ரத யாத்திரை முதல் முகமூடி திருவிழா வரை - இந்திய நகரங்களின் முக்கிய பண்டிகை பற்றி தெரியுமா?

இந்தியாவில் உள்ள ஐந்து நகரங்களில் இருக்கக்கூடிய முக்கியமான சடங்குகள் மற்றும் பண்டிகைகள் ஆகியவற்றை தற்போது பார்க்கலாம். இவை உலக அளவில் புகழ்பெற்றவையாகும்.
முகமூடி திருவிழா
முகமூடி திருவிழா twitter

உலகில் உள்ள மற்ற நாடுகளை விட இந்தியா கொஞ்சம் வித்தியாசமானது என்றே கூறலாம். இங்கு உள்ள பல்வேறு மாநிலங்களின் பல மொழிகள், பல கலாச்சாரங்கள் ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும்.

அதனால் தான் இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை நாடு என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஐந்து நகரங்களில் இருக்கக்கூடிய முக்கியமான சடங்குகள் மற்றும் பண்டிகைகள் ஆகியவற்றை தற்போது பார்க்கலாம். இவை உலக அளவில் புகழ்பெற்றவையாகும்.

வாரணாசி

இந்தியாவின் ஆன்மிக தலைநகரம் என்று அழைக்கப்படும் வாரணாசி பல பழமையான சடங்குகளையும் பல கோவில்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக இங்கு இருக்கக்கூடிய காசி இந்து மக்களின் பாவங்களைப் போக்கக்கூடிய முக்கிய ஸ்தலமாக உள்ளது.

அதோடு இங்கு ஓடக்கூடிய நதியான கங்கைக்கு ஒரு தெய்வீக புராண கதைகள் உள்ளது. அதன்படி தீபாவளி, மகாசிவராத்திரி போன்ற பண்டிகையின் போது வாரணாசி கலை கட்டி விடும். குறிப்பாக கங்கை ஆற்றில் நடக்கும் சிவராத்திரி பூஜைகள் உலக அளவில் உள்ள பயணிகளை ஈர்க்கிறது

யானை திருவிழா

கடவுளின் பூமி என்று கேரளா மாநிலத்தை கூறுவார்கள். கேரளா அங்கு உள்ள கோயில்களின் மூலமாகவும் அங்கு நடக்கக்கூடிய திருவிழாக்கள் மூலமாகவும் தனித்தன்மையினை பெறுகிறது.

கேரளாவில் நடக்கும் கோயில் விழாக்களில் யானைகளை பயன்படுத்துவது பிரபலமான ஒன்றாகும். அந்த வகையில் திருச்சூர் நகரில் யானைகளுக்கு நடத்தப்படும் முக்கிய திருவிழா கேரளாவில் பண்பாட்டை குறிக்கும் வகையில் உள்ளது.

மேளங்கள் முழங்க யானைகளுக்கு பட்டாடை அணிவித்து யானைகளுக்கு தரப்படும் மரியாதை கேரளாவில் மிகவும் முக்கியமான திருவிழாவாகும். இதனை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாவாசிகள் வருகின்றனர்.

பாலைவன திருவிழா

இந்தியாவின் பசுமையான இடங்களில் மட்டும் திருவிழாக்கள் பிரபலமானது அல்ல பாலைவனப் பகுதிகளிலும் விழாக்கள் மிகப் பிரபலமானதாக உள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய் சார் பகுதியில் நடத்தப்படும் பாலைவன திருவிழா மிகவும் பிரபலமானதாகும்.

இங்கு நடக்கக்கூடிய ஒட்டகப் பந்தயம், நாட்டுப்புற நடனங்கள், பொம்மலாட்டம் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் ஆகியவை பார்வையாளர்களுக்கு ராஜஸ்தானின் கலை மற்றும் கலாச்சாரத்தை எடுத்துக் கூறும் வகையில் உள்ளது.

ரத யாத்திரை

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பூரி அதன் வருடாந்திர தேர் யாத்திரைக்கு புகழ்பெற்றதாகும். இந்த ரத யாத்திரையை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மேலும் இந்த ரத யாத்திரை ஒற்றுமையின் சின்னமாகவும் கருதப்படுகிறது.

முகமூடி திருவிழா
மதுரை : ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் அசைவ திருவிழா! எப்படி நடக்கும் தெரியுமா?

முகமூடி திருவிழா

சுற்றுலா பயணிகளின் முக்கிய பகுதியாக தற்போது லடாக் உள்ளது. இங்கு மலைகளும் அதனைச் சுற்றிய பகுதிகளும் தான் பிரபலமானவையாக நமக்கு தெரியும். ஆனால் இங்கு கொண்டாடப்படும் திபத்திய மக்களின் முக்கிய திருவிழாவான முகமூடி நடனங்கள் மிகவும் பிரபலம்.

திபத்திய பௌத்த குருவான பத்மசம்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரார்த்தனைகளும் இந்த முகமூடி நடனங்களும் நடக்கின்றது. இது அந்த மாநில மக்களின் உண்மையான கலாச்சாரத்தை விரும்புவோர்களுக்கு ஒரு விருந்தாக அமையும். இதனை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாவாசிகள் வருகின்றனர்.

முகமூடி திருவிழா
Dussera: மைசூரூவில் கொண்டாடப்படும் கோலாகல திருவிழா - சிறப்புகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com