ராமர் கோயில் திறப்புவிழா; ”அயோத்திக்கு 100 விமானங்கள் வரும்” - யோகி ஆதித்யநாத்

ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அயோத்தியில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த 30ஆம் தேதி திறந்து வைத்தார்.
ராமர் கோயில் திறப்புவிழா; ”அயோத்திக்கு 100 விமானங்கள் வரும்” - யோகி ஆதித்யநாத்
ராமர் கோயில் திறப்புவிழா; ”அயோத்திக்கு 100 விமானங்கள் வரும்” - யோகி ஆதித்யநாத்Twitter

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதை உத்தரப் பிரதேச அரசு மேற்பார்வையிடுகிறது.

இந்த ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டும் நிலையில் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக அயோத்தியில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த 30ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்நிலையில் அயோத்தி-அகமதாபாத் இடையேயான இண்டிகோ விமான சேவை தொடக்க விழா நடந்தது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அகமதாபாத் மற்றும் அயோத்தி இடையே முதல் மூன்று வார விமானங்களுக்கான போர்டிங் பாஸ் பெற்றார்.

அப்போது யோகி ஆதித்யநாத் பேசுகையில், வருகிற 22 ஆம் தேதி அயோத்தி விமான நிலையத்துக்கு 100 விமானங்கள் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். இது அயோத்தி விமான நிலையத்தின் திறனை சரிபார்க்கும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

ராமர் கோயில் திறப்புவிழா; ”அயோத்திக்கு 100 விமானங்கள் வரும்” - யோகி ஆதித்யநாத்
ஹனுமான் : ”ஒவ்வொரு டிக்கெட்டிலும் ரூ.5 அயோத்தி கோவிலுக்கு வழங்கப்படும்” - சிரஞ்சீவி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com