திகார் முதல் புழல் சிறை வரை : இந்தியாவின் பெரிய சிறைச்சாலைகள் குறித்து தெரியுமா?

இந்தியாவின் சில சிறைகள் உலகிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படுவது உங்களுக்குத் தெரியுமா? இந்த கட்டுரையில், இந்தியாவில் உள்ள 5 பெரிய சிறைச்சாலைகள் பற்றி பார்ப்போம்.
5 largest Central Prisons in India
5 largest Central Prisons in IndiaTwitter

அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் ஏராளமான சிறைகள் உள்ளன, அவற்றில் சில பரந்த அளவில் உள்ளன. ஆயிரக்கணக்கான கைதிகளை அடைக்கும் அளவிற்கு சிறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் சில சிறைகள் உலகிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படுவது உங்களுக்குத் தெரியுமா? இந்த கட்டுரையில், இந்தியாவில் உள்ள 5 பெரிய சிறைச்சாலைகள் பற்றி பார்ப்போம்.

திகார் சிறை

டெல்லியில் அமைந்துள்ள திகார் சிறை, தெற்காசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலையாகும். இது திகார் ஆசிரமம் என்றும் அழைக்கப்படுகிறது

திகார் சிறைச்சாலை 1957 முதல் இயங்கிவருகிறது. இது சுமார் 5200 கைதிகள் இடமளிக்கும் திறன் கொண்டது. அதன் கீழ் 9 வெவ்வேறு மத்திய சிறைகள் உள்ளன.

அதுமட்டுமின்றி,சிறை வளாகத்திற்குள் கைதிகள் நடத்தும் தொழில் ஒன்றும் உள்ளது. ஒரு வணிகப் பிரிவின் ஒரு பகுதியாக இருப்பது கைதிகள் மத்தியில் சுயமரியாதையை அதிகரிக்கிறது மற்றும் அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக மாறவும் வாய்ப்பளிக்கிறது.

எரவாடா சிறை

எரவாடா மத்திய சிறை மகாராஷ்டிராவில் உள்ள மிகப்பெரிய சிறையாகும்.

இந்த சிறைச்சாலை 512 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

1930 மற்றும் 1940 களில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, மகாத்மா காந்தி போன்ற பல பிரபலங்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டனர். இது சுமார் 3,600 கைதிகளை வைத்திருக்கும் திறன்கொண்டது.

புழல் மத்திய சிறை

சென்னை அருகே திருவள்ளூரில் அமைந்துள்ளது இந்த புழல் சிறை. இது இந்தியாவின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றாகும்.

இந்த சிறையில் 3,000 க்கும் மேற்பட்ட கைதிகளை அடைக்க முடியும். இது மூன்று கட்டிட வளாகங்களைக் கொண்டுள்ளது. இது 212 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.

5 largest Central Prisons in India
இந்தியா: எலும்புக்கூடு ஏரி முதல் செல்லுலார் சிறை வரை - எங்கெல்லாம் திகில் பயணம் செல்லலாம்?

நைனி மத்திய சிறை

உத்தரபிரதேசத்தில் அலகாபாத் அருகே நைனியில் அமைந்துள்ளது இந்த சிறை. இது இந்தியாவின் நான்காவது பெரிய சிறையாகும்.

இது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இது தோராயமாக 3000 கைதிகளை வைத்திருக்கும் திறன் கொண்டது.

ராஜமுந்திரி மத்திய சிறை

ராஜமுந்திரி மத்திய சிறை மிகவும் பழமையான சிறையாகவும், நாட்டின் ஐந்தாவது பெரிய சிறையாகவும் கருதப்படுகிறது. இது ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரியில் அமைந்துள்ளது.

1602 இல், டச்சுக்காரர்கள் ராஜமுந்திரியில் ஒரு கோட்டையைக் கட்டினார்கள். பிரிட்டிஷ் பேரரசு 1864 இல் சிறைச்சாலையாக மாற்றியது, பின்னர் 1870 இல் மத்திய சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.

இந்த சிறைச்சாலை 196 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இது தோராயமாக 1864 கைதிகளை வைத்திருக்கும் திறன் கொண்டது.

5 largest Central Prisons in India
கருப்பின அமெரிக்கருக்கு 400 ஆண்டு சிறை: 30 ஆண்டுகளிலேயே விடுவிப்பு - ஒரு நெகிழ்ச்சி கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com