கர்நாடகா: அனுஷ்கா முதல் ரஷ்மிகா மந்தனா வரை - இந்திய சினிமாவை ஆளும் கன்னடத்து பைங்கிளிகள்

கன்னடத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், இந்திய சினிமாவில் இவர்களின் ஆளுமை மேலொங்கியுள்ளது. இந்த நடிகைகள் தமிழ், தெலுங்கு, இந்தி என பல தரப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளனர்.
5 Famous Actresses Ruling Other Industries Having Karnataka Origins
5 Famous Actresses Ruling Other Industries Having Karnataka OriginsTwitter

பொதுவாக கதாநயாகிகள் என்றாலே கேரளாவை பூர்வீகமாக கொண்டிருப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறார்கள் அனுஷ்கா, ரஷ்மிகா போன்ற நடிகைகள்.

கன்னடத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், இந்திய சினிமாவில் இவர்களின் ஆளுமை மேலொங்கியுள்ளது. இந்த நடிகைகள் தமிழ், தெலுங்கு, இந்தி என பல தரப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளனர்.

அப்படி கர்நாடகாவைச் சேர்ந்த நடிகைகள் மற்ற சினிமாவிலும் ஆளுகின்றனர். யார் யார் என்று இங்கே தெரிந்துகொள்வோம்.

அனுஷ்கா

அனுஷ்கா 2005 ஆம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானதற்கு முன்பு பெங்களூரில் யோகா ஆசிரியராக இருந்தார்.

அதன்பிறகு சினிமா அவருக்கு கைக்கொடுக்கவே தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

இதுவரை கன்னட படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா ஷெட்டி தனது உடல்நிலையில் கவனம் செலுத்த ஒரு சிறிய இடைவெளி எடுத்திருந்தார். தற்போது ஒரு படத்தில் கமிட்டாகி மீண்டும் நடித்து வருகிறார். அவரது ரசிகர்கள் அவரை மீண்டும் பெரிய திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே மாடலிங் துறையில் பல விருதுகளை வென்று பிரபலமானவர். ஆரம்பத்தில் சினிமாவில் காலடி எடுத்துவைத்தபோது பூஜா படங்களை தேர்வு செய்வதில் சிறிது சிரமப்பட வேண்டியிருந்தது.

ஆனால் 2018 ஆம் ஆண்டு முதல் பூஜா பாக்ஸ் ஆபீஸ் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார். கன்னடம் சரளமாக பேசும் நடிகையான பூஜா தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி என பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

ரஷ்மிகா மந்தனா

நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் இந்த கூர்க் நடிகைக்கு இன்று அறிமுகம் தேவையில்லை.

'கிரிக் பார்ட்டி' படத்தில் அறிமுகமான ராஷ்மிகா, மிக விரைவில் தென்னிந்தியாவின் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக மாறினார். பாலிவுட்டிலும் களமிறங்கி கலக்கி வருகிறார்.

பல விமர்சனங்கள் அவர் மீது வைத்தாலும் நடிப்பின் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார் ரஷ்மிகா மந்தனா.

5 Famous Actresses Ruling Other Industries Having Karnataka Origins
ஜோதிகா முதல் ரம்யா கிருஷ்ணன் வரை : ரஜினியையே வில்லியாக மிரட்டிய 5 நடிகைகள்!
நித்யா மேனன்
நித்யா மேனன்Twitter

நித்யா மேனன்

நித்யா மேனன் பெங்களூரில் மலையாளியாக பிறந்து, தன்னை ஒரு பெங்களூருவாசியாகவே கருதி, '7'0 க்ளாக்' என்ற கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

பின்னர், நித்யா மேனன் தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து பல ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.

எந்தவொரு பாத்திரத்திரத்திலும் நித்யா மேனன், அசுர நடிப்பை வெளிப்படுத்தி, கண்மணியாக, சோபனாவாக ரசிகர்கள் மனதில் நிற்கிறார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்

ஷ்ரத்தா ஸ்ரீநாத் பெங்களூரில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அவர் மாடலிங் செய்யத் தொடங்கியதிலிருந்து, திரைப்பட வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கப்பட்டன.

பவன் குமாரின் 'யு டர்ன்' மூலம் அறிமுகமானார். நல்ல கதை களத்திற்கும் கதாப்பாத்திரத்திற்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 'யு டர்ன்', 'விக்ரம் வேதா' ஆகிய படங்கள் அவருக்கு புகழை தேடி கொடுத்துள்ளன.

5 Famous Actresses Ruling Other Industries Having Karnataka Origins
அஜித் பட நடிகை சைத்ரா முதல் ஆலியா வரை: அதிக ரசிகர்களை கொண்ட சின்னத்திரை நடிகைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com