குழந்தை திருமணம் தொடர்பாக சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
தங்களுடைய குழந்தைகளுக்கு திருமண வயது வரும் முன்னரே சட்டத்தை மீறி திருமணம் செய்து வைப்பதாக தீட்சிதர்கள் மீது புகார்கள் எழுந்துவந்த நிலையில், ஒரு குழந்தை திருமண சம்பவத்தில் இரண்டு தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் அர்ச்சகர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் மற்றும் விஜயபால தீட்சிதர் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2021ம் ஆண்டு ஹேமசபேசர் தனது 13 வயது மகளை விஜயபாலர் மகன் ஞானசேகரனுக்கு திருமணம் செய்து வைத்ததாக சமூக நலத்துறையினர் கடலூர் போலீசில் புகார் அளித்தனர். விஜயபாலாவின் மகன் ஞானசேகரனும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இதற்கிடையில் 50-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கோயிலின் வாசலின் முன்பு அமர்ந்து சுமார் 4 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களை கலைக்க முற்பட்ட போலீஸாருக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எனவே, சாலை மறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களை கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்த போலீஸார், பின்னர் விடுவித்தனர்.
இதனால் சிதம்பரம் நடராஜர் கோயில் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
மேலும், இந்த ஒரு வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் மட்டுமே, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust