இந்திய கலாச்சாரம் குறித்து பேசும் போது அதன் உணவுப் பழக்கத்தை தவிர்த்துவிட்டு பேச முடியாது. ஜம்மு முதல் கன்னியாக்குமரி வரை ஒவ்வொரு மாநிலத்துக்கும், பிராந்தியத்துக்கும் உணவுப் பழக்கம் என்பது மாறுபடுகிறது. ஏன் தமிழகத்துக்கு உள்ளேயே பல வகை உணவுப் பழக்கங்கள் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
அட இப்படியெல்லாமா சாப்பிடுவாங்க என ஆச்சரியப்பட வைக்கும் இந்திய உணவுப் பழக்கங்களில் வித்தியாசமான சிலவற்றை நாம் காணலாம். கூட்டுப்புழு கூட்டு முதல் குட்டி எறும்பு பொறியல் வரை சாப்பிடும் பழக்கம் சீனாவில் மட்டுமின்றி இந்தியாவிலும் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஜாதொ என்பது பழங்குடி மக்களின் உணவுகளில் ஒன்று. மேகாலயா உள்ளிட்ட வட மேற்கு பகுதியில் வசிக்கும் ஜான்டியா பழங்குடிகள் இந்த உணவை சாப்பிடுகின்றனர். நம்ம ஊர்களில் ஆட்டு இரத்தத்தை பொறியல் செய்து சாப்பிடுவோம். ஆனால் இங்கு பன்றி அல்லது கோழி இரத்தத்தையும் குடலையும் அரிசியுடன் சேர்த்து வெரைட்டி ரைஸ் போல சாப்பிடுகின்றனர்.
இதுவும் மேகாலயாவில் சாப்பிடப்படும் உணவாகும். சாலட் சாப்பிடப் பிடிக்கும் என்றால் உங்களுக்கு இதுவும் பிடிக்கலாம். இது ஒரு பன்றிகறி மற்றும் வெங்காய சாலட். அழகாக அலங்கரிக்கப்பட்டு கொடுக்கப்படும் இந்த உணவில் வித்தியாசமான அம்சம் என்னவென்றால் இதில் பன்றியின் மூளை தான் சமைக்கப்படுமாம். பொதுவாக தமிழகத்தில் பன்றிக்கறி என்றால் அதன் இறைச்சி மட்டும் தான் சமைக்கப்படுவதைப் பார்த்திருப்போம்.
நாய் பிரியர்கள் இந்த ஒன்றை தவிர்த்துக் கொள்ளலாம். ஏனெனில், நாகாலாந்து மக்களால் சாப்பிடப்படாத விலங்குகள் மிகக்குறைவு தான். இங்கு நாய் இறைச்சியை நம் ஊரில் இருக்கும் சிக்கன் ரெஸ்டாரன்ட்டில் கிடைப்பது போல பல வகைகளில் சமைத்துச் சாப்பிடுகின்றனர். நாகாலாந்து, மிசோரம் மற்றும் மணிப்பூர் பழங்குடி மக்கள் இந்த இறைச்சிகளை விரும்பி உண்கின்றனர். ஆனால் நாகாலாந்து அரசு 2020ல் நாய் இறைச்சிக்கு தடை விதித்தது.
இது சிகப்பு எறும்புகளைக் கொண்டு சமைக்கப்படும் உணவு வகையாகும். சத்தீஸ்கர் பழங்குடி மக்கள் இதனை விரும்பி உண்கின்றனர். இதைக் காரமான நொருக்குத் தீனியாகவும் அலங்கரிக்கும் உணவாகவும் மக்கள் சாப்பிடுகின்றனர்.
கோவாவில் தான் குட்டி சுறா கறி மிக பிரபலம். கோவாவின் கலாச்சார உணவுகளில் ஒன்றான அது உள்ளூர் மக்களால் பெரிதும் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. பல வெரைடிகளில் குட்டி சுறாவை கோவாக செஃப்கள் சமைக்கின்றனர். இந்த பட்டியலில் இருக்கும் உணவுகளிலேயே இது தான் மிகவும் காஸ்ட்லி!
சீனர்கள் மட்டுமல்ல, கோவா மற்றும் சிக்கிம் மக்களும் தவளை காலை மிகவும் விரும்பி உண்கின்றனர். சிக்கிமின் லெப்சா பழங்குடி மக்கள் இந்த உணவு அதிக மருத்துவ குணங்கள் கொண்டது எனக் கூறுகின்றனர். வயிற்றுப் போக்கு மற்றும் பிற வயிறு சம்பந்தமான பிரச்னைகளை தவளைக்கால் தீர்க்கும் என அந்த மக்கள் சொல்கின்றனர்.
பட்டு தயாரிக்க உதவும் பஞ்சு போன்ற கூட்டுக்குள் இருக்கும் இந்த எரி புழுவை உண்கிறார்கள். அதன் கூட்டைப் பிரித்துவிட்டு புழுவைத் தனியாக எடுத்துச் சமைக்கின்றனர். கொரிசா என்ற இளம் மூங்கிலால் செய்யப்படும் உணவுடன் சேர்த்து இதனைச் சாப்பிடுகின்றனர்.
இது வரை இந்த பட்டியலில் நான் வெஜ் ஐடங்கள் மட்டுமே வந்தது வெஜிடேரியன்களுக்கு மென் சோகத்தை ஏற்படுத்தியிருந்தால் இந்த உணவு அதனைப் போக்கிவிடும்.
மேகாலயாவில் சில மக்கள் அழுகிய உருளை கிழங்கை உண்பார்களாம். உலகம் முழுவதும் வித விதமாக சமைத்து சாப்பிடப்படும் உருளைக்கிழங்கை அது அழுகும் வரை கைப்படாமல் காத்திருந்து முளைவிடத் தொடங்கியதும் பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்பார்களாம்.
இதுவரை நாம் கண்ட உணவுகளிலேயே சுவையான உணவு இதுவாகத்தான் இருக்கும் எனலாம். கருவாடு மற்றும் காய்கறிகளை வதக்கி சாதாரணமாக தான் இதைச் சமைக்கின்றனர். இதன் சுவையும் அருமையாக இருக்குமாம். ஆனால் வாசனை மோசமானதாக இருப்பதால் இந்த பட்டியலில் இடம் பெறுகிறது கரோ பழங்குடி மக்களின் நஹ்கம் உணவு.
கோவாவில் கிடைக்கும் இந்த உணவு பன்றிகளைக் கொண்டு சமைக்கப்படுவது. இது ஒரு போர்ச்சுகீசிய ரெசிபி. பன்றியின் குடல் உள்ளிட்ட உள்ளுருப்புகளைக் கொண்டு இது சமைக்கப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust