வங்காளத்தின் தினாஜ்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி, ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக தனது இரத்தத்தை விற்க முடிவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தலைமுறையினர் ஸ்மார்ட்போனில் மூழ்கி கிடக்கின்றனர். கேட்ஜெட் இல்லாமல் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. நம்மில் பெரும்பாலோருக்கு விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்பது கனவாக இருக்கும்.
அப்படி ஸ்மார்ட்போனை வாங்க 16 வயது சிறுமி செய்த காரீயம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, தெற்கு தினாஜ்பூரில் உள்ள தபன் காவல் நிலையப் பகுதியின் கர்தாவில் வசிப்பவர். இவர் ஆன்லைனில் 9,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்துள்ளார்.
அதற்கான பணத்தை திரட்டுவதற்காக ரத்த வங்கிக்கு சென்ற அந்த மாணவி தனது ரத்தத்தை விற்க முயன்றுள்ளார்.
ரத்தம் கொடுப்பதற்குப் பதிலாக சிறுமி பணம் கேட்டதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து மாணவியிடம் அவர்கள் விசாரிக்கவே இந்த விவரங்களை அவர் கூறியுள்ளார்.
செல்போன் வாங்குவதற்காக சிறுமி எடுத்த இந்த விபரீத முயற்சியை ரத்த வங்கியில் உள்ளவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்ததை அடுத்தே இந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust