்படும் , இந்த பிரச்சனைகளை வீட்டிலேயே எப்படிச் சரி செய்வது என்று பார்க்கலாம்.

உதடு வறட்சி/வெடிப்பு

குளிர் காலங்களில் அதிகமாக உணரப்படுவது உதடு வறட்சி தான் , நம் உடலில் உள்ள மற்ற தோலை விட 10 மடங்கு மெல்லிய தோலை கொண்டுள்ளது நம் உதடு , அதனால் தான் அது சீக்கிரம் வறண்டு போகிறது , இதைச் சரி செய்ய சில வழிகள் உள்ளன.

 லிப் ஸ்க்ரப்: 1 டீஸ்பூன் சர்க்கரையுடன்  ¾ டீஸ்பூன் நெய் அல்லது தேங்காய் எண்ணெய்யைச் சேர்த்துக் குழைத்து ,1 -2 நிமிடம் நிதானமாக உதட்டில் ஸ்க்ரப் செய்து முடிக்கவும் , இதை செய்த உடன் ஒரு நல்ல லிப் பாமை போட்டு அந்த ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும். இதை வாரத்துக்கு 3 முறை செய்யலாம். தினமும் இரவு ஒரு அடர்த்தியான லேயர் லிப் பாமை உதட்டில் போட்டுக் கொண்டு தூங்கவேண்டும்.

1 டீஸ்பூன் க்ளிசரின் உடன் அரை டீஸ்பூன் ரோஸ்வாட்டர் சேர்த்து பேக் போல் அவ்வப்போது போடலாம். பாலாடை அல்லது தேன் ஆகியவற்றையும் பேக் போல் உபயோகப் படுத்தலாம். 

முக சரும வறட்சி

 முகத்தை மிதமான சூட்டில் உள்ள தண்ணீரால் தான் கழுவ வேண்டும் , மிக சூடான தண்ணீரில் கழுவினால் வறட்சி அதிகரித்து விடும். முகத்திற்கு சோப்பு பயன்படுத்தாமல் pH பாலன்ஸ்ட் பேஸ்வாஷ் பயன்படுவது வறட்சியைக் குறைக்கும்.

முகத்திற்கு ஓட்ஸ் 1 டீஸ்பூன் மற்றும் பால் 1 டீஸ்பூன் சேர்த்து ஸ்க்ரப் செய்யவும் . ஸ்க்ரப் பண்ண பிடிக்காதோர் கெமிக்கல் எக்ஸ்போலியேஷன் பண்ணலாம் , அதற்கு லாக்டிக் ஆசிட் சீரம் சிறந்ததாக இருக்கும். இறந்த செற்களை அகற்றி நல்ல மினுமினுப்பையும் தரும். கெமிக்கல் எக்ஸ்போலியேஷனுக்கு புதியவராக இருந்தால் அதிக வீரியமான லாக்டிக் ஆசிட் பயன்படுத்தாமல் , 5% போன்ற கம்மி வீரியத்தில் பயன் படுத்த தொடங்கலாம். இதன் பின் தினமும் மாய்ஸ்ச்சரைசர் போடுவது அவசியம் , உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்ச்சரைசர் வாங்கி பயன்படுத்த வேண்டும் . வாரம் ஒரு முறை தயிர் அல்லது தேனை பேஸ் பேக் ஆக போடலாம்.

உடல் தோல் வறட்சி

முன்பு சொன்னது போல் அதிக நேரம் சூடான தண்ணீரில் குளிப்பதைத் தவிர்க்கவும் , கடுகெண்ணெய்யை உடலில் பூசி அரை மணி நேரம் ஊற விட்டு பின்பு குளித்தால் வறட்சி நீங்கும். கடுகெண்ணெய் இயற்கையாகவே சூடான எண்ணெய் என்பதால் குளிர் காலத்தில் பயன்படுத்த அது சிறந்தது.

உடலுக்கும் முன்பு சொன்ன ஓட்ஸ் ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம் , சாதாரண சோப்பு சருமத்தை இன்னும் வறட்சி அடையச் செய்யும், அதனால் pH பாலன்ஸ்ட்/ pH 5.5 (pH Balanced/pH 5.5) இருக்கும் சோப்பை மருந்தகங்களில் வாங்கி பயன்படுத்தலாம், அல்லது சோப்பிற்கு பதிலாகப் பாடி வாஷ் பயன்படுத்தலாம் . குளிக்கும்பொழுது லூப்பா (loofah)பயன்படுத்தி உடலை நிதானமாகத் தேய்த்தால் இறந்த செல்கள் நீங்கி சருமம் சாப்ட் ஆகும். இத்துடன் தினமும் பாடிலோஷன் போட வேண்டும் , இரவில் கட்டாயமாகப் போட வேண்டும். பாடி லோஷன் போட்டும் வறட்சி நீடித்தால், பாடி லோஷன் போடுவதற்கு முன்பு 4-5 சொட்டுகள் ஆர்கன் ஆயில் அல்லது ஜோஜோபா ஆயில் போன்ற லைட் ஆனா எண்ணெய்யை உடலில் போட்டுகொள்ளவும்.

உடல் தோல் வறட்சி
உடல் தோல் வறட்சி

 இத்துடன் சேர்த்து தினமும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் , நல்ல கொழுப்பு (good fat) இருக்கும் உணவுகளை  (ஆளிவிதை , சியா சீட்ஸ் , அவகாடோ , பிஷ் ஆயில்) சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தாலே சருமம் எல்லா சீசனிலும் வறட்சியே இல்லாமல் பளபளக்கும்.

- Swetha

உதடு வெடிப்பு முதல் தோல் வறட்சி வரை : குளிர்கால சரும பிரச்னைகளை எதிர்கொள்ள எளிய வழிகள்!
குளிர் காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Glutathione- உணவுகள் மூலம் பெறுவது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com