இந்தியாவில் இருந்து வெறும் 5 மணிநேரத்தில் செல்லக்கூடிய 10 நாடுகள்!

இமயமலை அழகின் மத்தியில் நீங்கள் உலகை ரசிக்க விரும்பினாலும் ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பினாலும் பூட்டன் அதற்கு பொருந்தமான இடமாகும். பூட்டான் செல்ல 2 மணி நேரமாகிறது.
இந்தியாவில் இருந்து வெறும் 5 மணிநேரத்தில் செல்லக்கூடிய 10 நாடுகள்!
இந்தியாவில் இருந்து வெறும் 5 மணிநேரத்தில் செல்லக்கூடிய 10 நாடுகள்!Canva

வெளிநாட்டு பயணம் வெளிநாட்டு பயணம் என்றாலே பல மணிநேரங்கள் ஆகும் என்பதெல்லாம் தவறு. இந்தியாவில் இருந்து 5 மணிநேரத்திற்குள் விமானத்தில் செல்ல கூடிய நாடுகளை சொல்கிறோம்.

தாய்லாந்து

இந்தியாவிலிருந்து தாய்லாந்து செல்ல 4.5 மணி நேரமாகிறது. இந்தியர்களின் விருப்பமான நாடான தாய்லாந்தின் கடற்கரைகள், பாங்காக்கின் சுறுசுறுப்பான தெருக்களைத் பார்க்க குறைவான நேரமே ஆகும்.

இலங்கை

இந்தியாவிலிருந்து 2.5 மணி நேரம் பயணிக்கக்கூடிய தீவு நாடான இலங்கை, வளமான வரலாற்றுடன் இந்தியர்கள் எளிதாக அணுகக்கூடிய இடமாகும். இங்கு பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் அழகிய கடற்கரைகளை நீங்கள் ஆராயலாம்.

துபாய்

இந்தியாவிலிருந்து துபாய் செல்ல 3 மணி நேரமாகிறது. ஷாப்பிங் முதல் பாலைவன சாகசங்கள் வரை ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற இந்த நகரம் நவீனத்துவம் மற்றும் பாரம்பரிய அனுபவத்தைக் கொடுக்கும்.

நேபாளம்

நேபாளம் செல்ல 2.5 மணி நேரமாகிறது. இமயமலையின் மடியில் மலையேற்றம், ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு நேபாளம் ஒரு சரியான தேர்வாகும்.

பூட்டான்

இமயமலை அழகின் மத்தியில் நீங்கள் உலகை ரசிக்க விரும்பினாலும் ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பினாலும் பூட்டன் அதற்கு பொருந்தமான இடமாகும். பூட்டான் செல்ல 2 மணி நேரமாகிறது.

அபுதாபி

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபி, செழுமையான கலாச்சார அற்புதங்களின் புகலிடமாகும். ஷேக் சயீத் கிராண்ட் மசூதியை ஆராயலாம். இங்கு செல்ல 4 மணி நேரமாகிறது.

மலேசியா

பரபரப்பான நகரங்கள் முதல் அழகிய லங்காவி கடற்கரை, கோலாலம்பூரின் கலாச்சார செழுமையைக் கண்டறிவது வரை பல விஷயங்கள் மலேசியாவில் உள்ளது. இந்தியாவிலிருந்து மலேசியா செல்ல 5 மணி நேரமாகிறது.

இந்தியாவில் இருந்து வெறும் 5 மணிநேரத்தில் செல்லக்கூடிய 10 நாடுகள்!
உலகளவில் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

சிங்கப்பூர்

இந்தியர்கள் அதிகம் வாழும் இங்கு உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங், பலவகையான உணவு வகைகளை ருசித்து, நகரின் சின்னமான வானளாவிய கட்டிடங்களை ரசிக்கலாம். இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் செல்ல 5 மணி நேரமாகிறது.

ஹாங்காங்

நவீனத்துவத்துடன் பாரம்பரியம் கலந்திருக்கும் ஹாங்காங்கின் விக்டோரியா சிகரத்திலிருந்து அழகிய காட்சிகள், ருசியான உணவுகள் என்ற பல உண்டு. இந்தியாவிலிருந்து ஹாங்காங் செல்ல 5 மணி நேரமாகிறது.

வியட்நாம்

ஹனோயின் தெருக்களில் இருந்து ஹா லாங் அமைதியான கடற்கரை வரை, வியட்நாம் ஒரு மாறுபட்ட மற்றும் வளமான அனுபவத்தை வழங்குகிறது. இந்தியாவிலிருந்து ஹாங்காங் செல்ல 4.5 மணி நேரமாகிறது.

இந்தியாவில் இருந்து வெறும் 5 மணிநேரத்தில் செல்லக்கூடிய 10 நாடுகள்!
இந்தியாவைத் தவிர அதிக இந்திய மக்கள் தொகை கொண்ட நாடுகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com