தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் பிரியாணி வகைகள் குறித்து தெரியுமா?

ஹைதரபாத், லக்நவ், கொல்கத்தா, திண்டுக்கல், ஆம்புர், தலசேரி, மலபார், மெமோனி, சிந்தி எனச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் 7 வகையான பிரியாணி குறித்து தான் இங்கு தெரிந்துகொள்ள போகிறோம்.
7 types of Biryani famous in South India
7 types of Biryani famous in South India Twitter
Published on

பிரியாணி பிடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் உணவும் அதிகப் பேரால் விரும்பப்படும் உணவு, பிரியாணி.

முன்பெல்லாம் திருமணம், விருந்து நிகழ்வுகளின் உணவாக இருந்த பிரியாணி இன்று சிலருக்கு அன்றாட உணவாகி விட்டது. வாரம் ஒரு முறை பிரியாணி உண்ணாதார் அரிது என்றும் சொல்லலாம். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு சுவையில் பிரியாணியைத் தயாரிக்கிறார்கள்.

ஹைதராபாத் , லக்நவ், கொல்கத்தா, திண்டுக்கல், ஆம்புர், தலசேரி, மலபார், மெமோனி, சிந்தி எனச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் 7 வகையான பிரியாணி குறித்து தான் இங்கு தெரிந்துகொள்ள போகிறோம்.

ஹைதராபாத் பிரியாணி

ஹைதராபாத் நகரத்திற்கு கூடுதல் பெருமை சேர்கிறது இந்த ஹைதராபாத் பிரியாணி. இந்த பிரியாணி பாசுமதி அரிசி, மசாலாப் பொருட்கள் கொண்டு செய்யப்படுகிறது.

செட்டிநாடு பிரியாணி

காரைக்குடி செட்டிநாடு உணவுக்கு மிகவும் பிரபலமான இடம் எனலாம். செட்டிநாடு பிரியாணி அதன் சுவையால் தனித்துவம் பெறுகிறது. இது கருப்பு மிளகு மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

மலபார் பிரியாணி

இந்த உணவு பொதுவாக கேரள மாநிலத்தில், குறிப்பாக மலபார் பகுதியில் தயாரிக்கப்படுகிறது, எனவே இந்த பெயர். இது பெரும்பாலும் ஜீரகசாலா அரிசி என்று அழைக்கப்படும் மணம் கொண்ட குறுகிய தானிய அரிசியுடன் தயாரிக்கப்படுகிறது. பிரியாணி மசாலா மற்றும் தேங்காய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

ஆம்பூர் பிரியாணி

ஆம்பூர் பிரியாணி என்பது வேலூர் மாவட்டம், ஆம்பூரில் தயாரிக்கப்படும் சுவையான பிரியாணியாகும். இந்தப் பிரியாணி ஆம்பூருக்குத் தனிச் சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

தலசேரி பிரியாணி

தலச்சேரி என்பது கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் மலபார் கடற்கரையில் உள்ள ஒரு நகரம். அதனால் பிரியாணி இந்த இடத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.பாஸ்மதி அரிசியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, குறுகிய தானிய வாசனையுள்ள 'ஜீரா ரைஸ்' இந்த பிரியாணிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த வகை அரிசி இந்தியாவின் தென் பகுதியில் மிகவும் பிரபலம்.

பட்கலி பிரியாணி

கர்நாடகாவின் அனைத்து பகுதிகளிலும் ருசிக்கப்படுகிறது இந்த பட்கலி பிரியாணி.

7 types of Biryani famous in South India
பிரியாணி தவிர ஹைதராபாத்துல வேறு என்ன ஸ்பெஷல் இருக்கு? |Wow Facts

திண்டுக்கல் பிரியாணி

காரமான பிரியாணிக்கு பெயர் பெற்ற நகரம் திண்டுக்கல். சீரக சம்பா அரிசியை கொண்டு இங்கு பிரியாணி தயாரிக்கப்படுகிறது.

7 types of Biryani famous in South India
Biryani : 'ஈரான் டூ இந்தியா' பிரியாணி கடந்து வந்த பாதை - ஓர் ஆச்சரிய வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com