பெண்கள் ஆண்களிடம் கேட்க தயங்கும் கேள்விகள் என்னென்ன தெரியுமா?

தனது வருங்கால துணை அல்லது நம்பிக்கையான தனது வாழ்நாள் முழுவதும் பயணிக்கும் நபர்களுடன் நீண்ட கால திட்டங்களைப் பற்றி விவாதிப்பது முக்கியமாகும்
6 questions women hesitate to ask men
6 questions women hesitate to ask men Twitter

என்னதான் நெருக்கமான உறவுகளாக இருந்தாலும் பெண்கள் சில கேள்விகளை ஆண்களிடம் கேட்க தயங்குகின்றனர் அல்லது தவிர்த்து வருகின்றனர். அந்த வகையில் பெண்கள் ஆண்களிடம் கேட்க தயங்கும் கேள்விகள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் எதிர்கால திட்டம் என்ன ?

பல பெண்கள் தங்கள் நீண்ட கால தோழர்களிடம் எதிர்கால திட்டங்கள் குறித்து பேச தயங்குகிறார்கள். ஏனெனில் இது தனிப்பட்ட லட்சியங்கள் மற்றும் தொழில் ஆகியவற்றை பற்றிய கேள்வி. இது சில சமயங்களில் உறவில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கவலைப்படலாம்.

அதே சமயம் தனது வருங்கால துணை அல்லது நம்பிக்கையான தனது வாழ்நாள் முழுவதும் பயணிக்கும் நபர்களுடன் நீண்ட கால திட்டங்களைப் பற்றி விவாதிப்பது முக்கியமாகும்

உறவைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

பெண்கள் பெரும்பாலும் தங்கள் உறவின் நிலையைப் பற்றி தங்கள் துணைவரிடம் கேட்க பயப்படுகிறார்கள் அல்லது இந்த கேள்வியினை தவிர்க்கிறார்கள் என்றே கூறலாம்

இந்த கேள்வி கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தலாம் அல்லது குழப்பத்தை உருவாக்கலாம் என நினைக்கின்றனர் .

அதே சமயம் ஆண் பெண் உறவில் திறந்த மற்றும் நேர்மையான தொடர்பு ஆரோக்கியமானது, இன்னும் சொல்ல போனால் மகிழ்ச்சியானது. ஆகவே உங்கள் உறவு குறித்த ஆரோக்கியமான விவாதம் தேவை

என்னிடமிருந்து உனக்கு என்ன வேண்டும்?

பெண்கள் தங்கள் உணர்ச்சி அல்லது நடைமுறைத் தேவைகளைப் பற்றி ஆண்களிடம் கேட்க தயங்குவதாக பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு ஆண் தனக்கான தேவையினை தன்னை சார்ந்த பெண்ணுக்கு கொடுக்காமல் இருக்கும் போது தேவையற்ற பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது ஆகவே இருவரும் தங்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளவேண்டும்.

மன அழுத்தம்

கடினமான அல்லது மிகவும் சோகமான மன அழுத்த காலங்களில் தன்னை சார்ந்த நபரை நோக்கி கேள்வி எழுப்பவே தயங்குகின்றனர். என்னதான் முகம் பார்த்தே வலியறிவான் என கூறினாலும் அது எல்லா நேரத்திலும் கை கொடுக்காது. ஆகவே மன அழுத்தம் இருக்கும் நாட்களில் கடினமான நேரங்களில் ஒருவருக்கொருவர் சமாளிக்கும் உத்திகளைப் புரிந்துகொள்வது சிறந்த ஒன்றாகும்

6 questions women hesitate to ask men
ஆண்களை விட பெண்கள் தான் சோகமாக இருக்கிறார்களா? ஆய்வில் புதிய தகவல்!

பொருளாதார விஷயத்தில் தயக்கம்

பொதுவாக பெண்கள் நிதி விவாதங்களைப் பற்றி கேட்க தயங்கலாம். இதனால் வரும் வாக்குவாதங்கள், பிரச்னைக்கு வழிவகுக்கும் என அவர்கள் பயப்படலாம்.

இருப்பினும், பொருளாதாரம் வரவு செலவு நிதி ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை அவசியம்.

நெருக்கத்திற்கான எதிர்பார்ப்புகள்

ஆண் பெண் இருவரிடையே உடல் நெருக்கம் பற்றிய விவாதங்கள் பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் குறிப்பாக பெண்கள் தங்கள் எதிர்பார்ப்புகளைப் பற்றி ஆண்களிடம் கேட்கத் தயங்கலாம். ஏனெனில் அவர்கள் தங்கள் ஆசைகளை கூறுவதன் மூலமாக தங்களின் மதிப்பு தவறாக மாறலாம் என கவலைப்படுகிறார்கள்.

6 questions women hesitate to ask men
ஜெர்மனி : பொது இடங்களில் பெண்கள் மேலாடையில்லாமல் இருக்க அனுமதி - நிர்வாணத்தை பழகுவது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com