இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? மனிதர்களின் 7 self destructive habits

நம்மிடம் இருக்கும் பழக்கங்கள் நல்லவையா தீயவையா என்பது கூட தெரியாமல் நம்மிடம் சில நடவடிக்கைகள் இருக்கும் . அவற்றில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பழக்கங்கள் இருந்தால், அதனை உடனடியாக மாற்றிக்கொள்வது நமக்கு நன்மை தரும்
இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? மனிதரகளின் 7 self destructive habits
இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? மனிதரகளின் 7 self destructive habits canva
Published on

எந்த ஒரு செயலையும் தொடர்ந்து 21 நாட்கள் செய்துவந்தால், அது நமது அன்றாட பழக்கமாகிவிடும் என பலரும் கூறி கேட்டிருப்போம். அப்படி கான்சியஸாக 21 நாட்கள் கணக்கு எல்லாம் வைத்திருக்காவிட்டாலும், நம் பழக்கம் இதுதான் என்பதை நாம் ஏதாவது ஒரு தருணத்தில் கவனித்திருப்போம்.

உதாரணத்துக்கு சிலர் நிச்சயம் நாளில் இரு முறை பல் துலக்குவார்கள், வாக்கிங் செல்வார்கள், உடற்பயிற்சி மேற்கொள்வார்கள்.

சிலருக்கு யோசிக்கும் போது நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும், புத்தகம் வாசிப்பது, சிகரெட் பிடிப்பது, மது, சூதாட்டம். இது போல, நம்மிடம் இருக்கும் பழக்கங்கள் நல்லவையா தீயவையா என்பது கூட தெரியாமல் நம்மிடம் சில நடவடிக்கைகள் இருக்கும் .

அவற்றில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பழக்கங்கள் இருந்தால், அதனை உடனடியாக மாற்றிக்கொள்வது நமக்கு நன்மை தரும்

பீபுள் ப்ளீசிங்

சிலருக்கு இயற்கையாகவே நம் எதிர் இருப்பவரை கவர வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அல்லது அடுத்தவர் புண்படக் கூடாது என்ற பயம் இருக்கும்.

இது அவர்களின் கண்களில் நாம் நல்லவராக தெரியவேண்டும் என்பதற்காக.

உண்மையில் இது ஒரு தீய பழக்கம். மற்றவர் நம்மை பற்றி நினைப்பதை வைத்து நம்மை நாமே எடைப்போட்டுக் கொண்டிருந்தால், நம் வாழ்க்கையை சந்தோஷமாக எப்போது வாழ்வது?

காலை எழுந்தவுடன் மொபைல்

இன்று பலரிடம் இருக்கும் ஒரு பழக்கம் இது. காலை விழிப்பதே அந்த மொபைலிடம் தான். அலாரம் அனைப்பது தொடங்கி, வந்திருக்கும் செய்திகளை பார்ப்பது, அன்றைய தினத்தின் செய்திகளை அறிவது என எல்லாத்துக்கும் ஃபோன்.

இந்த பழக்கம் நம் கண்கள், மூளையை பாதிக்கும். மேலும், நீண்ட நேரம் சோம்பலாக மெத்தையிலேயே படுத்திருப்போம். உடல்நலம் கெடுவதோடு, நம் பணியும் கெடும்

இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? மனிதரகளின் 7 self destructive habits
மொபைலில் அதிக நேரம் செலவழிப்பவரா நீங்கள்? குறைக்க 7 டிப்ஸ்

ஸ்க்ராலிங்

நாள் முழுக்க மொபைலில் நேரம் செலவழிப்பது, சிறிய இடைவேலை கிடைத்தாலும் மொபைலை ஸ்க்ரால் செய்வது உங்கள் பழக்கமாக இருந்தால் அதனை மாற்றிக்கொள்ளுங்கள்.

குறிப்பாக தற்போது வரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் நம்மை அதிவேகமாக அடிமைப்படுத்தி விடுகின்றன.

இதனால் நம் கண்கள், மூளை பாதிக்கும்

இரவில் தாமதமாக உறங்குவது

வேலை, வெளியில் சென்றுவருவது, தாமதமாக சாப்பிடுவது என ஏதாவது ஒரு காரணத்திற்காக நாம் தாமதமாக உறங்குகிறோம். இதனால், சராசரியாக நம் உடலுக்கு கிடைக்கவேண்டிய ஓய்வும், நித்திரையும் கிடைப்பதில்லை.

குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க பாருங்க!

இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? மனிதரகளின் 7 self destructive habits
பகலில் குட்டி தூக்கம் போடுபவரா நீங்கள்? இதன் பலன்கள் என்ன - புதிய ஆய்வு சொல்வதென்ன?

சாக்கு சொல்வது

நம் நடத்தைகள், நடவடிக்கைகளை எப்போதும் யாருக்கும் விளக்க அவசியமில்லை. இதுவும் அடுத்தவரை புண்படுத்திவிடக் கூடது என்ற அச்சத்தின் வெளிப்பாடு தான்.

நாம் செய்தது தவறாக இருந்தாலும் சரி, நிஜத்தை பேசினால் அதிக பாதிப்புகள் இருக்காது. அது நம்மை நேர்மையான, நேர்மறையான, தைரியமான நபராகவும் சித்தரிக்கும்

செயல் அல்ல சொல்

எப்போதும் என்னால் இதை செய்யமுடியும், அதை செய்ய முடியும் என்று வாயிலேயே வடை சுடுவதை விட, அமைதியாக ஒரு செயலை செய்துவிடுவது சாலச் சிறந்தது.

ஆனால், சிலரின் செயலை விட சொல்லே அங்கு அதிகமாக இடம்பெற்றிருக்கும்

இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? மனிதரகளின் 7 self destructive habits
தனிமையில் இனிமை காண்பவரா நீங்கள்? தனிமை விரும்பிகளின் 7 குணங்கள் இது தான்!

எதிர்மறைவாதிகள்

நாம் எந்த ஒரு விஷயத்தை சொன்னாலும், செய்தாலும் அதிலுள்ள கெட்ட விஷயங்களை எதிர்மறையாக நடக்கூடியவைகளை சொல்லும் ஒரு நெகட்டிவ் வைப் நம்முடன் இருக்கும். (மனிதர்கள் தான்!)

அந்த நெகட்டிவ் வைப்பை கொஞ்சம் தள்ளியே வையுங்க பாஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com